கடந்த தேர்தலில் தமிழ் நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற கலைஞரின் மரணத்தால் இடைத்தேர்தலை சந்திக்கிறது திருவாரூர் தொகுதி.
அதே நேரத்தில், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க் களின் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு ஏதுமில்லை. ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.
தேர்தல் தேதி இப்போது தான் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மூன்று மாதங்களுக்கு முன்பே, திருவாரூர் தொகுதி முழுக்க, சுவர் விளம்பரங்களை தினகர னின் அ.ம.மு.க.வினர் ஜரூர்படுத் தினர். தி.மு.க.வின் தலைவராக பொறுப்பேற்ற பின் திருக்குவளை வந்த மு.க.ஸ்டாலின், இடைத் தேர்தல் களத்தில் கட்சியினர் பணியாற்றுவது குறித்து ஆலோ சனை நடத்தினார்.
ஆளும் கட்சி என்ற கோதாவில் மூன்றாவதாக களத்தில் குதித்தது அ.தி.மு.க. மாவட்ட அமைச்சர் காமராஜ், எட்டு முறைக்கு மேல் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தைக் கூட்டி உற்சாகப்படுத்தியதோடு, பூத் கமிட்டியினரையும் நன்றாகக் கவனித்தார்.
முக்கியக் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டிக் கொண்டி ருந்த போதுதான் கஜா புயல் தாக்கி, டெல்டா மாவட்டங் களையே சின்னா பின்னமாக் கியது. பேரழிவிலிருந்து மக்கள் மீள முடியாமல் இருக்கும் இந்த நேரத்தில் இடைத் தேர் தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்களின் மனநிலை அறிந்து கவனமுடன் களத்தில் இறங்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எல்லாக் கட்சிகளிலும் எதிரொலிக்கிறது.
2011 சட்டமன்றத் தேர்தலின் போது, ""திருவாரூர் நகரத்திற்குள் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளி, மேம்பாலம் அமைப் பேன்'' என ஏகப்பட்ட வாக் குறுதிகளை அள்ளி வீசினார் ஜெ. அது எதுவுமே செயல் பாட்டுக்கு வராததால், ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக் கிறார்கள் தொகுதிவாசிகள். அதேபோல் இப்போது கூட கஜா புயல் நிவாரணம் வழங்கு வதில், ஆளும் கட்சியினரின் பாகுபாடுகளைப் பார்த்து கொந்தளித்துக் கிடக்கிறார்கள் மக்கள்.
திருவாரூர் நகரம் தி.மு.க. வின் செல்வாக்கான பகுதி என்பதால் அந்த ஓட்டுகளைக் குறி வைத்து, அனைத்து வார்டுகளுக் கும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார் அமைச்சர் காமராஜ். இந்த விவகாரம், தொகுதியின் கிராமப்புறங்களில் வில்லங்கமாய் வெடித்திருக்கிறது. இதை எப்படி சமாளிப்பது என்ற யோசனை யில் இருக்கிறது ஆளும் தரப்பு.
கலைஞர் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் நின்றால் நன்றாக இருக்கும் என்பது தொகுதி மக்கள் மற்றும் உ.பி.க் களின் எதிர்பார்ப்பு. மா.செ. பூண்டி கலைவாணனோ, இந்த முறை எப்படியும் சீட்டைக் கைப்பற்றிவிட வேண்டும் என கோதாவில் குதித்துள்ளார். அ.ம. மு.க.வைப் பொறுத்த வரை குட வாசல் ராஜேந்திரன், கடலைக் கடை பாண்டி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் வேட்பாளர் ரேசில் இருக்கிறார்கள். அ.தி. மு.க.வைப் பொறுத்த வரை, தனது கைப்பிடிக்குள் இருக்கும் கலியபெருமாளுக்கு சீட் வாங்கி கொடுக்கும் முடிவில் இருக்கிறார் அமைச்சர் காமராஜ்.
-செல்வகுமார்