கோவை மாநகரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது கோவைக் குற்றாலம் என்று அழைக்கப்படுகின்ற சிறுவாணி அருவி. பல அடுக்குகளாக அமைந்த சுவையான அருவி. இயற்கையின் எழில்தோகை விரித்தாடும் இதை தரிசிப்பதற்காக வனத்துறையின் அனுமதியோடு நக்கீரன் மகளிரணியினரை அழைத்து வந்திருக்கிறார் வாணி.
கோமுகி: குன்னூர்ல சரஸ்வதி இருக்காங்க. அவங்களும் நம்ம கச்சேரியில கலந்துப்பாங்கனு சொன்னீங்க... காணலை.
வாணி: அவங்க இருந்திருந்தா அவங்க வீட்ல நமக்கு விருந்து வச்சிருப்பாங்க.
மெரீனா: அவுங்க யாரு? எங்கே போயிட்டாங்க?
வாணி: குன்னூர் நகரசபையின் ஆணையரா சரஸ்வதி இருந்தாங்க. அவங்களைத்தான் வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராக மாத்திப்போட்டாங்களே. சரஸ்வதியை மாத்துனதைக் கண்டிச்சுத்தான் குன்னூர் நகராட்சி ஊழியர்கள் 150 பேரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்காங்க.
நாச்சியார்: திரும்ப கொண்டு வரணும்னு போராட்டம் நடத்தும் அளவுக்கு அவங்க அவ்வளவு நல்லவுங்களா?
வாணி: குன்னூர் நகராட்சி மார்க்கெட்ல பல கடைக்காரர்கள் பல மாதங்களாக வாடகை கொடுக்காமல
கோவை மாநகரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது கோவைக் குற்றாலம் என்று அழைக்கப்படுகின்ற சிறுவாணி அருவி. பல அடுக்குகளாக அமைந்த சுவையான அருவி. இயற்கையின் எழில்தோகை விரித்தாடும் இதை தரிசிப்பதற்காக வனத்துறையின் அனுமதியோடு நக்கீரன் மகளிரணியினரை அழைத்து வந்திருக்கிறார் வாணி.
கோமுகி: குன்னூர்ல சரஸ்வதி இருக்காங்க. அவங்களும் நம்ம கச்சேரியில கலந்துப்பாங்கனு சொன்னீங்க... காணலை.
வாணி: அவங்க இருந்திருந்தா அவங்க வீட்ல நமக்கு விருந்து வச்சிருப்பாங்க.
மெரீனா: அவுங்க யாரு? எங்கே போயிட்டாங்க?
வாணி: குன்னூர் நகரசபையின் ஆணையரா சரஸ்வதி இருந்தாங்க. அவங்களைத்தான் வேலூர் மாநகராட்சி உதவி ஆணையராக மாத்திப்போட்டாங்களே. சரஸ்வதியை மாத்துனதைக் கண்டிச்சுத்தான் குன்னூர் நகராட்சி ஊழியர்கள் 150 பேரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்காங்க.
நாச்சியார்: திரும்ப கொண்டு வரணும்னு போராட்டம் நடத்தும் அளவுக்கு அவங்க அவ்வளவு நல்லவுங்களா?
வாணி: குன்னூர் நகராட்சி மார்க்கெட்ல பல கடைக்காரர்கள் பல மாதங்களாக வாடகை கொடுக்காமல் நடத்திக்கொண்டிருந்தார்கள். கண்டுபுடுச்சு வாடகையை வசூல் செஞ்சாங்க. பஸ் ஸ்டாண்டுல உள்வாடகைக்கு விட்டிருந்த 24 கடைகளுக்கு சீல் வச்சாங்க. உரிய லைசென்ஸ் இல்லாமலும் விதிகளை மீறியும் ஆளும்கட்சியினர் கட்டின கட்டடங்களுக்கும் சீல் வச்சாங்க.
காவேரி: ஆளும்கட்சிக்காரங்க மேல கைவச்சா சும்மா விடுவாங்களா?
வாணி: அதேதான். ஆளும்கட்சியினர் எம்.பி. கோபாலகிருஷ்ணன்கிட்ட பிரச்சினை செஞ்சாங்க. அப்புறமென்ன திறமையா செயல்பட்ட சரஸ்வதியை மாற்றிட்டாங்க. மாற்றியதைக் கண்டிச்சு துப்புரவுப் பணியாளர்களும் போராடுவதால் குன்னூர் நகரம் நாறத் தொடங்கியுள்ளது.
மெரீனா: நாறும்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. ஆம்பூர்ல இரண்டாம் வகுப்பு மாணவி ஹனீபா ஜாரா கழிப்பறைக்காக தன்னோட அப்பா மீது ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனு பற்றி தெரியுமா?
காமாட்சி: ரூம்போட்டு யோசிப்பாங்கனு கேள்விப்பட்டீங்களா? அதேதான் ஆம்பூர் நடராஜபுரத்தில அப்பா அம்மாவோட வசிக்குது அந்த ஜாரா. தன்னோட அப்பா சொல்லச் சொல்ல அந்தப் புகாரை அந்தக் குழந்தை கைப்பட எழுதியிருக்கு. அந்தக் குழந்தையை அது அம்மாதான் காவல்நிலையத்துக்கு கூட்டிப்போய் உதவி ஆய்வாளர் வளர்மதியிடம் கொடுக்கச் சொல்லியிருக்காங்க.
