உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுடைய ஊர் பிச்சாவரம். பித்தர்புரம் என்பதே பிச்சாவரம் ஆனதெனக் கூறுகிறார்கள். இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகை நயந்தபடி நக்கீரன் மகளிர் அணியினர்.
தங்கள் அரசியல் கச்சேரியையும் கலகலப்போடு நடத்தினார்கள்.
மல்லிகை: பெண்ணாடம் சிறுமி கர்த்தவ்யாவை கற்பழிக்க முயன்ற கிழவன் சங்கரநாராயணனுக்கு "பத்து வருட சிறை! 20 ஆயிரம் அபராதம்'னு ஆஸ்பத்திரிக்கே போய் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி லிங்கேஸ்வரன்னு சொல்றாங்களே...? என்னத்துக்கு நீதிபதி ஆஸ்பிடலுக்கு போனாரு?
கோமுகி: அந்தக் கிழவன் பாலியல் பலாத்காரத்தை ஒரு பொழுதுபோக்காகவே செய்திருக்கிறான். இந்தச் சிறுமி தன் கூடப்பிறந்த அண்ணனோட பேத்திதான். ரத்தம் வர்ற மாதிரி அவன் கையைக் கடிச்சிக் கதற வச்சுட்டு தப்பிச்சு ஓடிவந்திருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியோட அம்மா காயத்ரி கொதிச்சுப் போயிட்டாங்க.
மெரீனா: அவுங்கதான் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததா?
கோமுகி: சங்கரநாராயணன் வசதியான ஆசாமி. காயத்ரி போகுமுன்னே கிழவனோட கரன்ஸி

கோமுகி: சங்கரநாராயணன் வசதியான ஆசாமி. காயத்ரி போகுமுன்னே கிழவனோட கரன்ஸி போயிடுச்சு. உயரதிகாரிகள் கூட கிழவனுக்கு சப்போர்ட்டாம். கடைசியா மீடியாவைத் தேடிப் போனாங்க காயத்ரி. அப்புறம்தான், புகாரை எடுத்தாங்க. மகளிர் நீதிமன்றத்துல வழக்கு நடந்துச்சு. 50 லட்சம் ரொக்கம் தர்றேன், 2 ஏக்கரை எழுதி வைக்கிறேன்னு காயத்ரிக்கு ஆசை காட்டி பேரம் பேசினாராம் கிழவன். சிறுமியோட அம்மா காயத்ரி, போர்க்குணத்தோட நின்னாங்க.
மல்லிகை: நீதிபதி எதுக்காக ஆஸ்பத்திரிக்கு போய் தீர்ப்பை வாசிச்சாரு?
கோமுகி: 22-ஆம் தேதியன்னைக்கு "சங்கரநாராயணன் குற்றவாளி'னு அறிவிச்ச நீதிபதி, "தண்டனை விவரம் நாளை'க்குன்னு சொன்னாரு. இதைக் கேட்டதும் மயங்கி விழுந்துட்டாரு காமுகக்கிழவர். அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. மறுநாள் கோர்ட்டுக்கு அவரைக் கூட்டி வரலை. அதனாலதான் மருத்துவமனைக்கே போய் தண்டனையை வழங்கியிருக்கிறார்.
மெரீனா: எதையும் கொடுக்க வேண்டியவர்கள் நேரில் கொண்டு போய் கொடுக்கும் போது அதற்கான மரியாதையே வேற தானே?
மல்லிகை: ஆமா, அதே மாதிரி மரியாதை இப்ப தே.மு.தி.க. பிரேமலதா விஜயகாந்துக்கு திண்டுக்கல், கொடைக்கானல் பகுதியில கிடைச்சிருக்கே.
கோமுகி: நல்ல வரவேற்போ?
மல்லிகை: கஜா புயலின் தாக்கம் திண்டுக்கல்லிலும் கொடைக்கானலிலும் ஏற்பட்டதே... அரசாங்கத்தின் அரைகுறை கவனம்கூட நாகை, திருவாரூர், புதுக்கோட்டையிலதான் இருக்கு. கஜா புயலால பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், வேடசந்தூர், கொடைக்கானல், கீழ்மலை, மேல்மலை, கல்லறைமேடு, பேத்துப்பாறை, புதுக்காடுனு பல ஊர்களுக்கும் போன வாரம் பிரேமலதா தன் மகன் விஜய பிரபாகரனோடும் தம்பி சுதீஷோடும் போனாங்க. ஆயிரக்கணக்கான மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனினு பொருட்களைக் கொடுத்தாங்க. போன எடத்தில எல்லாம் அண்ணி வாழ்க, இளைய கேப்டன் வாழ்க கோஷம்தான்.
