திருவள்ளூர்
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி, புறநகரில் கொடிகட்டிப் பறக்கும் ரியல் எஸ்டேட் தொழில், பெருவாரியான விவசாயிகளைக் கொண்ட தொகுதி.
தொகுதியைப் பொருத்தவரை பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிகம், வன்னியர்கள், முதலியார்கள், நாயுடு சமூகத்தை சார்ந்தவர்களுக்கும் கணிசமான வாக்குகள் உண்டு. முதலியார் அல்லது நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்களே இத்தொகுதியில் அதிகம் வெற்றிபெற்றுள்ளனர்.
தி.மு.க. 7 முறை வெற்றிபெற்றுள்ளது, அ.தி.மு.க. 5 முறை வெற்றிபெற்றுள்ளது, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க.வின் வி.ஜி.ராஜேந்திரன், இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்று தற்போது மூன்றாவது முறை வாய்ப்பை எதிர் பார்த்துள்ளார். இவர் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். மருத்துவக் கல்லூரி உரிமையாளரும் தொழிலதிபருமான இவரது பூர்வீகம் சென்னை அண்ணா நகர். தற்போது கோட்டூர்புரத்தில் குடிபுகுந்துள்ளார். தொகுதி மக்கள் இவரை எளிதில் அணுக முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது.
இவரைத் தொடர்ந்து தி.மு.க.வின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள வி.சி. ஆர்.குமரன் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். தொழி லதிபர், நிலக்கிழார். கடந்த 2021-ஆம் வருட தேர்தலில் சீட்டுகேட்டு கிடைக்காத நிலையில், வரும் தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களத்தில் நிற்கிறார்.
தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் கடம்பத்தூர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஸ்வரன் ஆகி யோரும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கின்றனர்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கு போட்டி யாரும் இல்லை என்றே கூறலாம். அவருக்குப் போட்டியாக இருந்த திருவள்ளூர் நகரச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் தனக்கு வாய்ப்பே கிடைக்காது என்பதால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக பசுபதி களத்தில் நிற்கிறார்.
திருத்தணி
முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான சந்திரன், களப்பணியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வருவதால் முதல் வரின் குட் புக்கில் இருந்துவருகிறார். இவருக்குத் தான் மீண்டும் வாய்ப் புள்ளது என்று கழக உடன்பிறப்புகள் மத்தியில் பேசப்படு கிறது. இருந்தாலும் முன்னாள் மாவட்டச் செயலாளரான பூபதியும் வாய்ப்புக்காக காய் நகர்த்திவருகிறார். இருந்தபோதும் கட்சி வட்டாரம் மற்றும் மக்களிடையே சரியான அணுகுமுறை இல்லை என்ற புகார் இவர்மீது உள்ளது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினரான கோ.ஹரிக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்க உள்ளது. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு திருத்தணி கிடைத்தால், திருத்தணி ஹோட்டல் அதிபரான சக்கரவர்த்தி நாயுடுவுக்கு போட்டியிட விருப்பமுள்ளது..
அ.தி.மு.க.வின் முன்னாள் அரசு கொறடாவான நரசிம்மன் (சசிகலா அணி) விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து போட்டியிட சீட்டு கேட்கும் வாய்ப்புள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/thiruvaluvar1-2026-02-19-17-19-04.jpg)
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வான டி.ஜே.எஸ்.கோவிந்தராஜன் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறார். முதலியார் சமூகத்தை சேர்ந்த இவருக்கு கட்சியின் நிர்வாகி கள் ஆதரவளித்த நிலையில், தே.மு.தி.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த சி.எச்.சேகர் இந்த முறை தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று துணை முதல்வரின் அலுவலகம் எதிரே முகாம்போட்டு காய்நகர்த்தி வருகிறார். நாயுடு சமூகத்தைச் சேர்ந்த இவர், 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த கும்மிடிப்பூண்டி வேணு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அவரின் மகன் வேணு ஆனந்த் இந்த முறை சீட்டை எதிர்பார்த்து அறிவாலயத்தைத் சுற்றிவருகிறார். இதேபோல எல்லாபுரம் மூர்த்தி பல ஆண்டுகளாக தனக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட்டுக்காக தலைமையை அணுகிவருவதால் இந்த முறை வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறார்..
காங்கிரஸுடன் கூட்டணி உறுதியாகும்பட்சத்தில், தொடர்ந்து பொன்னேரி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதில் அதிருப்தியாக இருக்கும் உடன்பிறப்புகளைச் சமாதானப்படுத்த கும்மிடிப்பூண்டி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவுசெய்துள்ளது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கட்சி நிர்வாகியான சிவக்குமார், கோபால் நாயுடு ஆகிய கோஷ்டிகள் இவருக்கு சீட்டு வழங்கக்கூடாது என்றும் கடந்த முறை பா.ம.க.வுக்கு சீட்டு ஒதுக்கப்பட்ட போது இவர் பணி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டை எழுப்பிவருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடியிடம் இந்த பஞ்சாயத்து சென்ற நிலையில், கூட்டணிக்குதான் இந்தத் தொகுதி எனக் கூறப்பட்டுள்ளதாம்.
