தாகத்தில் மக்கள்! முதல்வர் தயவில் மந்திரி ஆட்களுக்கு 12 மில்லியன் லிட்டர் தண்ணீர்!

cc

மிழகம் தாகத்தால் தவிக்கிறது. குறிப்பாக சென்னையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காலிக்குடங்களே காட்சியளிக்கின்றன. வடசென்னை பொதுமக்கள் டோக்கனும், குடங்களுமாக வீதிகளில் கொளுத்தும் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர். புகழ்பெற்ற சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல், படுமோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்புக்கு தங்குதடையின்றி செல்லும் தண்ணீரில் கொஞ்சம் கேட்டதற்காக, சிந்தாதிரிப்பேட்டை பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். "தண்ணீருக் கென்று வரி கொடுக்கிறோம். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நம் பணத்தை வாங்கிக்கொண்டு, நம்மையே துரத்து கிறார்கள்' என சென்னை பாஷையில் புலம்புகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

water

இதையெல்லாம் அறிந்தும், "தண்ணீர்த் தட்டுப்பாடு என்று சொல்வதெல்லாம் வதந்தி' என கூலாக சொல்லிவிட்டார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சர்களின் வீடுகளுக்கு நாளொன்றுக்கு இரண்டு லாரிகள் வீதம் குடிநீர் வாரியமே தண்ணீர் அனுப்பும்போது, அவர் அப்படிப் பேசுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முதல்வர் மற்றும் அமைச்சரின் தயவால் சென்னை நகரில் இயங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தொடங்கி நடுத்தர விடுதிகள் வரை தடையில்லாமல் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ராஜசேகரன், தேசிய தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதத்திலும் முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றிலும் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

water

இதையடுத்து, உண்மை நிலையறிய நக்கீரன் களமிறங்கியது. நக்கீரனை தொடர்பு கொண்டவர்களும், ""ராஜசேகரன் சொல்வது உண் மைதான். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இயங்கும் சென்னை குடிநீர் வாரியத்தின் நீரேற்று நிலையத்திலிருந்து தாஜ் கோர மண்டல், ஜி.ஆர்.டி. ரெசிடென்சி, குவாலிட்டி இன் சபரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களுக்கு நேரடியாக தண்ணீர் வழங்கப் படுகிறது. அதிலும் குறிப்பாக "குவாலிட்டி இன் சபரி' என்கிற ஹோட்டல் உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கும் துறை அமைச்சருக்கும் தி.நகர் எம்.எல்.ஏ. சத்யாவு

மிழகம் தாகத்தால் தவிக்கிறது. குறிப்பாக சென்னையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை காலிக்குடங்களே காட்சியளிக்கின்றன. வடசென்னை பொதுமக்கள் டோக்கனும், குடங்களுமாக வீதிகளில் கொளுத்தும் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர். புகழ்பெற்ற சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமல், படுமோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்புக்கு தங்குதடையின்றி செல்லும் தண்ணீரில் கொஞ்சம் கேட்டதற்காக, சிந்தாதிரிப்பேட்டை பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். "தண்ணீருக் கென்று வரி கொடுக்கிறோம். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நம் பணத்தை வாங்கிக்கொண்டு, நம்மையே துரத்து கிறார்கள்' என சென்னை பாஷையில் புலம்புகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

water

இதையெல்லாம் அறிந்தும், "தண்ணீர்த் தட்டுப்பாடு என்று சொல்வதெல்லாம் வதந்தி' என கூலாக சொல்லிவிட்டார் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சர்களின் வீடுகளுக்கு நாளொன்றுக்கு இரண்டு லாரிகள் வீதம் குடிநீர் வாரியமே தண்ணீர் அனுப்பும்போது, அவர் அப்படிப் பேசுவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முதல்வர் மற்றும் அமைச்சரின் தயவால் சென்னை நகரில் இயங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தொடங்கி நடுத்தர விடுதிகள் வரை தடையில்லாமல் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.ராஜசேகரன், தேசிய தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதத்திலும் முகநூல், வாட்ஸ்அப் போன்றவற்றிலும் இந்த பிரச்சினையை எழுப்பினார்.

water

இதையடுத்து, உண்மை நிலையறிய நக்கீரன் களமிறங்கியது. நக்கீரனை தொடர்பு கொண்டவர்களும், ""ராஜசேகரன் சொல்வது உண் மைதான். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இயங்கும் சென்னை குடிநீர் வாரியத்தின் நீரேற்று நிலையத்திலிருந்து தாஜ் கோர மண்டல், ஜி.ஆர்.டி. ரெசிடென்சி, குவாலிட்டி இன் சபரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களுக்கு நேரடியாக தண்ணீர் வழங்கப் படுகிறது. அதிலும் குறிப்பாக "குவாலிட்டி இன் சபரி' என்கிற ஹோட்டல் உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கும் துறை அமைச்சருக்கும் தி.நகர் எம்.எல்.ஏ. சத்யாவுக்கும் நெருக்கமானது. வள்ளுவர் கோட்டம் நீரேற்று நிலையத்திற்கு மிக அருகில் உள்ள இந்த ஹோட்டலில் போய் பாருங்கள் உண்மை தெரியும்'' என்றனர்.

