திருப்பரங்குன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வா அமைப்பின ரால் தற்போது பற்றவைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் பின்னணி, ஆரம்பப்புள்ளி என அனைத்து விவரங்களையும் ஸ்கேன் செய்தபோது பல பகீர் தகவல்கள் கிடைத்தன.
"திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்புவதற்காக சுமார் 1 லட்சம் பேரைத் திரட்ட போட்ட திட்டம் 144 தடையால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கடைசியில் மூவாயிரத்துக்குள்ளே வர... கடைசி அரைமணி நேரத்தில் திரட்டியதற்கு பின்னணியில் இருந்தது இராம சீனிவாசன், ஹெச்.ராஜா, இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மார்வாடிகள் என்கிறார் மதநல்லிணக்க அமைதிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தீலீபன்.
கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் தேதி, வழக்கம்போல் தன் மகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இராஜ பாளையம், மல்லடிபட்டியை சேர்ந்த சையது அபுதாகீர் ஆடு, கோழியோடு மலைக்கு ஏற முயன்றதும் போலீசார் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டு, ஆய்வாளர் மதுரைவீரனுக்கு தகவல் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில் 20க்கும் மேற்பட்ட போலீசாருடன் வந்திறங்கிய மதுரைவீரன், "ஆட்டை இங்கேயே இறக்கிவைத்துவிட்டு சாமி மட்டும் கும்பிட்டுட்டு வாங்க பாய். ஆடு, கோழியெல்லாம் பலிகொடுக்க அனுமதி இல்லை'' என்று சொல்ல, "என்னங்க இது புதுக் கதையா இருக்கு. போன வருடம் என் அண்ணன் மகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினோம். அப்ப வெல்லாம் யாரும் எந்தத் தடையும் சொல்லலை. இப்ப என்ன?'' என்று கேட்டவர், சிக்கந்தர் தர்கா கமிட்டியிடம் போய் முறையிடுகிறார்.
உடனே தர்கா தலைவர் ஆரிப்கான் ஆய்வாளர் மதுரைவீரனிடம், "சார் வழக்கமாக நடப்பதுதானே, என்ன திடீரென தடுக்கிறீர்கள்?'' என்றதும், "ஆமா பாய், மேலிடத்து உத்தரவு. இனிமே தர்காவில் தொழுகை மட்டும்தான் நடத்த வேண்டும். ஆடு, கோழி பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, கந்தூரி எல்லாம் கொடுக்கக்கூடாது'' என்று சொல்லிகொண்டிருக்கும் போதே மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் கவிதா, திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் இராஜகுரு ஆகியோர் அங்கே ஆஜராக, "என்னங்க சார் சாதாரண விசயத்தை பெரிசாக்குகிறீர்கள்? நீதிமன்ற ஆர்டர் இருக்கா? இல்லை அரசு உத்தரவு இருக்கா?'' எனக் கேட்டதும்... வட்டாட்சியர், "இதோ பாரு
திருப்பரங்குன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வா அமைப்பின ரால் தற்போது பற்றவைக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் பின்னணி, ஆரம்பப்புள்ளி என அனைத்து விவரங்களையும் ஸ்கேன் செய்தபோது பல பகீர் தகவல்கள் கிடைத்தன.
"திருப்பரங்குன்றம் விவகாரத்தை கிளப்புவதற்காக சுமார் 1 லட்சம் பேரைத் திரட்ட போட்ட திட்டம் 144 தடையால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கடைசியில் மூவாயிரத்துக்குள்ளே வர... கடைசி அரைமணி நேரத்தில் திரட்டியதற்கு பின்னணியில் இருந்தது இராம சீனிவாசன், ஹெச்.ராஜா, இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மார்வாடிகள் என்கிறார் மதநல்லிணக்க அமைதிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தீலீபன்.
கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் தேதி, வழக்கம்போல் தன் மகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இராஜ பாளையம், மல்லடிபட்டியை சேர்ந்த சையது அபுதாகீர் ஆடு, கோழியோடு மலைக்கு ஏற முயன்றதும் போலீசார் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டு, ஆய்வாளர் மதுரைவீரனுக்கு தகவல் கொடுக்க, அடுத்த சில நிமிடங்களில் 20க்கும் மேற்பட்ட போலீசாருடன் வந்திறங்கிய மதுரைவீரன், "ஆட்டை இங்கேயே இறக்கிவைத்துவிட்டு சாமி மட்டும் கும்பிட்டுட்டு வாங்க பாய். ஆடு, கோழியெல்லாம் பலிகொடுக்க அனுமதி இல்லை'' என்று சொல்ல, "என்னங்க இது புதுக் கதையா இருக்கு. போன வருடம் என் அண்ணன் மகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினோம். அப்ப வெல்லாம் யாரும் எந்தத் தடையும் சொல்லலை. இப்ப என்ன?'' என்று கேட்டவர், சிக்கந்தர் தர்கா கமிட்டியிடம் போய் முறையிடுகிறார்.
உடனே தர்கா தலைவர் ஆரிப்கான் ஆய்வாளர் மதுரைவீரனிடம், "சார் வழக்கமாக நடப்பதுதானே, என்ன திடீரென தடுக்கிறீர்கள்?'' என்றதும், "ஆமா பாய், மேலிடத்து உத்தரவு. இனிமே தர்காவில் தொழுகை மட்டும்தான் நடத்த வேண்டும். ஆடு, கோழி பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, கந்தூரி எல்லாம் கொடுக்கக்கூடாது'' என்று சொல்லிகொண்டிருக்கும் போதே மதுரை தெற்கு தாலுகா தாசில்தார் கவிதா, திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் இராஜகுரு ஆகியோர் அங்கே ஆஜராக, "என்னங்க சார் சாதாரண விசயத்தை பெரிசாக்குகிறீர்கள்? நீதிமன்ற ஆர்டர் இருக்கா? இல்லை அரசு உத்தரவு இருக்கா?'' எனக் கேட்டதும்... வட்டாட்சியர், "இதோ பாருங்க பாய், அனுமதியெல்லாம் இல்லை. மீறிப்போனால் எல்லோரையும் கைது செய்வோம்'' என்று மிரட்ட, ஆரிப்கான் ஜமாத்தார்கள் மற்றும் அங்கிருந்த முஸ்லீம்கள் ஒன்றுகூடினர். அந்த இடம் போராட்டக்களமாக மாற, அனைவரையும் கைது செய்தனர். மதுரை வீரன் என் கிற போலீஸ் புள்ளிதான் இவ்வளவு பிரச்சினைக்கும் மூலவேர்!
ஆரிப்கான் கூறுகையில், "தர்காவிற்கு போகும் வழியில் வழக்கமாக ஒரே ஒரு போலீஸ்தான் செக்போஸ்ட்டில் இருப்பார். ஆனால் மதுரைவீரன் பொறுப்புக்கு வந்தபிறகு 5 போலீஸார் திடீரென நிறுத்தப்பட்டனர். அப்போதே சந்தேகப்பட்டோம். இந்த விசயத்திற்குத்தான் காத்திருந்ததாக நினைக் கிறோம். காலங்காலமாக ஆடு, கோழி பலிகொடுத்து நேர்த்திக்கடன் கொடுப்பது வழக்கமானதுதான். 400 வருடமாக நடக்கிறது எனக்கூறி புகைப்படங்கள், வீடியோக்களைக் காட்டியும் அவர்கள் மசியவில்லை. இந்த ஆதாரங்களை ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் காண்பித்தும் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஆட்சியர் சங்கீதா, ஜமாத்தார் களை வெகுநேரம் காக்கவைத்து அலட்சிய மாக நடந்துகொண்டார்'' என்றார்.
தொடர்ந்து, ’"மக்கள் கந்தூரி தருவதற்கு வசதிகள் உள்ளது' என்ற தகவல் பலகையைத் தற்போது வைத்ததாகவும், அதை எடுக்க வேண்டுமென்றும் வருவாய்த்துறை கோட்டாட்சியர் கூறினார். அவர் சொன்னது முற்றிலும் தவறு. அந்த அறிவிப்புப் பலகையி லேயே தலைவர் பாஷாகான் என்றிருக்கிறது. இந்த பாஷாகான் இறந்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது. ஆக, பல்லாண்டுகளாக இந்த அறிவிப்பு இருந் திருக்கிறது, கந்தூரியும் இருந்திருக்கிறது" என்றார்.. அப்பகுதியில் கறிக்கடை வைத்திருக்கும் முத்துப்பாண்டி, "தர்காவில் ஆடு உரிக்க நான் பலமுறை சென்றி ருக்கிறேன்" என்கிறார். இதேபோல் மலையைச் சுற்றியிருக்கும் மக்களில் பலரும் தர்காவில் ஆடு, கோழி பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வாடிக்கையானது என்றும், அதில் கலந்துகொண்டு சாப்பிட்டிருக் கிறோம் என்றும் கூறுகிறார்கள்.