காவேரி: ஒவ்வொரு கிளாஸ்லயும் பர்ஸ்ட் ரேங்க் எடுத்தா கழிப்பறை கட்டித் தருவேன்னு ஜாராவோட அப்பா, பிராமிஸ் பண்ணலையா?
காமாட்சி: இப்ப அந்தக் குழந்தை படிக்கிறதே ரெண்டாம் கிளாஸ்தான்... இதுல என்ன வருஷா வருஷம் பிராமிஸ்? அந்தக் குடும்பத்துக்கு யாரோ மீடியாக்காரர் ஐடியா கொடுத்திருக்கிறார். விஷயம் கிளிக் ஆயிடுச்சு. விஷயம் மீடியாவுல பரபரப்பானதும் கலெக்டர்ராமன், ஆம்பூர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியை தொடர்புகொண்டு, அந்தக் குடும்பத்துக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்கச் சொன்னாரு. அவங்க கட்டிக் கொடுத்துட்டாங்க. அதோட அந்தக் குழந்தை ஹனீபா ஜாராவை தூய்மை இந்தியா திட்டத்தின் ஆம்பூர் நகர தூதராக நியமித்துவிட்டார்கள்.
மெரீனா: தூய்மை இந்தியாவின் ஆம்பூர் தூதர் ஜாராவின் அப்பாவைச் சந்திச்சீங்களா?
காமாட்சி: பலமுறை பார்க்கச் சென்றேன். பார்க்க முடியலை. சில அதிகாரிகள் அந்த அப்பா மீது வருத்தத்துல உள்ளார்கள். ஏன்னா... அவர் வீட்ல கழிப்பறை கட்டுறதுக்காக ஒர்க்ஆர்டரை 4 மாதம் முன்பே அந்த அப்பாவிடம் (இஹஸ்ஸானுல்லாவிடம்) கொடுத்து, "கழிப்பறையைக் கட்டி அதைப் புகைப்படம் எடுத்து எங்ககிட்ட கொடுத்துவிட்டு 8000 ரூபாயை பெற்றுக்கொள்ளுங்கள்'னு சொல்லியிருக்காங்க. ஆனால் அவர் கடைசிவரை கட்டவில்லை. கடைசியில சினிமாத்தனமா ஒரு ஸீன் கிரியேடிவ் செய்து நகராட்சியையே கட்ட வைத்துவிட்டார்.
காவேரி: உங்களுக்குப் பொறாமை.
நாச்சியார்: நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர் நஸ்ரீன் பானு பினாயிலைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாக்கல் தெரியுமா?
கோமுகி: அதுக்கு காரணம் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எழிலரசிதான். காலையில் பாரா நேரத்தில் அத்தனை பேர் முன்னால காவலர் நஸ்ரீன் பானுவை ரொம்ப கேவலமா திட்டி, "உன் குழந்தைகள் நல்லாவே இருக்கமாட்டாங்க. நாமசாப் போயிடுவாங்க'னு சாபமும் கொடுத்திருக்காங்க. அசிங்கப்பட்ட நஸ்ரீன் பானு, நேரா பாத்ரூமுக்கு ஓடி பினாயிலை எடுத்துக் குடிச்சிட்டாங்க. ரெண்டு மூணு ஆஸ்பத்திரிகளில் சேர்த்து எப்படியோ காப்பாற்றிவிட்டார்கள்.
காமாட்சி: இன்ஸ்பெக்டர் எழிலரசி ஏன் திட்டினாங்க?
கோமுகி: நெய்வேலி காவல் நிலையத்தில் இருந்து கடலூர் மகிளா கோர்ட்டுக்கு தினமும் குற்றப்பத்திரிகை கொண்டுபோறது காவலர் நஸ்ரின் பானுதான். "உங்க காவல்நிலையத்துல இருந்துதான் குற்றப்பத்திரிகைகள் சரியா தர்றதில்லை... ஏகப்பட்ட குளறுபடி செய்றீங்க. உங்க இன்ஸ்பெக்டர் ரொம்ப அலட்சியமா இருக்கிறார். போய் சொல்லும்மா'னு நீதிபதி சத்தம் போட்டுக் கடிந்துகொண்டாராம்.
நீதிபதி கண்டித்ததை இன்ஸ்பெக்டர் எழிலரசியிடம் நஸ்ரீன் பானு சொன்னாராம். அதை தாங்கிக்கொள்ள முடியாத இன்ஸ்பெக்டர், "உன்னாலதான் நீதிபதியிடம் எனக்கு கெட்ட பெயர்'னு சொல்லித்தான் சகட்டுமேனிக்கு திட்டி தற்கொலைக்கு தூண்டியிருக்கிறார்.
மெரீனா: கடைசியில என்னாச்சு?
கோமுகி: நஸ்ரீன் பானுவின் தற்கொலை முயற்சியைக் கூட ஃபுட் பாய்சன்னு மாற்றிவிட்டாராம் இன்ஸ் எழிலரசி.
வாணி: எந்திரிங்க கிளம்பலாம்... அஞ்சுமணிக்கு மேல சிறுவாணி அருவியில நிற்க அனுமதிக்கமாட்டாங்க.
-து.ராஜா, அருள்குமார், சுந்தரபாண்டியன்