மாமல்லையில், எஞ்சியிருக்கும் ஏழாவது கடற்கோயில், பாண்டுவின் புத்திரர்களுக்கு அணுவளவும் தொடர்பற்ற பஞ்ச பாண்டவர் ரதங்கள், மகிஷாசுரமர்த்தினி சிற்பம், சிவன் கோயில், பெருமாள் கோயில் இவற்றைக் காட்டிலும் "வெண்ணைக்கல்'தான் நக்கீரன் மகளிரணியை அதிகம் கவர்ந்தது. அதனடியில் அமர்ந்து கதைக்கத் தொடங்கினார்கள் நமது மகளிர் அணியினர்.

thinaikatchery

பரணி: பாண்டிச்சேரியில வடக்கு எஸ்.பி. ரட்சனா சிங்குக்கும், அவுங்களுக்கு உயரதிகாரியான அபூர்வா குப்தாவுக்கும் என்னமோ மோதல்னு கேள்விப்பட்டேன்.

Advertisment

கோமுகி: உனக்கும் தெரிஞ்சிருச்சா? ரட்சனாசிங் கெத்தா வலம் வர்றதை அபூர்வாவால் பொறுத்துக்க முடியலை. கள்ள லாட்டரி விற்கிறவங்களையும் ஏஜெண்டுகளையும் நாங்கதான் புடிச்சோம்னு போன மாதம் பிரஸ்மீட் கொடுத்தாங்க ரட்சனாசிங். இதப் பார்த்த எஸ்.எஸ்.பி. அபூர்வாகுப்தா ரொம்ப கடுப்பாயிட்டாங்களாம்.

மெரீனா: ஏம்ப்பா இதெல்லாம் ஒரு குற்றமா?

கோமுகி: எனக்குத் தெரியாம நீ எப்படி பிரஸ்மீட் கொடுக்கலாம்னு எகிறிக் குதிச்சாகளாம். பார்க்கிறேன்னு எச்சரிக்கை விட்டாராம். எல்லாத்துக்கும் மேல, எஸ்.பி. ரட்சனாசிங்குக்கு தெரியாம அவரோட ஏரியாக்களான ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை ஏரியாக்களில் விபச்சார ரெய்டு நடத்தி, வடக்கு ஏரியாவுல சட்டம்-ஒழுங்கு சரியில்லைனு ஆக்ட் பண்ணிருக்கு.

Advertisment

மல்லிகை: இன்னொரு ஆபீஸரைக் காயப்படுத்து றதுக்கு சிலர் இப்படித்தான் செய்வாங்க.

கோமுகி: அதேதான். எஸ்.பி.ரட்சனாசிங் மனசொடஞ்சு போயிட்டாங்களாம். இப்ப டில்லிக்கு பணி மாறுதல் கேட்டிருக்காங்களாம்.

மெரீனா: ரொம்ப ஆர்வத்தோட ஆய்வுகளை நடத்திக்கொண்டிருக்கிற கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இளம்செல்விக்கு ஏகப்பட்ட எதிர்ப்பு வருதாமே?

thinaikatcheryகோமுகி: பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் பணமோசடிகள் பயங்கரமா நடந்திருக்கு. எக்கச்சக்க புகார்கள். தில்லை விடங்கன், வடபாதி, வடகரை, மங்களம்பேட்டை, சி.பி.குப்பம் இங்கெல்லாம் ஆய்வு செய்து மோசடிப் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார்.

பரணி: மோசடி செய்து அகப்பட்ட வங்க ஆளும் கட்சியினர்... அவங்க மிரட்டல் விடுறாங்க சரிதானே?

கோமுகி: சரிதான். ஆனால் இந்த மிரட்டலுக்கெல்லாம் இளம்செல்வி பயப்படலை. நாலு நாளைக்கு முன்னாலே தொளார் கூட்டுறவு வங்கிக்குப் போனாங்க முன்னாள் செயலாளர் வேலாயுதமும், கேஷியர் பரமசிவமும். அடகு நகைகளை எல்லாம் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடிச்சாங்க. இப்போதைய செயலாளர் செல்வராஜ், தலைவர் கனகசபை, மற்ற ஊழியர்களோடு சேர்ந்து ஐந்து லட்சத்தை திருடிப் பங்கு போட்டுக் கொண்டதையும் கண்டுபுடிச்சிட்டாங்க.

மெரீனா: கண்டுபிடிச்சா போதுமா?

கோமுகி: கண்டுபிடிச்சு, புகார் கொடுத்து, மூணு பேரை அரெஸ்ட் பண்ணி சிறைக்கு அனுப்பி வச்சிட்டார்ல...

மல்லிகை: தூத்துக்குடி தெற்கு, வடக்கு மாவட்டங்களின் மகளிர் அணி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க சென்ற தி.மு.க. மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னால் சலசலப்பென்று காதில் விழுந்துச்சு?

பரணி: தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். வடக்கு மா.செ. தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன். அவங்கவங்க மாவட்டத்தில வேலை செய்றதை விட அடுத்த மாவட்டத்துக்குள்ள நொழைஞ்சு அலப்பறை பண்றதுதான் அதிகமாம். கலந்தாய்வுக் கூட்டத்துல அனிதாவும் கீதாஜீவனும் கலந்துகொண்டாங்க. கூட்டத்தை நடத்தினார் கனிமொழி. அப்பத்தான் தெற்கு மகளிர் நிர்வாகிகள், வடக்கு கீதாஜீவனைப் பற்றியும் வடக்கு மகளிர் நிர்வாகிகள், தெற்கு மா.செ. அனிதா பற்றியும் புகார்களை வாரி வழங்கினாங்க.

மெரீனா: கனிமொழி என்ன சொன்னாங்க?

பரணி: மற்றவங்க ஏரியாவுல தலையிடுறது என்ன நாக ரிகம்னு சத்தம் போட்டு, ரெண்டுபேரையும் கலங்க வச்சிட்டாங்களாம்.

காவேரி: எழுந்திருங்கப்பா... பல்லவன் மகேந்திரவர்மனுக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பலாம்.

-எஸ்.பி.சேகர், சுந்தரபாண்டியன், நாகேந்திரன்