திண்ணை கச்சேரி! கலெக்டருக்கு எதிர்ப்பு! காம்ரேடு எம்.பி.க்கு வரவேற்பு!

thinaikatchery

சோழ மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆகச்சிறந்த படைப்பான கங்கைகொண்ட சோழபுரம் கோயிலையும் சுற்றுப்புறத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, மாவட்ட தலைநகரான அரியலூருக்கு வந்த நக்கீரன் மகளிரணியினர், அழகும் கம்பீரமும் கொலுவிருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.

thinaikatchery

அங்கே ஏதோ போராட்டம் நடந்துகொண்டிருந்தது. ""என்னானு பார்த்துவிட்டு வாங்க'' என கங்கையை அனுப்பிவிட்டு காத்திருந்தது நமது மகளிரணி. விசாரித்துக்கொண்டு வந்தார் கங்கை.

கங்கை: ஏய்... விஷயம் தெரியுமா? அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி தன்னோட ஆபீஸ்ல இருந்து, கார்ல வெளிய கிளம்பியிருக்காங்க. அவங்க காரை வழிமறிச்சுதான் போராட்டம் நடக்குது. காரை அங்கேயே விட்டுவிட்டு இறங்கி, ஆபீசுக்குள்ளே போய் ஒரு மணி நேரமா உட்கார்ந்திருக்காங்க கலெக்டரம்மா.

மெரீனா: போராட்டம் நடத்துறது யார்?

கங்கை: ஆட்சியர

சோழ மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆகச்சிறந்த படைப்பான கங்கைகொண்ட சோழபுரம் கோயிலையும் சுற்றுப்புறத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, மாவட்ட தலைநகரான அரியலூருக்கு வந்த நக்கீரன் மகளிரணியினர், அழகும் கம்பீரமும் கொலுவிருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார்கள்.

thinaikatchery

அங்கே ஏதோ போராட்டம் நடந்துகொண்டிருந்தது. ""என்னானு பார்த்துவிட்டு வாங்க'' என கங்கையை அனுப்பிவிட்டு காத்திருந்தது நமது மகளிரணி. விசாரித்துக்கொண்டு வந்தார் கங்கை.

கங்கை: ஏய்... விஷயம் தெரியுமா? அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி தன்னோட ஆபீஸ்ல இருந்து, கார்ல வெளிய கிளம்பியிருக்காங்க. அவங்க காரை வழிமறிச்சுதான் போராட்டம் நடக்குது. காரை அங்கேயே விட்டுவிட்டு இறங்கி, ஆபீசுக்குள்ளே போய் ஒரு மணி நேரமா உட்கார்ந்திருக்காங்க கலெக்டரம்மா.

மெரீனா: போராட்டம் நடத்துறது யார்?

கங்கை: ஆட்சியரைக் கண்டித்து மாவட்ட வருவாய் அலுவலர் சங்கத்தினர்தான் நடத்துறாங்க.

collector

மல்லிகை: வருவாய்த்துறையினர் தம் வலியை சொல்லவும் கூடுமோ? எதுக்காக?

கங்கை: கதை பெருசா இருக்கு. சுருக்கிச் சொல்றேன். அரியலூர் தாலுகா கருப்பூர் சேனாபதி கிராமத்தின் நிர்வாக அலுவலர் ராயர் 25 நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறார். சம்பளத்தில் பிடித்துவிட்டார்கள். சம்பளத்தில் ஏன் புடிச்சீங்கனு துணை வட்டாட்சியர் குருநாதனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் ராயர். 12 நாளுக்கு மேல் லீவு எடுத்தால் சம்பளத்தில கட் பண்ணச் சொல்லி அரசு உத்தரவுனு அவர் சொன்னார். தகராறு ஏற்பட்டுடுச்சு. அதுவே குரூப் மோதலாயிடுச்சு. வி.ஏ.ஓ.க்கள் 3 பேர் சேர்ந்து அடிச்சதில வருவாய் அலுவலர் கார்த்திகேயன் என்பவருக்கு கடுமையான காயம். தாக்கிய மூணு வி.ஏ.ஓ.க்களையும் சஸ்பெண்ட் செய்யச் சொன்னாங்க ஆட்சியர். இதைக் கண்டிச்சு வி.ஏ.ஓ. சங்கம் பணிப் புறக்கணிப்பு, உண்ணாவிரதம்னு ஆரம்பிச்சாங்க. உடனே சஸ்பென்ஷனை கேன்சல் பண்ணாங்க ஆட்சியர். ஏன் கேன்சல்னு கேட்டு இப்ப காரையே வழிமறிச்சு வருவாய் அலுவலர் தரப்பு போராடுது... பேச்சுவார்த்தை நடக்குது.

