திண்ணைக் கச்சேரி! - கலகலத்த மகளிர் மாநாடு! கோழிப்பண்ணையில் கொத்தடிமைகள்!

thinaikathery

துரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு கோபுரவாசல் வழி வெளியே வந்து முனியன் சன்னிதியை ஒட்டிய நடைபாதைத் திண்டில் அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

மல்லிகை: நானும் நாச்சியாரும் மத்தியானம் ரெண்டுமணிக்கு வேன்ல ஏறி உக்காந்தமா... சாப்பாடு பொட்டலம் வாங்கித் தந்தாக. மூணு மணிக்குக் கொண்டு போயி, ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரிக்கு எதிர்த்தாப்ல மாநாட்டுப் பந்தல்ல எறக்கிவிட்டாக. நாலு மணிக்கு மாநாடு ஆரம்பம்னு சொன்னாக. அஞ்சே முக்காலுக்குத்தான் ஆரம்பிச்சாக.

thinaikatchery

பரணி: பா.ஜ.க. மகளிர் மாநாட்டுக்கு நீங்க போயிட்டு வந்தது தெரியும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையா தங்களோட மாநாட்டையும் மூக்குல விரல் வைக்கிற மாதிரி நடத்தணும்னு தமிழிசையும் மகளிரணி மகாலட்சுமியும் ரெண்டு மாசமா ஒர்க் பண்ணாங்களே...

நாச்சியார்: ஆமாமா... கூட்டம் சேர்க்கிறதுக்காக அம்பது வேன் ஏற்பாடு செஞ்சிருந்தாக. சௌராஷ்டிரா மக்களை திரட்டிக் கொண்டு வந்திடலாம்னு மகளிரணி மகாலட்சுமி நம்பினாங்களாம். இருக்குமே... ரெண்டாயிரம் பெண்கள் வந்திருப்பாக. மகளிர் மாநாடு இல்லியா...

துரை மீனாட்சியம்மன் கோயில் வடக்கு கோபுரவாசல் வழி வெளியே வந்து முனியன் சன்னிதியை ஒட்டிய நடைபாதைத் திண்டில் அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

மல்லிகை: நானும் நாச்சியாரும் மத்தியானம் ரெண்டுமணிக்கு வேன்ல ஏறி உக்காந்தமா... சாப்பாடு பொட்டலம் வாங்கித் தந்தாக. மூணு மணிக்குக் கொண்டு போயி, ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரிக்கு எதிர்த்தாப்ல மாநாட்டுப் பந்தல்ல எறக்கிவிட்டாக. நாலு மணிக்கு மாநாடு ஆரம்பம்னு சொன்னாக. அஞ்சே முக்காலுக்குத்தான் ஆரம்பிச்சாக.

thinaikatchery

பரணி: பா.ஜ.க. மகளிர் மாநாட்டுக்கு நீங்க போயிட்டு வந்தது தெரியும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையா தங்களோட மாநாட்டையும் மூக்குல விரல் வைக்கிற மாதிரி நடத்தணும்னு தமிழிசையும் மகளிரணி மகாலட்சுமியும் ரெண்டு மாசமா ஒர்க் பண்ணாங்களே...

நாச்சியார்: ஆமாமா... கூட்டம் சேர்க்கிறதுக்காக அம்பது வேன் ஏற்பாடு செஞ்சிருந்தாக. சௌராஷ்டிரா மக்களை திரட்டிக் கொண்டு வந்திடலாம்னு மகளிரணி மகாலட்சுமி நம்பினாங்களாம். இருக்குமே... ரெண்டாயிரம் பெண்கள் வந்திருப்பாக. மகளிர் மாநாடு இல்லியா... அதனால ஆண்கள் கொஞ்சம் அதிகமா வந்திருந்தாக.

மல்லிகை: நிர்மலா சீதாராமன் வராதது ஒரு மைனஸ்தான். வானதி சீனிவாசன் நாலஞ்சு நிமிஷம் பேசிப்புட்டு பாதியிலயே கௌம்பிட்டாக. பொன்னார் பேசி முடிச்சதும் கூட்டம் எந்திரிக்க ஆரம்பிச்சிருச்சு. ராத்திரி சாப்பாடு இருக்கு, சாப்பாடு இருக்குனு கிளிப்பிள்ளை மாதிரி தமிழிசை சொன்னாக. ராத்திரி சோத்துக்காக யாரும் நிக்கத் தயாராயில்லை. மகளிரணித் தேசியத் தலைவி வித்யா ரகத்கர் இந்தியில் பேச ஆரம்பிச்சாகளா... மிச்ச சொச்சமிருந்தவங்களும் எந்திருச்சு வந்துட்டோம். என்னமோ நாங்களும் மாநாடு நடத்தினம்னு நடத்திப்பிட்டாக.

காமாட்சி: வந்தவாசி பக்கத்தில மணிமங்கலம்னு ஒரு ஊரு. அங்கே தயாளன்கிறவர் கோழிப்பண்ணை வச்சிருக்கிறாரு. அதுல 22 பேரை கொத்தடிமையா வச்சு வேலை வாங்கிறதா புகார் வந்துச்சு. செய்யாறு சப்-கலெக்டர் அன்னம்மாளை ஆய்வுக்கு அனுப்புனாக. அங்கே கொத்தடிமையா புள்ளைகுட்டிகளோட இருந்த விழுப்புரம் மாவட்டம் கன்னிகோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்கல் கிராமங்களைச் சேர்ந்த 6 குடும்பங்களையும் மீட்டு, கையில தலா ஆயிரத்தை குடுத்து சப்-கலெக்டர் அன்னம்மா அனுப்பி வச்சாங்க.

