Advertisment

ராங்கால் இப்போதைக்கு இது தான்! காங்கிரஸிடம் தி.மு.க. சொன்ன கணக்கு! முதல் டார்கெட் நேரு அடுத்தடுத்து...?

rang

"ஹலோ தலைவரே… தி.மு.க. கூட்டணி யில் காங்கிரஸ் நீடிக்குமா? வெளியேறுமா? என்று சில மாதங்களாக நீடித்துவந்த பர பரப்புகளுக்குத்  தீர்வு கிடைச் சிருக்கு.''” 

Advertisment

"அப்படியா சொல்ற… கொஞ்சம் விவரமா சொல்லு.''”

"கடந்த வாரம் சென்னை வந்த காங்கிரசின் கே.சி. வேணுகோபால், ஸ்டாலினைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், அந்த சந்திப்பு நடக்கவில்லை. மறுநாள், டெல்லிக்குத் திரும்பிய வேணுகோபால், ராகுலைச் சந்தித்து சென்னையில் நடந்த சந்திப்பை பத்தி விவரிச்சிருக்கிறாரு.  இந்த சமயத்தில்தான், சோனியாகாந்தியை தொடர்புகொண்டு ஸ்டாலின் பேசியிருக் கிறார். அதேபோல சோனியாகிட்ட மல்லிகார்ஜுன கார்கேயும் விவாதிச்சாரு. இதனையடுத்து, ராகுலிடம் பேசிய சோனியா, "தி.மு.க.வுடன்தான் கூட்டணி, உங்கள் முடிவும் அதுவாக இருக்கட்டும்' என அட்வைஸ் செய்ய, இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒருகட்டத் தில், "குறைந்தபட்சம் நம் எதிர்பார்ப்பு களையாவது தி.மு.க. நிறைவேத்தணும். அப்படி நடந்தால் கூட்டணியை கண்டினியூ பண்ணுவதில் சிக்கல் இல்லை' என சோனியாவிடம் சொல்லியிருக்கிறார். ஆட்சியில் பங்கில்லைன்னு சொல்லிட் டாங்க. அட்லீஸ்ட் அதிக இடங்களையும், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளையும் தருவதற்கு தி.மு.க. சம்மதிக்கவேண்டும் என்பதுதான் ராகுலின் எதிர்பார்ப்பு. இந்த முடிவுக்குப் பிறகுதான் ஸ்டாலினைச் சந்திக்க கே.சி.வேணுகோபாலை அனுப்பிவெச்சாரு ராகுல்காந்தி. 

Advertisment

"ம்...''

"ஸ்டாலினை அவரது இல்லத்தில் 22-ஆம் தேதி இரவு சந்திச்சாரு வேணுகோபால். "41 தொகுதிகள் முன்வைக்கப்பட்டு இறுதியில் 35 தொகுதிகளும், 2 ராஜ்யசபா சீட்டும் வேண்டும், நாங்கள் எதிர்பார்க்கிற தொகுதிகளை மறுக்கக்கூடாது' என வேணுகோபால் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், "நம் கூட்டணிக்கு புதிதாக தே.மு.தி.க. வந்திருக்கு; கமல்ஹாசன் கட்சிக்கும் சீட் ஒதுக்கவேண்டும். அதனால், காங்கிரசுக்கு அந்தளவுக்கு சீட் தருவதில் சிரமம் இருக்கிறது. 27 சீட்டும் 1 ராஜ்யசபா சீட்டும் ஒதுக்குகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் எதிர்பார்ப்பது 100 சதவிகிதம் நிறைவேறும்'னு ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். சந்திப்பில் நடந்ததை ராகுலுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு 23-ஆம் தேதி காலையில வேணுகோபால் கேரளாவுக்கு கிளம்பிப் போயிட்டாரு. இருந்தாலும் காங்கிரசை பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. அழைக்கும்போதுதான் கூட்டணி 100 சதவீதம் உறுதியாகும்.''” 

"ராஜ்யசபா சீட் கேட்டு அ.தி.மு.க.வுல ஒரே மல்லுக்கட்டா இருக்காமே?''” 