1931-ல் லண்டன் நீதிமன்ற தீர்ப்பாயம், திருப்பரங்குன்ற மலை முழுவதும் இந்துக்களுக்கே சொந்தமென்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஹெச்.ராஜா சொல்வது முற்றிலும் பொய் என்பதற்கு, நீதிமன்றத் தீர்ப்பைக் காண் பித்து விளக்கமளிப்பதற்காக போராட்டத்துக்கு மறுநாள் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருந்தார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புக்கு போலீசார் தடைசெய்தனர். அதுகுறித்து அவர் கூறுகை யில், "1931 லண்டன் தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து நம் நீதிமன்றத் தீர்ப்பும் தெளி வாக, தர்கா இருக்கும் 33 சென்ட் இடம் தர்காவிற்கு சொந்தமானது. அதேபோல் கோயிலுக்கு மற்ற இடங்கள் சொந்தம் என்று தெளிவாக வழங்கியுள்ளது'' என்று தீர்ப்பின் நகலை காண்பிக்கிறார். "இருந்தும், திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்று வதற்காக மீண்டும் மீண்டும் பொய்யைப் பரப்பி, போராட்டத்தில் இறங்குகிறார்கள்.
பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் ஹெச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய அரசு தயங்குகிறது. ஆய்வாளர் மதுரைவீரனும் பா.ஜ.க. ஆதரவாளராக இருக்கிறார். அதேபோல் மதுரை ஆட்சியர் சங்கீதாவும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துவருகிறார். வி.சி.க.வினரின் கொடிக் கம்பங்களை ஏற்றவிடாமல் அவர் தடைபோட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார். கோட்டாட்சியர் இராஜகுரு, தாசில்தார் கவிதா உள்ளிட்டோரும் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். தர்காவில் நேர்த்திக்கடனுக்கு திடீரெனத் தடை போடுவதற்கு மேலிட உத்தரவு என்கிறார்கள். அந்த மேலிடம் ஆர்.எஸ்.எஸ்.ஸா? கடந்த பத்தாண்டுகளாக காவல்துறையின் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் அனைவருமே இந்துத்வா சிந்தாந்தத்துக்கு மாறியதாகத் தெரிகிறது. மேலும், ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு இந்துத்வாவினர் தாங்கள் நினைத்ததை சாதிக்கிறார்கள். அரசுத் தரப்பில் வெறுமனே திராவிட மாடல் அரசு, பெரியார், அண்ணா, கலைஞர் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்! இதுகுறித்து, திருமாவளவனிலிருந்து, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், காங்கிரஸின் செல்வப்பெருந்தகை மற்றும் எங்களைப் போன்ற சமூகச்செயற்பாட்டாளர்களும் அரசுக்கு சுட்டிக்காட்டியும், அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது'' என்று கொந்தளிக்கிறார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகையில், "இவ்விவகாரத்தில், காவல் துறையினரும், வருவாய் வட்டாட்சியரும் தம் விருப்பத்தின்பேரில் செயல்பட்டனரா? அல்லது அவர்களுக்கு அப்படி வழிகாட்டுதல் ஏதும் தன்னால் வழங்கப்பட்டதா என்பதை மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்த வேண்டும். இந்தப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விசாரித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சனாதன சக்திகளைச் சரியாகக் கையாளாமல்விட்டால் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் இப்படி கலவரங்களை ஏற்படுத்துவார்கள். இதைத் தமிழ்நாடு அரசு உணரவேண்டும். திருப்பரங் குன்றத்தை மையமாக வைத்து மத அடிப்படை வாதிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு சவால் விடுத்துள்ளனர். அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, மதச்சார்பற்ற சக்திகள் அனைவருக்கும் உள்ளது.தமிழ்நாட்டைக் காக்கும் கடமையை நிறைவேற்ற அனைத்து சனநாயக சக்திகளும் முன்வரவேண்டும்'' என் கிறார்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "மத வெறியர்களை தனிமைப் படுத்த வேண்டிய ஒரு பிரச்சனையில், மாவட்ட நிர்வாகம், உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவு, காவல்துறை என அனைத்துமே ஒரு சார்பாக நடந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிற்து. இந்த திருப்பரங்குன்றம் விவகாரம் முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்கா சம்பந்தப் பட்டதோ இல்லை. இது, முழுக்க முழுக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பு அரசியலை, கன்னியாகுமரியில் நடந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கலவரம் போன்று ஏற்படுத்த, மாநில அரசின் அதிகாரிகளை வைத்து நடத்தப்படும் சதி வேலையாகவே தெரிகிறது'' என்கிறார்.
