திண்ணைக் சச்சேரி! : மத்திய அமைச்சருடன் மோதும் மகளிரணி! போஸ்ட் தருவதாக ஏமாற்றிய மா.செ!

thinnaikatchery

மாமல்லபுரத்தின் வெண்மணல் பரப்பில் அமர்ந்து, ஆழிப்பேரலைகளுக்கு எஞ்சியிருந்த ஏழாவது கடற்கோயிலை நயந்தபடி கச்சேரியைத் தொடங்கினார்கள் நக்கீரன் மகளிர் அணியினர்.

பரணி: எங்க நெல்லை எம்.பி. விஜிலா சத்யானந்த் இருக்காவளே... அவிய கீழ்க்கடயத்துல இருக்குற டி.டி.டி.ஏ. பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் வகுப்பறை கட்டுறதுக்காக எம்.பி. நிதியில இருந்து பத்து லட்சம் குடுத்தாவ. கட்டி முடிச்சதும் திறப்புவிழாவிலயும் கலந்துக்கிட்டாவ.

thinnaikatchery

மெரீனா: நல்ல காரியம்தானே... பள்ளிக்கூடத்துக்குதானே உதவி செய்தாங்க.

பரணி: விஷயம் என்னன்னா... டி.டி.டி.ஏ. ஒரு கிறிஸ்தவப் பள்ளி. அரசு உதவிபெறும் பள்ளிதான். அக்கம்பக்கத்துல என்ன பேசிக்கிறாங்கன்னா... காசு, பணம் இருக்கிறவிய நடத்துற ஸ்கூலுக்கு ஏன் குடுக்கணும்? பக்கத்துலதான் முதலியார்பட்டி. அங்கே ஒரு உயர்நிலைப் பள்ளி இருக்கு. அரசுப் பள்ளி. அதுக்கு கழிப்பறை கட்டணும்னு கேட்டுருக்காவ. அதுக்கு குடுக்காம, கிறிஸ்தவ நிறுவ

மாமல்லபுரத்தின் வெண்மணல் பரப்பில் அமர்ந்து, ஆழிப்பேரலைகளுக்கு எஞ்சியிருந்த ஏழாவது கடற்கோயிலை நயந்தபடி கச்சேரியைத் தொடங்கினார்கள் நக்கீரன் மகளிர் அணியினர்.

பரணி: எங்க நெல்லை எம்.பி. விஜிலா சத்யானந்த் இருக்காவளே... அவிய கீழ்க்கடயத்துல இருக்குற டி.டி.டி.ஏ. பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் வகுப்பறை கட்டுறதுக்காக எம்.பி. நிதியில இருந்து பத்து லட்சம் குடுத்தாவ. கட்டி முடிச்சதும் திறப்புவிழாவிலயும் கலந்துக்கிட்டாவ.

thinnaikatchery

மெரீனா: நல்ல காரியம்தானே... பள்ளிக்கூடத்துக்குதானே உதவி செய்தாங்க.

பரணி: விஷயம் என்னன்னா... டி.டி.டி.ஏ. ஒரு கிறிஸ்தவப் பள்ளி. அரசு உதவிபெறும் பள்ளிதான். அக்கம்பக்கத்துல என்ன பேசிக்கிறாங்கன்னா... காசு, பணம் இருக்கிறவிய நடத்துற ஸ்கூலுக்கு ஏன் குடுக்கணும்? பக்கத்துலதான் முதலியார்பட்டி. அங்கே ஒரு உயர்நிலைப் பள்ளி இருக்கு. அரசுப் பள்ளி. அதுக்கு கழிப்பறை கட்டணும்னு கேட்டுருக்காவ. அதுக்கு குடுக்காம, கிறிஸ்தவ நிறுவனப் பள்ளிக்கு குடுத்துப்பிட்டாவ. எம்.பி. விஜிலா சத்யானந்துக்கு சாதிமத ஓட்டுதான் முக்கியமானு இப்ப பிரச்சினை ஓடுது.

கோமுகி: எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். அரியலூர் அ.தி.மு.க. மகளிரணி மா.செ. அமுதாவுக்கு கைக்கெட்டுனது வாய்க்கெட்டாமப் போச்சே... இதுக்கு என்னத்தை சொல்ல?

மல்லிகை: ஜெயலலிதா இருக்கும்போது, உடம்புக்கு முடியாம இருந்து அப்பல்லோவுக்கு கூட்டியாந்து வைத்தியம் பண்ணி அனுப்பிச்சாங்களே, அரியலூர் அமுதா அவுகளைப் பத்தியா பேசுறிய?

கோமுகி: அதே அமுதாதான். இவங்க ஊர்ல உள்ள கிராம கூட்டுறவு சங்கத்துல நியமிக்கப்பட்ட 11 இயக்குநர்கள்ல இவங்களும் ஒண்ணு. 11 பேர்ல ஒருத்தரை சேர்மனா தேர்ந்தெடுக்கணும். அதுக்கு கடுமையான போட்டி. இந்தம்மா கட்சியின் மா.செ. குமரகுருவைத் தேடிப்போனாங்க. வரவேற்ற அவர், ""இந்தமுறை நீங்கதான் சேர்மன். இருபது வருஷமா கட்சியில இருக்கீங்க. கட்சிப் பதவி தவிர வேற எந்தப் பதவியிலயும் இருந்தது இல்லை. உங்களை சேர்மனாக்குறது என்னோட பொறுப்பு, கடமை'' என்று உரிமையோட சொன்னாராம். ரெண்டுநாள் கழிச்சு தகவல் வருது ஒ.செ. ரிஷிவந்தியம் அருணகிரியும், மா.செ. குமரகுருவும் சேர்ந்து அத்தியூர் சிவராமனை சேர்மன் ஆக்குவது என்று முடிவு செஞ்சிருக்காங்கனு.

