துரை திருமலை நாயக்கர் மஹாலில் பவானியும் காமாட்சியும் கங்கையும் காத்திருந்தார்கள். அலங்காநல்லூர் மஞ்சுவிரட்டைப் பார்த்து அனுபவித்த மகிழ்ச்சியோடு வந்து மல்லிகையும் நாச்சியாரும் கச்சேரியில் ஐக்கியமானார்கள்.

Advertisment

பவானி: இந்த மாதிரி ஜல்லிக்கட்டையெல்லாம் எப்படிங்க உங்களால பார்த்து என்ஜாய் பண்ண முடியுது.

நாச்சியார்: எங்க ஊர்ல வடமஞ்சுவிரட்டு நடக்கும். அது ஒரு குட்டி கிரிக்கெட் கிரவுண்டு மாதிரி. பாதுகாப்பா வட்டமா உக்காந்து பார்த்து ரசிக்கலாம். ஒவ்வொரு காளையும் பத்துப் பதினைஞ்சு நிமிடம் விளையாடும். காளையையும் காளைகள் விளையாட்டையும் ரசிக்கலாம். ஜல்லிக்கட்டுனா... மின்னல் மாதிரி பறந்து ஓடிப்போகுதுக மாடுகள்... ரசிக்க முடியலை.

thinaikatchery

காமாட்சி: அலங்காநல்லூர்ல எத்தனை காளைகள் அவிழ்த்தாங்க?

Advertisment

மல்லிகை: 729 காளைகள் அவிழ்த்திருக்காங்க. ஆனா 1380 காளைகளுக்கு டோக்கன் குடுத்திருக்காங்க. 651 காளைகளை வாடிவாசலுக்கு அனுப்பாம திருப்பி அனுப்பியிருக்காங்க. நானூறு, ஐநூறு டோக்கன்களை அதிகாரிகளுக்கு கொடுத்துட்டாங்க போல. அவற்றில் ஏராளமான டோக்கன்கள் தலா ஐயாயிரத்திற்கு மாட்டுக்காரர்களிடம் விற்பனையாகியிருக்கு. இப்படி ஐயாயிரத்திற்கு டோக்கன் பெற்ற காளைகளைத்தான் முதலில் அவிழ்த்ருக்கிறாங்க.

கங்கை: திருப்பி அனுப்பப்பட்ட 651 காளைகளின் உரிமையாளர்களும் கொந்தளிச்சிருப்பாங்களே?

thinaikatchery

Advertisment

மல்லிகை: தொலைதூரங்களில் இருந்து லாரிகளில் காளைகளைக் கொண்டுவந்து டோக்கன் வாங்கி, ஒரு ராத்திரி முழுக்க தொழுவுல காத்துக் கிடந்திட்டு, திருப்பி அனுப்பினால் சந்தோசமாகவா போவாங்க? வயித்தெரிச்சலோட மண்ணைவாரித் தூத்திட்டுதான் போயி ருப்பாக.

காமாட்சி: இப்படித்தான் இலவு காத்த கிளியாக, மறுபடியும் எம்.பி. சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் திருவண்ணாமலை எம்.பி. வனரோஜா.

பவானி: யாரு? திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர்தானே! தன்னோட கணவருக் குக்கூடத் தெரியாம ஓ.பி.எஸ். அணிக்குப் போய் எடப்பாடி எதிரியானாரே... சிட்டிங் எம்.பி.யாச்சே மறுபடி சீட் கிடைக்காதா?

காமாட்சி: இந்தம்மாவுக்கு மறு படியும் சீட் கொடுத்தா எதிர்த்து நிற்பவர் படுத்துக்கொண்டே ஜெயிப்பார்னு திருவண்ணாமலை தெற்கு மா.செ. அமைச் சர் சேவூர் ராமச்சந்திரன் கமெண்ட் அடிக்கிறாராம்.