இதனால் தொகுதி பா.ம.க.வுக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பா.ம.க. சார்பில் பிரகாஷ் அல்லது சங்கர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக் கும். தமிழிசை சௌந்தரராஜனை கும்மிடிப்பூண்டிக்கு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக அறிவித்துள்ளதால், இந்த தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப் படும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி யுள்ளது. பா.ஜ.க. சார்பில் அ.தி.மு.க. வின் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமா ரின் மகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னேரி (தனி)
பெரும்பான்மையான பட்டியல் சமூக வாக்குகளை கொண்ட தொகுதி இது. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், அனல் மின்நிலையங்கள், சிப்காட் போன்ற தொழில் பூங்கா கொண்ட பரபரப்பான தொகுதி. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸின் துரை.சந்திரசேகர் வெற்றிபெற்றார். கடந்த சில ஆண்டு காலமாக இத்தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கவில்லை என்ற ஏக்கம் கட்சியினரிடையே உள்ளது. அதனால் இந்த தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க முடிவுசெய் துள்ளனர்.
மாவட்டப் பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் சீட்டு எதிர் பார்த்த நிலை யில், கட்சிக்கு எதிரான சில வேலைகளில் ஈடுபட் டது முதல்வரைக் கோபப் படுத்தியுள்ளது. இவரைத் தொடர்ந்து ஒன்றியச் செயலாள ரான உதயசூரியனுக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகின்றது. உதயநிதியுடன் நேரடித் தொடர்பி லிருக்கிறார். மாவட்ட துணைச்செயலாளரான துணை முதல்வரின் குட் புக்கிலுள்ள கதிரவனும் தொடர்ந்து இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப் புத் தேடி அறிவாலயத்தில் காய்நகர்த்தி வருகிறார். கட்சியின் சீனியராக உள்ள கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்புவாணன் இந்த முறையாவது சீட்டு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ளார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பலராமன் வாய்ப்பு கேட்ட நிலையில், அவரது உடல்நிலை சரியில்லாததால் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.வான பொன்ராஜ் வாய்ப்பை எதிர்பார்த்து எஸ்.பி.வேலுமணி மூலம் காய் நகர்த்திவருகிறார்.
ஆவடி
ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை, காவலர் பயிற்சிப் பள்ளி ஆகிய வற்றை உள்ளடக்கிய சென்னை நகருக்கு நெருக்கமான தொகுதி யான ஆவடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மு.நாசர் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தி.மு.க.வைப் பொறுத்தவரை நாசருக்கு உட்கட்சியில் போட்டியில்லை.
ஆவடி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. போல அ.தி.மு.க.விலும் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில சிறுபான்மைப் பிரிவு செயலாளருமான அப்துல் ரஹீம் ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு காய்நகர்த்தி வருகிறார். பா.ஜ.க., மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் சீட்டை உறுதிசெய்ய கமலாலயத்தில் முகாமிட்டுள்ளார்.
பூந்தமல்லி (தனி)
பூந்தமல்லி (தனி) சட்டமன்றத் தொகுதி பெருவாரியான பட்டியல் சமூக வாக்குகளைக் கொண்ட தொகுதி, இத்தொகுதியில் இரண்டா வது முறையாக ச.ம.உ.வாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள கிருஷ்ணசாமி மூன்றாவது முறை வாய்ப்பை எதிர்பார்க்கிறார். கட்சி நிர்வாகி களிடையே சரியான உடன்பாடில்லாததும், தொகுதி மக்களிடம் சரியான அணுகுமுறை இல்லையென்ற விமர்சனமும் குறுக்கே நிற்கிறது. தொகுதியை நன்கறிந்தவர் என்பது இவருக்கு சாதகம். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் நரேஷ்குமார், கடந்த 2011 முதல் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பைத் தேடி அறிவாலய கதவைத் தட்டிவருகிறவர். இந்தமுறை தனக்கு வாய்ப்பு கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடன், துணை முதல்வர் உதயநிதியின் தயவுடன் தற்போது சீட்டை எதிர்பார்த்துள்ளார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை முன் னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் மீண்டும் சீட்டை உறுதிசெய்ய எடப்பாடியிடம் துண்டைப் போட்டு வைத்துள்ளார். அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து அ.ம.மு.க.வுக்கு சென்ற தண்ணீர்த் தொட்டி ஏழுமலை, கூட்டணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று டி.டி.வி. தினகரனின் முகத்தைப் பார்க்கிறார். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்ட மணிமேகலை மீண்டும் களத்திலிறங்க வுள்ளார். த.வெ.க. சார்பில் ஜெகன், மதன் ஆகிய நிர்வாகி களிடையே போட்டி வலுக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t112415809z-arv-2026-02-07-16-54-11.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/thiruvaluvar-2026-02-19-17-18-53.jpg)