Advertisment

திருவாடானை: காங்கிரஸிற்கு "நோ'.. தி.மு.க.விற்கு "ஓ.கே'!

thiruvadanaii

"வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.. இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும்' என திருவண்ணாமலை மேடையிலேயே கோரிக்கை வைத்தார் தமிழ்நாட்டின் துணைமுதல்வரும், கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். அதனையே தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு, "திருவாடானை சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸிற்கு கொடுக்க வேண்டாம், எங்களுக்கே கொடுங்கள்' என தி.மு.க. தலைமைக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தி.மு.க.வினர்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் முக்குலத் தோர், யாதவர், இஸ்லாமியர், தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட சமூக வாக்குகளே வெற்றிக் கான வாய்ப்பில் பிரதானமாக இருக்கின்றது. இருப் பினும் அதனைத்தாண்டி கட்சியின் சின்னங்களே வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கின்றது. மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் திருவாடானையில் விவசாயமும், மீன்பிடித் தொழிலுமே பிரதானமாக இருக்கின்றது என்றாலும், தமிழ் நாட்டிலேயே பெரிய கண்மா யான ஆர்.எ

"வரும் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர் கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.. இளைஞர்களுக்கு கொடுக்க வேண்டும்' என திருவண்ணாமலை மேடையிலேயே கோரிக்கை வைத்தார் தமிழ்நாட்டின் துணைமுதல்வரும், கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். அதனையே தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டு, "திருவாடானை சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸிற்கு கொடுக்க வேண்டாம், எங்களுக்கே கொடுங்கள்' என தி.மு.க. தலைமைக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தி.மு.க.வினர்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் முக்குலத் தோர், யாதவர், இஸ்லாமியர், தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட சமூக வாக்குகளே வெற்றிக் கான வாய்ப்பில் பிரதானமாக இருக்கின்றது. இருப் பினும் அதனைத்தாண்டி கட்சியின் சின்னங்களே வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கின்றது. மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் திருவாடானையில் விவசாயமும், மீன்பிடித் தொழிலுமே பிரதானமாக இருக்கின்றது என்றாலும், தமிழ் நாட்டிலேயே பெரிய கண்மா யான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை முறைப்படி பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளூர் மக்கள் பிரதிநிதி மீது உண்டு. தொகுதியின் தலையாய பிரச்சனையாக  குடிநீர் தட்டுப்பாடு உள் ளது. அதைவிடக் கொடுமை, ரயிலை  கண்ட தில்லை இங்குள்ள மக்கள். இருப்பினும் ஓரியூர் தேவாலயம், தேவிபட்டிணம் நவபாசாணக் கோவில் ஆகியவை இங்குள்ளது தொகுதிக்கு பெருமையே.

Advertisment

"இது வி.ஐ.பி. தொகுதி. அதனைவிட அமைச் சர் தொகுதி. இது காங்கிரஸிற்கு ஒதுக்கப்படாமல் தி.மு.க.வே நேரடியாக போட்டியிட்டால் இது அமைச்சர் தொகுதியாக இருக்கும். சுப.தங்கவேலன், கருணாஸ் போன்றோர் வெற்றிபெற்ற இந்த தொகுதி, கடந்த முறை கூட்டணி அடிப்படையில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில்... கருமாணிக் கம் வெற்றிபெற்றார். எனினும், தாத்தா, மகன், பேரன் என்று தொகுதியை பிடித்து வைத்திருக் கிறார்கள். எந்தவொரு நல்லதும் மக்களுக்கு செய்வதில்லை என்கின்ற எதிர்ப்புக் குரல்கள் கடுமையாக இன்றுவரை இருந்துவருகின்றது. 

thiruvadanaii2

சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி ஆகிய கடற்கரைகளில்  மீன் இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும். கண்மாய்கள் தூர் வார வேண்டும் என்பதுதான் தலையாய வேண்டுகோள். ஆனால் நிறைவேற்றியதாக தெரியவில்லை. இதுவே தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டிருந்தால் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்'' என்றார் நம்புதாளையை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