காமாட்சி: மேல்அதிகாரிகள் என்றால் அதுவும் பெண் அதிகாரிகள் என்றால் மிரட்டுவதற்கு யாரும் தயங்கிறது இல்லை. திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. உமாமகேஸ்வரிக்கு கொலைமிரட்டல் விட்டிருக்கு ஒரு கும்பல்.

மெரீனா: அது எந்தக் கும்பல்? என்ன பிரச்சினை?

காமாட்சி: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பக்கத்தில ஆவூர்னு ஒரு கிராமம். அங்கே அரசு புறம்போக்கு இடத்தை ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவ மக்கள் சுடுகாடாக பயன்படுத்துறாங்க.

பரணி: பட்டா உரிமைப் பிரச்சினையா?

mp

காமாட்சி: சுடுகாட்டு உரிமைப் பிரச்சினை. ஆவூர் ரோமன் கத்தோலிக் சபையிலிருந்து மூன்று குடும்பங்கள் பிரிந்து புதிதாக அங்கே பெந்தகொஸ்தே சபையை உருவாக்கினாங்க. அந்த மூன்று குடும்பங்களில் ஒருத்தர் இறந்துவிட்டார். அடக்கம் செய்யச் சென்றபோது ஆர்.சி. சுடுகாட்டில் பெந்தகொஸ்தே சடலத்தை புதைக்கக்கூடாதுனு பிரச்சினை.

மல்லிகை: சரியான பிரச்சினை?

காமாட்சி: சமாதானத்துக்கு திருவண்ணாமலை டி.எஸ்.பி. பழனியும் ஆர்.டி.ஓ. உமாமகேஸ்வரியும் வந்தாங்க. ஆர்.சி. சபையைச் சேர்ந்த சில பெண்கள் ஆர்.டி.ஓ. உமா மகேஸ்வரியை ரொம்ப அசிங்கமா, கொச்சையா பேசியிருக்காங்க. ஆர்.டி.ஓ.வை மட்டுமில்லாம, பெந்தகொஸ்தே சபைக்காரர்களுக்கும் கொலைமிரட்டல் விட்டாங்களாம்.

மெரீனா: புறம்போக்கு சுடுகாட்டுக்கே இத்தனை பிரச்சினையா? அவுங்க மேல ஆக்ஷன் எடுக்கலியா?

காமாட்சி: மூணு பெண்களையும் ஒரு ஆணையும் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. இன்னும் சிலர் தலைமறைவாயிட்டாங்க.

காவேரி: வரமுடியலையாம். கன்னியாகுமரியில் இருந்து நம்ம பகவதி ஒரு செய்தி. திருவட்டார் எக்ஸ் எம்.எல்.ஏ. லீமாரோஸ் பற்றி அனுப்பியிருக்கிறாங்க.

rto

மல்லிகை: லீமாரோஸ் மார்க்சிஸ்ட் கட்சியாச்சே. அவங்களைப் பற்றி என்ன?

காவேரி: தி.மு.க.-காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதியான மாதிரிதானே... இதே கூட்டணியில நின்னுதான் முன்னே பெல்லார்மின் ஜெயிச்சார். இப்பவும் அதே சீட்டை எனக்கு வாங்கித் தந்தால் ஈஸியா ஜெயிச்சிருவேன்... அப்பிடின்னு மாதர் சங்க உ.வாசுகியிடம் எம்.பி. ஆசையை சொல்லியிருக்காங்க. விஷயம் காம்ரேடுகள் மத்தியில் பரவிடுச்சு. லீமாரோஸ் எங்கே போனாலும் ""வாங்க காம்ரேடு எம்.பி.''னு கமெண்ட் வரவேற்பு கொடுக்கிறாங்க.

கங்கை: கம்யூனிஸ்டுகளும் எம்.பி. சீட் ரேஸ்ல குதிச்சிட்டாங்கனு சொல்லுங்க.

மெரீனா: அரியலூர் கலெக்டர் காரை மறிச்சது மாதிரி காம்ரேடு லீமாரோஸை யாரும் மறிக்கமாட்டாங்க... நாம கிளம்பலாமா?

-எஸ்.பி.சேகர், து.ராஜா, மணிகண்டன்

nkn261218
இதையும் படியுங்கள்
Subscribe