மெரீனா : பாவம் மகளிரணி அமுதா மனசொடைஞ்சு போயிருப்பாங்களே...?

கோமுகி: உடனே மா.செ. வீட்டுக்குப் போயிட்டாங்க அமுதா. விடிய விடிய பஞ்சாயத்து நடந்திருக்கு. அத்தியூர் சிவராமன்தான் சேர்மன். இனி ஒண்ணும் பண்ணமுடியாதுனு உறுதியாயிட்டாராம் மா.செ. "அண்ணே... எனக்கு சேர்மன் பதவி கிடைக்காட்டி உங்க பேரை எழுதிவச்சுட்டுத் தற்கொலை செஞ்சிருவேன்'னு அமுதா கதறியிருக்கு. "எதை வேணாலும் செஞ்சுக்க... உங்க சாவுக்கு நான் பொறுப்பாக முடியாது'னு பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லி வெளியே அனுப்பிட்டாராம்.

வாணி: ஏனுங்க... "நான் பொறுப்பு'னு சொல்லி இரு கை நீட்டி அரவணைப்பதற்கு குமரகுரு என்ன சமூகசேவகி கோத்தகிரி சுசீலாங்களா?

thinnaikatchery

மெரீனா: நம்ம சென்னை நகரமே வெள்ளக்காடா மிதக்கும்போது பலருக்கும் ஒதவி ஒத்தாசை செஞ்சாங்களே அந்த சுசீலாவா?

வாணி: ஆமாமுங்க. அதே கோத்தகிரி சுசீலாதானுங்க. மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மணிக்கு மூணு பெண் குழந்தைங்க, ஒரு ஆண் குழந்தை. நாலு குழந்தைகளுக்கும் பொறவியிலேயே கண்ணு தெரியாது. குழந்தைகளை காப்பாத்த முடியலைனு கலெக்டர்ட்ட முறையிட்டாருங்க தந்தை மணி. இதைத்தெரிந்த கோத்தகிரி செல்வி, அந்த குழந்தைகளை தன்னோட வீட்டுக்கு கூட்டிவந்து பராமரிக்கிறாங்க.

மல்லிகை: கடவுள் அந்த சுசீலாவுக்கு தீர்க்காயுசை கொடுக்கணும்.

வாணி: வேதனையைச் சொல்லட்டுங்களா...! அந்தச் சேவகிக்கு கேன்சருங்களாம்.

மெரீனா: தொண்டுள்ளம் கொண்டவங்களுக்குத்தான் சோதனைக்கு மேல சோதனை வரும்.

பரணி: பா.ஜ.க. மகளிரணி தேசிய பொதுச்செயலாளர், வழக்கறிஞர் நாகர்கோயில் விக்டோரியா கௌரியைத் தெரியும்ல... அவிய அமைச்சர் பொன்னார் குரூப்போட இடைஞ்சல தாங்க முடியாம பதவியை ராஜினாமா செய்றதுக்கு தயாராயிட்டாங்க.

கோமுகி: போன மாசம் மதுரை மகளிர் மாநாட்டுக்கு வந்த பா.ஜ.க. மகளிரணி தேசியத்தலைவி விஜயா ரகாட்கரை நாகர்கோயில் கூட்டிப்போய் ஒரு கல்யாண மண்டபத்துல தடபுடலா கூட்டம் நடத்துனாங்களே...!

பரணி: கௌரி தேசியப் பொதுச்செயலாளர்தான். ஆனால் சொந்த ஊரான நாகர்கோயில்ல தன்னை வளரவிடாமல் பொன்னார் குரூப் தடை செய்யுதுனு கௌரிக்கு கோபம். போன மாதம் கூட்டம் நடத்துவதற்கு நாகர்கோயில்ல உள்ள கட்சியின் அலுவலகத்தை கௌரிக்கு ஒதுக்க மறுத்துவிட்டார்கள் பொன்னார் அணி மீனாதேவ் அணியினர். தன்னோட உறவினர் மீனாதேவ்வுக்குத்தான் அமைச்சர் சப்போர்ட் செய்றாராம். அந்தக் கோபத்துல தன் பதவியை ராஜினாமா செய்ய நினைச்சாங்களாம். பொன்னார் மேல் உள்ள கோபத்தில் மோடி தந்த தேசியப் பொதுச்செயலாளர் பதவியை எதுக்காக ராஜினாமா செய்யணும்னு குடும்பத்தினர் சமாதானப்படுத்துறாங்களாம்.

மெரீனா: குமரியிலயும் குமுறல்களா? விடிஞ்சா மாதிரிதான்...

-பரமசிவன், எஸ்.பி.சேகர், அருள்குமார், மணிகண்டன்

nkn200818
இதையும் படியுங்கள்
Subscribe