திருவண்ணாமலை தொகுதியின் சிட்டிங் எம்.பி. சி.என்.அண்ணாதுரையையே மீண்டும் வேட்பாளராக்கியுள் ளது தி.மு.க. தலைமை. வேட்பாளர் மீது பொதுமக்க ளிடம் பெரியளவில் விமர் சனம் இல்லை. பிரச்சாரக் களத்தில், "ஏ.டி.ஐ.பி. திட்டத் தின்கீழ் திருவண்ணாமலை தொகுதியில் மூவாயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தந்துள்ளேன், ஜவ்வாது மலையிலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங் கள் தொலைத்தொடர்பு வசதி பெற, பி.எஸ்.என்.எல். மூலம் 99 செல்போன் கோபுரங்கள் அமைத்துள் ளேன். பிரதமரின் மருத்துவ உதவித் திட்டத்தின்கீழ், 203 பேருக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய்துள்ளேன்'' எனத் தான் செய்த பணி களைச்
சொல்லி வாக்குக் கேட்பது ப்ளஸ்! மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து, பெண்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காத பெண்கள், தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனால் இங்கு பிரச்சாரத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இருவரும், விடுபட்ட அனை வருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என வாக்குறுதி தந்தது பெண்களிடம் நம் பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. மா.செ.வும், அமைச்சருமான எ.வ. வேலு, அனைத்து நிர்வாகிகளையும் களப்பணி யில் இறங்கும்படி வேகப்படுத்திவருகிறார்.
அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை ஒன்றிய கழக செயலாளர் கலியபெருமாள் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். முன் னாள் அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி. தேர்தலில் நிற்கமாட்டேன் என்றதால் கலியபெருமாள் வேட்பாளராக்கப்பட்டார். திரு வண்ணாமலை தொகுதிக்குட்பட்ட திரு வண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகள் கிழக்கு மா.செ. ராமச்சந்திரன் கட்டுப்பாட்டி லும், கலசப்பாக்கம், செங்கம் தொகுதிகள் மேற்கு மா.செ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கட்டுப் பாட்டிலும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிகள், திருப்பத்தூர் மா.செ. கே.சி. வீரமணி கட்டுப்பாட்டிலும் உள்ளன. மா.செ. களுக்குள் ஒற்றுமையில்லாததால் தேர்தல் வேலையில் சுணக்கமாக இருக்கிறார்கள். கலியபெருமாளுக்கு வன்னியர் சங்கம், பா.ம.க.வே மறைமுகமாக ஆதரவுக்கரம் நீட்டியதை யடுத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் தற்போது வேகம் காட்டுகின்றனர். தி.மு.க.வில் முதல்கட்ட தேர்தல் பணிக்கு பூத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் தந்துள்ளனர். அ.தி.மு.க.வில் 2500 மட்டுமே தந்துள்ளனர். இதுவும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு செய லாளர் அஸ்வத்தாமன் பா.ஜ.க. வேட்பாள ராகக் களமிறங்கியுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய பா.ம.க., த.மா.கா. நிர்வாகிகளுடன் ஊர்வலமாக பந்தாவாக வந்தவர்களிடம், அதன்பின் தேர்தல் சுறுசுறுப்பே சுத்தமாக இல்லை. இவரது கல்லூரியில் பயின்ற பட்டியலின மாணவிகளிடம் சாதிரீதியாக நடந்துகொண்டார் என்கிற புகாரை தூசு தட்டிப் பரப்புவது பா.ஜ.க.வினரை அதிர்ச்சி யடையச் செய்துள்ளது. மாவட்டத்திலுள்ள பா.ஜ.க. நிர்வாகிகளும் சரி, பா.ம.க.வினரும் சரி, ஒட்டாமலேயே வேலை செய்கின்றனர். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். இளம் வாக் காளர்கள், சீமானின் பிரச்சாரத்தையே நம்பி யுள்ளனர். இச்சூழலில், தி.மு.க. அடித்து ஆட, அதற்கடுத்த இடத்தில் அ.தி.மு.க. வருகிறது.