அங்கு சென்றோம். நிர் வாகத்தினர் மறுத்தனர். வெளியே வந்த நாம், "லாரி மூலம் குடிநீர் வருகிறதா' என கேட்டோம். அவர்கள் ""லாரி மூலம் வருவ தில்லை, நேரடியாக வருகிறது'' என்றனர். உடனே ஹோட்டல் நிர்வாகத்திடம் நக்கீரன் என நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு "வள்ளுவர் கோட்டம் நீரேற்று நிலையத்திலிருந்து நேரடியாக உங்கள் ஹோட்ட லுக்கு தண்ணீர் வருகிறதா? லாரிகள் மூலம் பெறுகிறீர்களா?' என கேட்டோம். அதற்குப் பதிலளித்த ஹோட்டலின் மேனேஜர் சுரேஷ், ""ஒருநாளைக்கு 15,000 ரூபாய்க்கு லாரிகள் மூலம் நீர் பெறுகிறோம்'' என்றதோடு, ""அமைச்சர் வேலுமணி, தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா உட்பட எந்த அரசியல்வாதிக்கும் இதில் தொடர்பு இல்லை'' என்றார்.

water

அடுத்து நாம் சென்றது வள்ளுவர் கோட்டம் நீரேற்று நிலையத்திற்கு. அங்கு பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் லாரிகளோடு ஏகப்பட்ட தனியார் லாரிகளும் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தன. தனியார் லாரிகளுக்கு அரசு தண்ணீரா என்ற சந்தேகத்தோடு அந்த நீரேற்று நிலையத்தின் தலைமைப் பொறியாளரான ஏ.ஜி.ஸ்கொயர் ராஜாராமனிடம் "இந்த நீரேற்று நிலையத்தில் தனியார் வாகனங்கள் எப்படி' என கேட்டோம். ""தண்ணீர் தானே, தனியார் கேட்டாலும் கொடுப்போம். மொத்தம் 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் இன்று வந்தது. அதில் 13 மில்லியன் லிட்டர் தண்ணீரை லாரிகளுக்கு வழங்கியுள்ளோம்'' என்றார். "மீதி 12 மில்லியன் லிட்டர் தண்ணீரை என்ன செய்தீர்கள்' என கேட்டோம். ""அதை குழாய் வழியாக வினியோகம் செய்தோம். அவை குடிநீரை சேகரித்து உபயோகிக்க கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டி வைத்துள்ளவர்களுக்கு செல்லும்'' என்றார். "அப்படியென்றால் உங்களது நீரேற்று நிலையத்தைச் சுற்றியுள்ள நுங்கம்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கும் செல்லுமா' எனக் கேட்டோம். ""நிச்சயம் செல்லும். இந்த நீரை நட்சத்திர விடுதிகள் உபயோகிக்க அனுமதிக்கும் கண்ட்ரோல் வால்வு அந்தப் பகுதியில் உள்ள உதவிப் பொறியாளர்களிடம் உள்ளது. அவர்கள் அனுமதித்தால்தான் இந்த 12 மில்லியன் லிட்டர் தண்ணீரும் நட்சத்திர விடுதிகளுக்கு செல்லும்'' என்றார். "மெட்ரோ குடிநீரை நட்சத்திர விடுதிகள் பெறுவதற்கு எவ்வளவு நேரமாகும். அமைச்சர் வேலுமணி உட்பட வி.ஐ.பி.க்கள் சிபாரிசில் நட்சத்திர விடுதிகளுக்கு தண்ணீர் தரப்படுகிறதா? பைப்லைன் மூலம் விநியோகிக்கப்படும். அனைத்து தண்ணீரையும் லாரிகள் மூலமே விநியோகம் செய்ய முடியாதா?' என மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்டோம். ""குழாய் மூலம் தண்ணீர் அனுப்பச் சொல்லி எங்கள் உயரதிகாரிகள்தான் உத்தரவிட்டுள்ளார்கள். அது மட்டும்தான் எனது பொறுப்பு'' என முடித்துக் கொண்டார். பினாமி பெயரில் ஹோட்டல், நட்சத்திர விடுதிகளில் ஷேர் என மந்திரிகளின் காசு புழங்கும் இடங்களுக்கு மெட்ரோ வாட்டர் தாராளமாக கிடைக்கிறது.

water

சென்னையை தண்ணீர்ப் பஞ்சம் முடக்கிப் போட்டிருக்கும் வேளையில், தமி ழகத்தின் பல பகுதிகளில் தண் ணீர் பஞ்சத்தால் உயிர்ப்பலிகள் ஆரம்பமாகி விட்டன. தஞ்சா வூர் மாவட்டம் விளார் கிராமத்தில் இருந்த நீர்த் தேக்கத்தொட்டி பழுதானதால், மக்களை ஒருங் கிணைத்து போராடினார் சமூக செயற்பாட் டாளரான ஆனந்தபாபு என்பவர். அந்தப் போராட்டத்தின் பயனாக டேங்கரில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. டேங்கர் பக்கத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தபோது, குமார் என்பவர் பல குடங்களுடன் வந்து பிரச்சனை செய்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, ஆனந்தபாபு மற்றும் அவரது தந்தை உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த ஆனந்தபாபு சிகிச்சை பலனின்றி 6-ந்தேதி உயிரிழந்தார்.

water

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூரில் தண்ணீர் தேவைக்காக வீடுகளின் முன்பு குழிகளைத் தோண்டிவைத்து, அதில் கிடைக்கும் தண்ணீரைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 15-ஆம் தேதி பெய்த கன மழையில் தோண் டப்பட்ட குழிகள் நிறைந்தன. அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் - வெண்ணிலா தம் பதியின் மூன்று வயது மகள் பவதாரணி, தவறு தலாக அந்தக் குழிக்குள் விழுந்ததில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். "அரசு நிர்வாகம் முறையா தண்ணி விநியோகம் செய்திருந்தா, எதுக்கு குழி வெட்டணும்… அதுல விழுந்து அழகு பெத்த பிள்ளை சாக ணும்' என பவதாரணி யின் பெற்றோர் கதறி யழுதனர்.

வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் பொதுவாகவே விலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், சேந்தன்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர்தேடி வரும் புள்ளிமான்களும், மயில்களும் நாய்களிடம் சிக்கி பரிதாபமாக கொல்லப் படுகின்றன.

ww

தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தன் துயர வரலாற்றை எழுதிக் கொண்டிருக்க, நீர் மேலாண்மைக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற உண்மையைச் சொல்லி கண்டித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதற்குப் பதிலளித்துள்ள சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் தலைமைப் பொறியாளர் ஆறுமுகம், “""2017-ம் ஆண்டில் பருவமழை பொய்த்தது. இதையடுத்து சென்னை நகருக்கு நீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால், நாளொன்றுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை 830 மில்லியன் லிட்டரில் இருந்து, ஜூன் 1-ம் தேதிமுதல் 525 மில்லியன் லிட்டராக குறைத்துள்ளோம். 3,231 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில், தற்போது 26 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது. சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது நீர் இல்லை.

வீராணம் ஏரியில் இருந்து நாளொன்றுக்கு 180 லாரிகள் விநியோகம் செய்கிறோம். 900 லாரிகளில், ஒவ்வொரு நாளும் 9,400 நடைகள் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. குறுகிய சாலைகளில் செல்ல ஏதுவாக சிறிய லாரிகளிலும் தண்ணீர் கொண்டுசெல்லப் படுகிறது. மேலும், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வது தொடர் பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என தன் பதில் மனுவில் தெரிவித்திருக்கிறார். நீதிபதிகள் திருப்தி அடைய வில்லை.

""ஏரி, குளங்களைத் தூர்வாரவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? சென்னைக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில் மாற்று ஏற்பாட்டுக்கு என்ன வழி? கடந்த ஆண்டே நீர் வற்றிவருவது தெரிந்திருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல், கடைசி நேரத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு செய்வதால் யாருக்கு லாபம்?'' போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டது நீதி மன்றம். சமாளிப்பான பதில்களைத் தந்தது அரசு.

இதையடுத்து, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், நீர்நிலைகளைத் தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு பொதுப்பணித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் கூறுகையில், ""தனியாக 900 லாரிகளில் தினந்தோறும் பத்தாயிரம் நடைகள் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி, கல்லூரிகள், பள்ளிகளுக்கு தனியாக விநியோகிக்கிறோம். இதைத்தான் நீதிமன்றத்திலும் சொல்லி இருக்கிறோம். அமைச்சர்களின் வீடுகளுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக திட்டமிட்டு பரப்புகிறார்கள்'' என்றார் அவர்.

“சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து தினந்தோறும் லாரிகளில் தண்ணீர் செல்கிறது. 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு, மூன்று லாரிகள் முதல்வர் எடப்பாடியின் இல்லத்திற்கு தினமும் அனுப்பப்படுகிறது. தனியாருக்கு செல்லும் லாரி ஒன்றுக்கு தலா ரூ.700 வரை வசூல் செய்யப்படும் நிலையில், அமைச்சர்களுக்கு அனுப்பப்படும் தண்ணீருக்கு எந்தக் கணக்கும் கிடையாது. அவர்கள் ஒரு போன் அடித்தால் எந்த நேரமானாலும், சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் இருந்து தண்ணீர் லாரிகள் சர்ரென்று பறக்கும். இதற்கெல்லாம் கணக்கோ… எதற்காக என்ற கேள்வியோ நம்மால் கேட்க முடியாது''’ என மெட்ரோ வாட்டர் அலுவலரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இந்த லட்சணத்தில், "பொதுமக்கள் குளிப்பதற்கும் துவைப்பதற்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதுதான், தண்ணீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம்' என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு விட்டார் முதல்வர் பழனிசாமி. மக்கள் தவிக்கிறார்கள். மந்திரிகள் குதூகலிக்கிறார்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

- இரா.பகத்சிங், அ.அருண்பாண்டியன்

படங்கள் : அசோக், குமரேஷ்

nkn250619
இதையும் படியுங்கள்
Subscribe