"ஆமாங்க தலைவரே… அ.தி.மு.க.விடம் 2 ராஜ்யசபா சீட் இருக்கு. இந்தமுறை தம்பிதுரைக்கு

"ஆமாங்க தலைவரே… அ.தி.மு.க.விடம் 2 ராஜ்யசபா சீட் இருக்கு. இந்தமுறை தம்பிதுரைக்கு சீட் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்படி தம்பிதுரையிடம் சொல்லிட்டாராம் எடப்பாடி. 1 சீட்டை செம்மலைக்கு ஒதுக்கலாம்னு எடப்பாடி நினைக்கிறாராம். மீதமுள்ள 1 ராஜ்ய சபா சீட்டைக் கைப்பற்ற ஜி.கே.வாசன், அன்புமணி, தினகரன் எல்லோரும் மல்லுக்கட்டுறாங்க. யாருக்கு ஒதுக்குறதுன்னு இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி தவிக்கிறாரு.''” 

"வைத்திலிங்கத்துக்கு தி.மு.க.வுல சீட் ஒதுக்கப்படுகிறதா என ரகசியமா வேவு பார்த்துக்கிட்டு இருக்கிறாராமே எடப்பாடி பழனிச்சாமி?''” 

"அ.தி.மு.க.வுக்கு வந்துடுறேன்னு எடப்பாடிக்கு வாக்குக் கொடுத்திருந்தாரு வைத்திலிங்கம். ஆனா, திடீரென்று தி.மு.க.வுல இணைஞ்சிட்டாரு. இதை எடப்பாடியால் ஜீரணிக்கமுடியலை. நம்பிக்கைத் துரோகம்னு சீனியர்களிடம் எடப்பாடி விமர்சிச்சாரு. இந்த நிலையில, வைத்திலிங்கத்துக்கு தி.மு.க.வுல சீட் கொடுக்கப்பட்டால், அவர் மீதுள்ள அமலாக்கத்துறை வழக்கிற்கு உயிர்கொடுத்து எலெக்ஷன் நேரத்தில் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தச் சொல்லி அமித்ஷாவிடம் வலியுறுத்துவது எடப்பாடி திட்டமாம்.''  

"புதிய தமிழகம் கிருஷ்ணசாமி டிமாண்டை அதிகமாக்கியிருக்கிறாராமே?''”     

"ஸ்ரீவில்லிபுத்தூர், நிலக்கோட்டை என இரு சட்டமன்றத் தொகுதிகள், ரூ.50 கோடி தேர்தல் நிதி என மருத்துவர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடன் கடந்த 'செப்டம்பர்' மாதத்திலேயே கூட்டணி எதிர்பார்ப்பை முடித்துவைத்தது அ.தி.மு.க. இந்நிலையில், கூட்டணியிலிருந்த தே.மு.தி.க. வெளியேற "டிமாண்டை' அதிகரித்துள்ளார் கிருஷ்ணசாமி. அதாவது, தேர்தல் நிதியாக ரூ.75 கோடி வேண்டுமென்றும், அதற்கு உடன்பட்டால் மட்டுமே பிரதமர் மேடையில் கூட்டணித் தலைவராக மேடையேறுவேன் என்றிருக்கிறாராம். அதேசமயம், புதிய தமிழகம் வேட்பாளர் நிற்கும் இடங்களில் அவர்களை எதிர்த்து புதிய தமிழகத்திலிருந்து வெளியேறிய முன்னாள் புதிய தமிழக நிர்வாகிகளை வேட்பாளராக நிறுத்தணும்னு தி.மு.க.வும் ஒரு கணக்கை போட்டுவச்சிருக்குது.''” 

"ஜான்பாண்டியன் போட்டியிடும் தொகுதியை மாற்றலாமான்னு எடப்பாடி யோசிக்கிறாராமே?''”

"ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி என ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட நிலையில், ஜான்பாண்டியனே தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என பேச்சு அடிபட்டது. அவரும் அதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். ஆனால், ஜான்பாண்டியன் அங்கு போட்டியிட்டால் சாதிரீதியாக பிரச்சனை ஏற்பட்டு தென்மாவட்டத்திலுள்ள மற்றைய சட்டமன்றத் தொகுதிகளில் முக்குலத்து வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கிறது என ஆந்திராவைச் சேர்ந்த தனியார் சர்வே தகவல் தர, எடப்பாடி பழனிச்சாமி யோசிக்க ஆரம்பித் திருக்கிறார். இந்நிலையில், "தலைவரே.. மலையின் மேல்பகுதி பட்டியலின மக்களும், கீழ்ப்பகுதியில் கவுண்டர் சமூக மக்களும் உள்ளடக்கிய வாக்கு வங்கியான வால்பாறையை ஜான்பாண்டியனுக்கு ஒதுக்கிவிடுங்கள். ஜெயிக்கவைப்பது என்னுடைய பொறுப்பு' என்றிருக்கிறாராம் வேலுமணி.''”

"தேர்தல் கோரிக்கையா கிறிஸ்தவ மக்கள் ஏதோ கோரிக்கை அனுப்பியிருக்காங்களாமே?''” 

"முக்கியமான தினங்கள்ல தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடிவைக்கும். அதேபோல, புனித வெள்ளி அன்று மதுபானக் கடைகளை மூடவேண்டும்னு தூத்துக்குடி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடற்கரையோரக் கிராமங்களிலுள்ள மீனவ மக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையுடன் ஒவ்வொரு கடலோர மீனவ கிராமங்களிலும், சர்ச்சிலும் பதாகைகளைத் தொங்கவிட்டிருக்காங்க. இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கவேண்டுமென்பது கிறிஸ்தவ மீனவ மக்களின் விருப்பமாம்.’''

"ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அடிமனைப் பிரச்சனை அரசியலா மாறுதே என்ன விவரம்?''”

"திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், பல தலைமுறைகளாக வீடுகட்டி குடியிருக்கும், 41 பேர், தங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா வழங்கவேண்டுமென 2007-ல் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நீதிபதி சுவாமிநாதன், 'ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் குடியிருப்போரின் அடிமனை கள், அரங்கனுக்கே சொந்தம். அதில் வசிப்போர் அடிமனைக்கு சொந்தம் கொண்டாடமுடியாது. அடிமனைகளில் வீடு கட்டியோர், 3 மாதங்களில் வீடுகளை காலிசெய்து, கோவில் நிர்வாகத்திடம் இடத்தை ஒப்படைக்கவேண்டும். இந்த இடங்களுக்கு கடந்த காலங்களில் வழங்கிய பட்டாக்களையும் ரத்து செய்யவேண்டும்' என, கூறியுள்ளார். இதுகுறித்து, ஸ்ரீரங்கம் நகர் நலச்சங்க தலைவரான மோகன்ராம், "ஸ்ரீரங்கம் கோவில் நிலம், 330 ஏக்கர் பரப்பு உள்ளது. இதில், 5,000 பேர் வீடு கட்டி, பல தலைமுறையாக வசிக்கின்றனர். கடந்த, 1963-ல் இனாம்தார் நில ஒழிப்புச் சட்டம் வந்தபின், 1969ல் தமிழக அரசால், இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதன்பின், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், அடிமனை கோவிலுக்கும், கட்டடம் கட்டியோருக்கும் சொந்தம் என, தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில்தான், 41 பேர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் திருச்சி நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்தது எப்படி என்று தெரியவில்லை. இப்பிரச்னையில் மாவட்டத்தின் இரு அமைச்சர்களும், தமிழக அரசும் தலையிட்டால்தான், சுமூக தீர்வு கிடைக்கும். இல்லாவிட்டால், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்'’என்கிறார் அவர்.''”

"தேர்தல் நெருக்கத்துல நேரு விவகாரம் சூடுபிடிச்சிருக்கே என்ன விவரம்?''”

rang1

"நகராட்சி நிர்வாகத்துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பா அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கே.என். நேருவும், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அண்ணா அறிவாலயத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி, "அமைச்சர் கே.என்.நேரு மீது சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்த தாகச் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு சி.பி.ஐ. வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. சி.பி.ஐ. வழக்கு ரத்துசெய்யப் பட்டதால் அமலாக்கத் துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை யென்றாலும், அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர். கட்சியின் முதன்மைச் செயலாளர் என்றெல்லாம் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விரிவான விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்றுவருகிறது.'' 

"ம்...''

"அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கெனவே விசாரணை நடத்திக் கொண்டி ருப்பதைக் கருத்தில்கொண்டு, முதல் தகவலறிக் கையைப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல, தி.மு.க.வின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கும். பா.ஜ.க. அரசு சி.பி.ஐ., அமலாக்கத்துறையை அரசியல்ரீதியாகப் பயன் படுத்துகிறது. இவையனைத்தும் தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.வின் இமேஜைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள். அமைச்சர் கே.என். நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட் டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் ஆலோ சனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அமைச்சர் நேரு இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பயப்படமாட்டார்'’என்று தெரிவித்தார். கே.என்.நேருவும் “"இதனால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை, ஏற்கனவே இதுகுறித்து தமிழக முதல்வர் முழு விசாரணையை துவக்கி முழு அறிக்கையும் தாக்கல்செய்யச் சொல்லியிருக்கிறார். அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை, இதுகுறித்து உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொண்டு நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்'’என்றிருக்கிறார்.''”

"தி.மு.க.வில் யாரையெல்லாம் குறிவைப்பதென ஒரு பட்டியல் தயாரா வெச்சிருக்காமே பா.ஜ.க. கூட்டணி?''”

"அமைச்சர் கே.என்.நேருவின் விவகாரத்தை எப்படி சட்டரீதியாக சந்திப்பதென ஆலோ சித்துக்கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர். அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பதை சட்ட வல்லுநர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க. இதைவைத்து உச்சநீதிமன்றத்துக்குச் செல்லலாமா என்ற யோசனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தலில் நமக்கு சாதகமான நிலை ஏற்படறதுக்காக, அடுத்தடுத்து யாரையாவது அட்டாக் செய்யுங்கள் என எடப்பாடி பா.ஜ.க.விடம் யோசனை தெரிவித் திருக்கிறார். அமித்ஷாவின் வருகைக்குப் பின் இந்த ஆப ரேஷேன் வேகமெடுக்கும் என் கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர். அமலாக்கத்துறை மூலம் முக்கியமான தி.மு.க. பிரமுகர்களை கைவைப்பதற் காகன வேலைகள் நடந்துகொண்டிருக் கிறது.''

"திருச்செங்கோடு தொகுதியை குறிவச்சு த.வெ.க. அருண்ராஜ் செயல்படுறாரே என்ன விஷயம்?''

"அருண்ராஜ், திருச்செங்கோட்டுல ரூம் போட்டு தங்கி, தொகுதியை குறிவச்சு வேலை பார்த்துக்கிட்டிக்காரு, அதுக்காக அங்கேயே வீடு ஒண்ணும் பார்த்துக்கிட்டிருக்காராம். இவரு திருச்செங்கோட்ட குறிவச்சதுக்கு முக்கிய காரணம், "கிறிஸ்டி' நிறுவனர் இவருக்கு மாமா முறையாம். தொகுதிச் செலவு முழுசையும் நாங்க பாத்துக்கிறோம்னு அவங்க தரப்புல வாக்கு குடுத்திருக்காங்களாம். அந்த பின்னணியிலதான் அவரு களத்துல இறங்கி வேலை பார்த்துக் கிட்டிருக்காரு.''

"சரி... நானும் ஒரு விஷயம் சொல்றேன். தி.மு.க. பக்கம் வர்றதுக்கான சிக்னல் காட்டினாலும் இன்னும் தி.மு.க.வுல சேராமலே ஓ.பி.எஸ். தாமதம் பண்ணிக்கிட்டிருக்கார் அதுக்குக் காரணம் ஜெ.வின் பிறந்தநாள்தானாம். தி.மு.க.வில் சேர்ந்துவிட்டு, ஜெ.வின் சமாதிக்குப் போனால் அ.தி.மு.க. தொண்டர்கள் முன்பு நன்றாக இருக்காது என்பதால் ஜெ.வின் பிறந்தநாளுக்குப் பின்பு தி.மு.க.வில் சேரத் திட்டமிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத், ஓ.பி.எஸ்.ஸைவிட அன்பில் மகேஸோடு ஒன்றாக உணவருந்தும் அளவுக்கு மிகநெருக்கமாக இருக்கிறார். ஓ.பி.எஸ். தி.மு.க. பக்கம் வருவது உறுதிதானாம்.''

nkn250226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe