சிவன் கோயில்கள், விஷ்ணு கோயில்கள், சிவா விஷ்ணு கோயில்களுக்குப் போயிருக்கிறோம். ஆனால் சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் உள்ள கோயிலுக்கு போனதேயில்லை. ஆகவே கன்னியாகுமரியில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் (தாணு = சிவன் +மால்=விஷ்ணு+அயன் = பிரம்மா) கோயிலுக்கு போக வேண்டும் என்று மதுரை மல்லிகையும் சிவகங்கை நாச்சியாரும் கோரிக்கை வைத்ததால், நக்கீரன் மகளிரணியின் கச்சேரி சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நடந்தது.
மெரீனா: இந்தக் கோயிலுக்கு மல்லிகையும் நாச்சியாரும் விரும்பியதால் வந்தோம். இன்னைக்கு (28-1-19) என்று பார்த்து சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் வந்திருக்கிறாங்களே...?
பகவதி: அடுத்த மாதம் கல்யாணம். அதான் தமிழ்நாட்ல உள்ள முக்கியமான கோயில்களுக்கெல்லாம் போய், தனது மணவாழ்க்கை சிறப்பா அமையணும்னு வேண்டிக்கிறாங்களாம். காலையில கன்னியாகுமரி பகவதி அம்மனைத் தரிசனம் செஞ்சிருக்காங்க. இப்ப இங்கே வந்து தாணுமாலையா
சிவன் கோயில்கள், விஷ்ணு கோயில்கள், சிவா விஷ்ணு கோயில்களுக்குப் போயிருக்கிறோம். ஆனால் சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் உள்ள கோயிலுக்கு போனதேயில்லை. ஆகவே கன்னியாகுமரியில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் (தாணு = சிவன் +மால்=விஷ்ணு+அயன் = பிரம்மா) கோயிலுக்கு போக வேண்டும் என்று மதுரை மல்லிகையும் சிவகங்கை நாச்சியாரும் கோரிக்கை வைத்ததால், நக்கீரன் மகளிரணியின் கச்சேரி சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் நடந்தது.
மெரீனா: இந்தக் கோயிலுக்கு மல்லிகையும் நாச்சியாரும் விரும்பியதால் வந்தோம். இன்னைக்கு (28-1-19) என்று பார்த்து சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் வந்திருக்கிறாங்களே...?
பகவதி: அடுத்த மாதம் கல்யாணம். அதான் தமிழ்நாட்ல உள்ள முக்கியமான கோயில்களுக்கெல்லாம் போய், தனது மணவாழ்க்கை சிறப்பா அமையணும்னு வேண்டிக்கிறாங்களாம். காலையில கன்னியாகுமரி பகவதி அம்மனைத் தரிசனம் செஞ்சிருக்காங்க. இப்ப இங்கே வந்து தாணுமாலையானைக் கும்பிடுறாங்க. இதை முடிச்சிட்டு மண்டைக்காடு பகவதியம்மனைக் கும்பிடப் போறாங்களாம்.
மல்லிகா: கூட, சௌந்தர்யாவோட அம்மாவும் வந்திருக்காங்களோ?
பகவதி: இல்லையில்லை. உதவியாளர்கள்தான் ரெண்டு பேரு வந்திருக்காங்க.
நாச்சியார்: அவரோட எண்ணம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.
மெரீனா: தூத்துக்குடி எம்.பி. தொகுதிக்கு கனிமொழி எம்.பி. தான் தி.மு.க. வேட்பாளர்ங்கிறது உறுதியாயிடுச்சு போல...
பரணி: ஆமாமா. தொகுதி முழுக்க பம்பரமா சுழன்று கிராமசபைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாரே... மாநிலங்களவையில் இருந்து அப்படியே மக்களவைக்கு போகணும்கிறது அவங்க முடிவு.
காமாட்சி: கனிமொழியை எதிர்த்து ஆளும்கட்சி கூட்டணி வேட்பாளரா ராதிகா சரத்குமார் களமிறங்கி விட்டார். வெள்ளிக்கிழமையன்னைக்கு ச.ம.க. தென்மண்டல மகளிரணிக் கூட்டம் தூத்துக்குடியில நடந்தது. மைக் பிடிச்ச ராதிகா, "ச.ம.க. வேட்பாளரான என் வெற்றிக்குப் பின்னால் மகளிரணி இருக்கிறது' அப்பிடீன்னு சொன்னார்.
மல்லிகை: அவுங்க ச.ம.க. வேட்பாளர் தானே? அப்புறம் எதுக்காக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்னு சொல்றீக?
பரணி: ராதிகா கூட்டத்துக்கான மண்டபம் உட்பட எல்லாச் செலவுகளையும் இழுத்துப் போட்டுச் செய்திருக்கிறது அ.தி.மு.க. மா.செ. சீனாதானா செல்லப்பாண்டியன்தானாம்.
பகவதி: அப்ப சரிதான்.
காமாட்சி: இன்னும் ரெண்டு மாதத்தில நடக்கப் போற எம்.பி. தேர்தலுக்காக கனிமொழியும் ராதிகாவும் களத்தில இறங்கியிருக்காங்க. சரி, ஆனால், எம்.எல்.ஏ. எலெக்ஷனுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கு. அ.தி.மு.க.வில ரெண்டு லேடீஸ் இப்பவே குழிபறிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
மெரீனா: வெரி இன்ட்ரஸ்டிங்... சொல்லுங்க.
காமாட்சி: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா லட்சுமிகாந்தன். இவங்க இப்ப அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தயவுல போளூர் ஒன்றியச் செயலாளர் பதவி வாங்கிட்டாங்க. ஜெயசுதாவுக்கும் முன்னால் அதே தொகுதி எம்.எல்.ஏ.வா இருந்தவங்க நளினி மனோகரன். இவங்க இப்ப தெற்கு மாவட்ட துணைச் செயலாளரா இருக்காங்க.
நாச்சியார்: கட்சியில முக்கிய நிர்வாகியாத்தானே இருக்காக. அப்புறம் எதுக்கு குழி பறிக்கணும்?
காமாட்சி: மாவட்டத்தில ஒரு லேடிக்குதான் எம்.எல்.ஏ. சீட்டுனு யாரோ சொல்லியிருக்காங்க. அதான், எப்படியாச்சும் எம்.எல்.ஏ. சீட்டை வாங்கணும். அதுக்காக சரிசமமா இருக்கிறவங்களை டம்மியாக்கணும்கிற சபதத்தில ஒருத்தருக்கு ஒருத்தர் நண்டுகளாகிட்டாங்க.
பரணி: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் மைதிலி ராஜேந்திரன் வீட்ல ஒரு துயரமான சம்பவம்னு கேள்விப்பட்டேனே...?
கங்கை: ஆமா, நானே சொல்லணும்னு நினைச்சேன். மைதிலி ராஜேந்திரன் மகன் ஜேம்ஸ் அரவிந்த், செங்கல்பட்டு பக்கத்தில ஒரு காலேஜ்ல பல் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிச்சார். லீவுல ஊருக்கு வந்துட்டு, சந்தோஷமா காலேஜுக்கு போனார். போன மறுநாள் "ஜேம்ஸ் அரவிந்த்' தற்கொலைனு ஹாஸ்டல்ல இருந்து தகவல் வருது. போய் பார்த்தால் கைகளில் காயமிருந்திருக்கு.
மல்லிகை: கொலையா?
கங்கை: தெரியலை. ஆனால் இவங்க சந்தேக மரணம்னு சொல்றாங்க. போலீசாரோ அதெல்லாமில்லை. தற்கொலைனு எழுதிக் கொடுங்கனு கட்டாயப்படுத்தியிருக்காங்க. சாலைமறியல்லாம் செய்தபிறகு வேண்டா வெறுப்பாக புகாரை வாங்கியிருக்காங்க.
மெரீனா: தற்கொலைனா... கடிதம் ஏதும் கிடைத்ததாமா?
கங்கை: என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லைனு ஒரு துண்டுசீட்டுக் கிடைச்சிருக்குனு போலீசார் சொல்றாங்களாம்.
பரணி: அரசியலில், ஒரு பெரிய கட்சியின் முக்கிய பொறுப்பிலுள்ளவங்களுக்கே இந்த நிலைமைனா... சாதாரண ஜனங்களுக்கு என்ன மரியாதை இருக்கும்.
மல்லிகை: போலீஸ் தரப்பில் விசாரிச்சீங்களா?
கங்கை: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக வெயிட் பண்றதா சொல்றாங்க.
மெரீனா: நாம யாருக்காக வெயிட் பண்றோம்? எழுந்திருங்க கிளம்பலாம்.
-எஸ்.பி.சேகர், து.ராஜா, மணிகண்டன், நாகேந்திரன்