பவானி: கடமையைச் செய்யாம மறுபடியும் பொறுப்பை எதிர்பார்க்கிறது தப்புத்தானே? எங்க சேலத்துல அரசு சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை இருக்கு. அதுல கண் மருத்துவத்துறை தலைவரா சோழ மாதேவி இருக்காங்க. இவங்க அரசு ஆஸ்பிட்டல்ல இருக்கிறது கொஞ்சநேரம்தான். அந்த நேரத்துலயும் எந்த வேலையும் செய்யமாட்டாங்க. உதவி டாக்டர்கள்தான் நோயாளிகளை கவனிப் பாங்க. பாக்கி நேரமெல்லாம் சேலம் ஐந்து ரோட்ல இருக்கிற தனியார் மருத்துவ மனையிலதான் வேலை செய்வார்.

மல்லிகை: அரசு மருத்துவமனை முதல்வர் இந்தம்மாவை கண்டிக்கமாட் டாங்களா?

பவானி: எம்.கே. ராஜேந்திரன்தான் இப்ப பொறுப்பு முதல்வர். இவரை டாக்டர் சோழமாதேவி மதிக்கவே மாட்டாங்க. எதாயிருந்தாலும் மாவட்ட ஆட்சியர் ரோகிணியை நேரா சந்திச்சு டிஸ்கஸ் பண்றாரு. அதனால யாரையும் சட்டைசெய்ய மாட்டாங்க சோழமாதேவி.

நாச்சியார்: குடியரசு தின விழாவில் சிறந்த மருத்துவருக்கான விருது வாங்கின வர்தானே டாக்டர் சோழமாதேவி?

பவானி: இவங்களுக்கெல்லாம் எப்படித்தான் விருது கிடைக்குதோ? மருத்துவமனை முதல்வரோட பரிந்துரை இல்லாமலேயே சோழமாதேவியால் அந்த விருதை வாங்க முடிந்திருக்கிறதே... இந்த ஆஸ்பத்திரிக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டினு பெயர்மட்டும் பெரிய பெயர். ஆனால் இங்கே லேசர் சிகிச்சையோ, கண்மாற்று அறுவை சிகிச்சையோ நடப்பதில்லை. கேட்டால் வசதி இல்லைனு சொல்றாங்க.

காமாட்சி: பாண்டிச்சேரியில் பெண் எம்.எல்.ஏ. கார் கண்ணாடிகள் உடைப்புனு செய்தி வந்துச்சே? என்னாச்சாம்?

நாச்சியார்: அங்கே பெண் எம்.எல்.ஏ. இருக்காகளா?

கங்கை: புதுச்சேரி நெட் டப்பாக்கம் தொகுதியில ஜெயிச்ச வங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணி. பெயருக்குத்தான் விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றபடி நெட்டப்பாக்கம் எம்.எல்.ஏ.னு வலம் வருபவர் விஜயவேணியின் கணவர் வெங்கடேசன்தான்.

பவானி: அவரு பாண்டிச் சேரிக்காரரா?

கங்கை: வெங்கடேசனுக்கு விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலம் தாலுகா, மலையம்பெரு மாள் அகரம்கிற ஊரு. மாநிலம் வேற, வேறயா இருந்தாலும் ஊருகள் பக்கத்துல பக்கத்துல தான். ஆனால் பாண்டிக்காரங் களுக்கு தமிழ்நாட்டுக்காரன் எம்.எல்.ஏ. கெத்தோட வலம் வர்றது புடிக்கலை.

நாச்சியார்: விஷயம் அப்படிப் போகுதோ?

கங்கை: தமிழ்நாட்டுக் காரன் இங்கே வந்து நாட்டாமை செய்றதா? இந்தக் கோபத்துல தான் விஜயவேணியின் ஊர்க்கார ரான குணசீலனின் கோஷ்டியினர், பொங்கல் அன்னக்கி கல்லெறிஞ்சு கார் கண்ணாடியை நொறுக்கிட் டாங்க. எம்.எல்.ஏ. விஜயவேணி யும் ஆதரவாளர்களும் ராத்திரி எட்டுமணி வரை சாலை மறியல் பண்ணி குணசேகரன் கோஷ்டி யைச் சேர்ந்த 4 பேரை அரெஸ்ட் பண்ண வச்சாங்க.

பவானி: தொகுதிக்காக போராடாவிட்டாலும் தனக் காகப் போராடி ஜெயிச்சிருக் காரே பாராட்டத்தான் வேணும்...

-து.ராஜா, சுந்தரபாண்டியன், இளையராஜா