மதநல்லிணக்க அமைதிக்குழு ஒருங்கிணைப் பாளர் திலீபன், "முருகனா, முஸ்லீமான்னு சொல்லி தமிழனைத் துண்டாடி, மார்வாடிகள் மதுரையின் மொத்த வணிகத்தைக் கைப்பற்ற வேலை செய் வது ஊர்ஜிதமாகிறது. 4ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆயிரக்கணக்கான கூட்டத் தைக் கூட்ட காரணமாக இருந்தது, மதுரையைச் சுற்றி ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் மொத்த வியாபாரம் செய்யும் மர்வாடிகளே! திருப்பரங்குன்ற மலையை மதப்பிரச்சனையாக மாற்ற மிகவும் முனைப்பாக வேலைசெய்தது பா.ஜ.க. இராம சீனிவாசன், இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர்.
இவர்களின் முதல் ஸ்கெட்ச் தான் ஆய்வாளர் மதுரை வீரன், தெப்பக்குளம் காவல் நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டது. 1990-ருந்து தீபம் ஏற்றுவது தொடர்பாக இராமகோபாலன் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாத காரியத்தை, 2025-ல் நிறைவேற்ற வேண்டும், அது 2026 தேர்தலில் எதிரொலிக்கவேண்டுமென்பதே திட்டம். மாவட்ட ஆட்சியர் சங்கீதா பா.ஜ.க. ஆதரவாளர் என்பதை தெரிந்துகொண்டு, கடந்த 4ஆம் தேதி போராட்டம் அறிவித்தபோது, எப்படி யும் ஒரு லட்சம் பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்வா வினரை குவித்துவிட வேண்டுமென்று திட்டமிட்டு, இதற்கான செலவுகளை மதுரை மார்வாடிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் பகிரங்கமாக மதுரையெங்கும், "இந்துக்களே! திருப்பரங்குன்ற முருகனை மீட்க வாருங்கள்!' என்று அழைப்பு விடுத்து தண்டோரா போட்டனர். அதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறை கமிஷனரிடமும் புகாரளிக்கப்பட்டது, அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. கடைசி நேரத்தில்தான் அரசு விழித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக 144 தடையுத்தரவு போட்டது. கடைசி நேரத்தில் பா.ஜ.க. தலைவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டதால் ஒரு லட்சம் பேரைத் திரட்ட முடியாமல் போனது. மதுரையெங்கும் லாட்ஜ்களில் தங்கிருந்தவர்கள் அப்படியே போராட்டத்துக்கு கிளம்பிவந்ததில் மூவாயிரம் பேர்வரை திரண்டிருக் கிறார்கள். இந்துத்வா அமைப்பினர் மதுரையெங்கும் லாட்ஜ்களில் தங்கவைக்கப் பட்டிருப்பது காவல்துறைக்கு புகாராகத் தெரிவிக்கப்பட்டபோதும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
கோவையில் 1997-ல் இதைத்தான் செய்தார்கள். தமிழர்களின் ஒற்றுமையை மதரீதியாகப் பிரித்த பின்னர், கோயமுத்தூருடைய வணிகம் மார்வாடிகளின் கைகளுக்கு மாறியது. இதேநிலை தான் நாளை மதுரைக்கும் நேரும்! தி.மு.க. ஆட்சியின் கீழுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு, உளவுத்துறை அனைத் தும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் கடந்த 10 வருடமாகத் தொடர்கிறது. அரசு இன்னும் விழிக்கவில்லை என்பதே நிதர்சனம்'' என்றார்.
பொதுவாக, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக்கூடிய அசம்பாவிதம் எங்கு நடந்தாலும் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் ஆய்வாளர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப் பதை சமூக ஆர்வலர்கள் கேள்விக்குறியாகப் பார்க்கிறார்கள்!