மெரீனா: ஆளும் கட்சியைக் கடுமையா தாக்கிப் பேசுனாங்க போல?
மல்லிகை: விட்டு வைப்பாகளா? வழக்கம் போல சூடு சொரணையை தட்டியெழுப்புற மாதிரிதான் பேசுனாக. முதலமைச்சர் எடப்பாடிக்கு திராணியில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிற துணிச்சலில்லை. ஒவ்வொரு ஊர்லயும் அமைச்சர்களையும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் ஓட ஓட விரட்டுறாங்க. ஆயிரம் கோடி நிவாரணம்னு அறிவிச்ச எடப்பாடி, இதுவரை நிவாரணப் பணம் கொடுக்கலை.
மத்திய அரசிடம் வாங்கும் நிதியில் பாதியை கொடுத்துவிட்டு மீதியை சுருட்டுவதற்காக காத்திருப்பதாக மக்கள் சொல்றதாச் சொல்லி நிறைய கிளாப்ஸ் வாங்கினாக பிரேமலதா.
பவானி: தொண்டர்கள் மனதை தொடுவதில் பெரிய ஆச்சரியமில்லீங்க. ஆனால் மக்கள் மனதைத் தொடும் அதிகாரிகளைப் பற்றிப் பேசியே ஆகணும். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னோசென்ட் திவ்யாவை இப்ப பணியிடம் மாற்றம் செய்யக்கூடாதுனு உச்சநீதிமன்றமே உத்தரவு போட்ருக்குங்க.
மெரீனா: ஆமா. நானும் நியூஸ்ல கேட்டேன். முழு விபரம் தெரியலை. சொல்லுங்க.
பவானி: ஊட்டி அருகிலுள்ள முதுமலை பொக்காபுரம், மாயார், வாழைத்தோட்டம் ஆகியவை புலிகள் காப்பகம் பகுதிக்குள் வருதுங்க. இந்த வழியிலதான் யானைகள் இடம் பெறுகின்றன. ஒண்ணு, ரெண்டு இல்லை. 48 ஆயிரம் யானைகள் செல்லுகின்ற பாதையிது. யானைகளுக்கு உரிய இந்தப் பாதையை ஆக்கிரமித்து 49 தங்கும் விடுதிகளை கட்டியிருக்காங்க அரசியல் செல்வாக்குள்ள வி.ஐ.பி.கள்.
மல்லிகை: யானைகளின் வழித்தடங்களில் உள்ள விடுதிகளுக்கு உடனே சீல் வைக்கணும்னும் ஆக்கிரமிப்புகளை அகற்றணும்னும் கலெக்டருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு கூட போட்டதே...
பவானி: அத்தனை விடுதிகளுக்கும் இன்னோசென்ட் திவ்யா சீல் வச்சிட்டாங்க. கலெக்டரோட நடவடிக்கைகள் மிகக் கடுமையானதாலதான் அவங்களை உடனே டிரான்ஸ்பர் பண்ணணும்னு வி.ஐ.பி.கள் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சாங்க.
கோமுகி: வி.ஐ.பி.க்கள்னா?
பவானி: ஊட்டி முழுக்க இருக்கிற விடுதிகள் யார் யாருடையது தெரியுமா? சேலஞ்சர் துரை, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், ஆ.ராசா, சுப்ரியா தாகூர், பாஸ்கர பாண்டியன், அர்ச்சனா பட்நாயக், நடிகர் மிதுன் சக்கரவர்த்தினு எல்லாமே பெரிய ஆளுங்களோடு சம்பந்தப்பட்டது. இவங்க அழுத்தம் கொடுத்ததால அரசும், திவ்யாவை டிரான்ஸ்பர் பண்ண தயாராயிடுச்சு. இதை தெரிந்து கொண்ட வக்கீல் யானை ராஜேந்திரன், வழக்குப் போட்டு கலெக்டரை மாற்றக்கூடாதுனு உத்தரவு வாங்கிவிட்டார்.
கோமுகி: நீதியும் மக்களும் இப்படிப்பட்ட அதிகாரிகளைத்தான் இப்ப நம்புறாங்க.
-சக்தி
-அருள்குமார்
-சுந்தரபாண்டியன்