பரணி: கோழிப்பண்ணைக்காரவுக ஒவ்வொரு குடும்பத்தையும் என்ன விலைக்கு வாங்கியிருந்தாவளாம்?

காமாட்சி: ஒவ்வொரு குடும்பத்தையும் தலா ஒரு லட்சத்துக்கு வாங்கினாங்களாம். கோழிப்பண்ணை மேனேஜரை புடிச்சிட்டாங்க. முதலாளியை விட்டுட்டு தேடுறாங்களாம்.

thinaikatchery

மல்லிகை: இன்ஸ்பெக்டரம்மா மதனகலாவைப் பத்தி புதுசா ஒரு தாக்க.

நாச்சியார்: பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவைப் பத்தியா?

மல்லிகை: பெரியகுளம் பக்கத்தில இருக்கிற கல்லுப்பட்டியில் தலித் மக்கள் அதிகம். இந்த ஊரைச் சேர்ந்த ரெண்டு மூணு ரவுடிகளும் அவங்க கும்பலும் சேர்ந்து, அந்த ஊர் வழியாவர்ற, பிற சாதி ஜனங்களை டார்ச்சர் பண்றது, வழிப்பறி செய்றது, செயின் அறுக்கிறதுனு ரொம்ப ஆட்டம் போட்டிருக்காங்க. அவனுங்ககிட்ட பறிகொடுக்கிற ஜனங்க புகார் கொடுக்கிறதில்லை. ஏன்னா தீண்டாமை சட்டத்தில அவனுங்க மாட்டி விட்டுடுறாங்கனு பயம்.

மெரினா: இப்படி ஒருசிலர் செய்றதால இந்தியா முழுக்க ஆதிக்க சக்திகள் பி.சி.ஆர். ஆக்ட்டுக்கு எதிர்ப்பு காட்டுது.

மல்லிகை: இப்ப துணிஞ்சு சிலர் தென்கரை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி, இன்ஸ்பெக்டர் மதனகலாகிட்ட புகார் கொடுத்துப்பிட்டாக. ஏற்கனவே இதைப் பத்திக் கேள்விப்பட்டிருந்த மதனகலா, அந்த கல்லுப்பட்டிக்கு போய் பாலமுருகன்ற ரவுடியை அரெஸ்ட் பண்ணிக் கொண்டாந்துட்டாக.

thinaikatchery

பரணி: ரவுடியோட குரூப் சும்மாயிருந்துச்சா?

நாச்சியார்: அதெப்படி சும்மா இருப்பாக. இன்ஸ்பெக்டர் மதனகலாவை கண்டிச்சு போஸ்டர் ஒட்டுனாக. அந்தப் போஸ்டருக்கு எதிரா, இன்ஸ்பெக்டரம்மாவுக்கு ஆதரவா முஸ்லிம்கள் உட்பட அஞ்சாறு ஊர்க்காரவுக ஏழெட்டு வகை போஸ்டர்களை அடிச்சு வளைச்சு வளைச்சு ஒட்டுனாக. அதோட மாவட்ட ஆட்சியர் பல்லவி பலதேவ்விடமும் ரவுடிகள் பத்தி புகார் சொன்னாகளாம். அந்த ரவுடிகள் மீது ஈவு இரக்கமில்லாம சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்காகளாம் கலெக்டரம்மா.

காவேரி: எல்லாத்துக்கும் கொஞ்சமாச்சும் துணிச்சல் வேணும். நாலு நாளைக்கு முன்னாடி நடந்ததைச் சொல்றேன். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆனைக்குப்பம் பகுதியில, திருட்டு மணல் ஏத்திக்கிட்டு நாலு லாரி வருதுனு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழிக்கு தகவல் கிடைச்சிருக்கு. உடனே புறப்பட்டுப் போய் நாலு லாரியையும் புடிச்சிட்டாங்க. வழக்கும் போட்டாக.

பரணி: அப்புறம் என்னாச்சுளே!

காவேரி: அதுக்குள்ளயும் மீடியாக்காரங்க ஸ்பாட்டுக்குப் போய்ட்டாங்க. அந்தச் சமயம் சினிமாவுல வர்ற மாதிரியே கோட்டாட்சியர் தேன்மொழிக்கு போன். எடுத்தாரு.... "சார்... சார்'னாரு. முகமெல்லாம் வியர்வை. "இதோ இப்பவே விட்டுடுறேன் சார்'னு நாலு லாரியையும் மரியாதையோடு அனுப்பி வச்சிட்டாரு.

மெரினா: இன்னாத்துக்கும்மே விட்டேனு மீடியாக்காரங்க கேக்கலியா?

காவேரி: ஒருத்தர் கேட்டாராம். "ஒங்களுக்கு என்ன சும்மா கேட்டுட்டு போய்டுவீங்க. எனக்கு மின்ன இருந்த பிரியங்கா ஐ.ஏ.எஸ். நேர்மையாதான் இருந்தாங்க. என்ன கெடைச்சது? திருப்பத்தூருக்கு டிரான்ஸ்பர் கெடைச்சது'னு ஆப் த ரிக்கார்டா முனகிக்கிட்டே கிளம்பிட்டாங்களாம்.

ஏய்... தூத்தல் விழுகுதப்பா. எந்திரிங்க. மொட்டைக் கோபுரத்து முனியய்யாவை கும்பிட்டுவிட்டு கிளம்பலாம்.

-சக்தி

-து.ராஜா

-க.செல்வகுமார்

-அண்ணல்

nkn31-07-2018
இதையும் படியுங்கள்
Subscribe