இது இப்படியிருக்க, திருவாடானை சட்டமன் றத் தொகுதியில் போட்டி யிட அ.தி.மு.க. சார்பில்  லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமாரோஸ், தி.மு.க. சார்பாக அமைச் சர்   ராஜ கண்ணப்பன், தமிழக மக்கள் முன்னேற் றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் ஆர்வம்காட்டி வருகின்றனர். இதேவேளையில், துணை முதல்வரின் கோரிக்கையை நம்பிக்கையாக கொண்டு, கடந்த 15 வருடங்களாக தி.மு.க. இளைஞரணியில் பணியாற்றி வந்தவர் களும்  சட்டமன்ற  வேட்பாளராகக் களம்காண ஆர்வமாக உள்ளனர். இதில் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞரான கார்த்திகேய னுக்கு வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை குறிப்பு எழுதியது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு காங்கிரஸிற்கு நோ சொல்லிவிட்டு தி.மு.க.விற்கு ஓ.கே. கூறுவார்கள் என்பது தி.மு.க.வினரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

thiruvadanaii1

"பாரம்பரியமான விவசாயக் குடும்பம் வழக்கறிஞர் கார்த்திகேயனுடையது. அது போக அவரது அப்பா அரசுப் பள்ளியில் தலைமை யாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். உடன் பிறந்த சகோதரிகளும் தலைமை ஆசிரியர் பணியில் இருப்பவர்களே. அடிப்படை விவசாயம் மற்றும் கல்விக் கண் திறக்கும் ஆசிரியர் குடும்பம் என்ப தால் அவருடைய நன்னடத்தை எப்படி இருக்கும்... கூறவா வேண்டும்? திருவாடானையில் வழக்கறிஞர் என்றால் இவரை மட்டும்தான் இன்றளவும் குறிப் பிடுகின்றனர். வழக்கறிஞராக பணியாற்றும்போது கட்சியில் 2012 முதல் 2021 வரை இளைஞரணியின் மாவட்ட துணை அமைப்பாளராக பணியாற்றிய காலத்திலேயே தம்மை நம்பிவரும் கட்சிக்காரர் களுக்கு எண்ணற்ற உதவிகளைச் செய்துள்ளார். குறிப்பாக கல்வி, மருத்துவத்திற்காக செலவுசெய்து கட்சிக்காரர்களின் நம்பிக்கையை தக்க வைத்திருக் கின்றார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் இவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞராக பதவி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக சொந்த கட்சியிலுள்ள மா.செ. மற்றும் அமைச்சர் விரும்பாத போதுகூட, "இளைஞரணியி-ருந்து மக்களுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கின்றானே?' என நினைத்து கட்சியின் இளைஞரணி அமைப் பாளரும், துணைமுதல்வருமான உதயநிதி ஸ்டாலினே நேரடியாக அழைத்து ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞர் பதவியை கொடுத்திருக்கின்றார். அந்த பதவிக்கு இன்றுவரை உரித்தாக இருக்கின்றார். வழக்கிற்காக தன்னை நாடிவரும் கட்சிக்காரர்களை கைவிடுவதில்லை இவர். இன்றுவரை வழக்கிற்காக வருபவர்களுக்கு வழக்கினை நடத்தி, சொந்த செலவில் வழியனுப்பி வைக்கின்றார். மக்களின் நெருக்கத்திற்காக இயன்றவரை களத்தில் இருக்கின்றார். திருவாடானைத் தொகுதியில் தி.மு.க. சார்பாக கார்த்திகேயன் வேட்பாளராக களமிறங்கினால் வெற்றி நிச்சயம்'' என்கின்றனர் திருவாடானை தி.மு.க.வினர்.

இதேவேளையில், துணைமுதல்வரால் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அரசு வழக் கறிஞராக பொறுப்பேற்றதும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள முதன்மை மாவட்ட அரசு வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து அரசிற்கு நன்றி தெரிவித்ததால் துணைமுதல்வரின் குட்புக்கில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது!

-வேகா

nkn240126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe