தீபாவளிக்கு மறுநாள் மாலை சென்னை மெரீனாவில் கட்டுக்கடங்கா கூட்டம் இருக்கும் என்று, சாந்தோமில் உள்ள கலங்கரை விளக்கம் அருகில் வெள்ளி மணற் பரப்பில் கூடியது நக்கீரன் மகளிரணியின் கேபினெட்.

மெரீனா: நெட்ல ஒரு சேதி படிச்சேன். படிக்கிறதுக்கே நல்லாருந்துச்சு. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ஆட்சியர் பெயர் ஸ்வாதி. இவங்க கணவர் நிதின் பதோரியா. அல்மோரா மாவட்டத்தின் ஆட்சியர்.

thinaikatchery

Advertisment

காவேரி: ரெண்டுபேரும் ஏதாச்சும் சாதனை செய்திருக்காங்களா?

மெரீனா: சாதனையெல்லாம் ஒண்ணும் கிடையாது. ரொம்பச் சாதாரண விஷயம்தான். செய்த சாதாரண விஷயம், சாதனை விஷயங்களைக் காட் டிலும் பெருமையைக் கொடுத்திருக்கு. இவர்கள் தங்கள் மகள் அம்யுதாவை கோபேஷ்வர் நகரிலுள்ள அரசு அங்கன்வாடி மையத்தில சேர்த்திருக்காங்க.

மல்லிகை: வாவ்... அருமை அருமை... ஆமா எதுக்காக, எதை எதிர்பார்த்து அரசு அங்கன் வாடியில் சேர்த்தாங்களாம்.

Advertisment

மெரீனா: "அரசு அங்கன்வாடி மையங்களைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் அணுகுமுறையில் மாற்றத்தை உண்டாக்கணும்னு நினைத்தோம். அதோடு எதிர்காலத்தில் எவரோடும் சமமாய் எளிதாய்ப் பழக முடியும் என்று நம்பினோம்' என்று சொல்லி யிருக்கிறார் கலெக் டர் ஸ்வாதி நிதின்.

கோமுகி: நல்ல நிர்வாகி களை நாமும் பாராட்டுவோம். ஒரு பல்கலை ஏரி யாவில இருந்து என் வாட்ஸ் அப்புக்கு ஒரு ஆடியோ வந்திருக்கு. நான் கேட்டுட்டேன். அவ்வளவு ஆரோக்கியமான விஷயமில்லை. ஆனால் ஒண்ணு. இந்தப் பல்கலைப் பேராசிரியர்கள் பலர் எவ்வளவு சந்தி சிரித்தாலும் திருந்துவதில்லை.

thinaikatchery1மெரீனா: என்ன... "மீ டூ' சமாச்சாரமா?

கோமுகி: இது "வீ டூ' சமாச்சாரம். அந்த பல்கலையின் ஒரு துணைத்தலைவர் பி.எச்.டி. ஆய்வு மாணவியை காதல் நாயகியாக்கி ஊர் ஊரா சுத்தியிருக்கிறார். ஒரு ஆறு மாதம் கழித்து அந்தத் துறைத் தலைவருக்கும் ஒரு பேராசிரியைக்கும் காதல் அரும்பியிருக்கு. அது மாணவிக்குத் தெரிந்த தும் ஒரு ஊடல் அரங்கேறுது. துறைத் தலைவர் காதல் மாணவியிடம் சமாதானம் செய்கிறார். அதை அந்த மாணவி ரிகார்டிங் செய்திருக்கிறார். செல்போன் சர்வீசுக்கு போன இடத்திலிருந்து இந்த ஆடியோ லீக்காகி, பல்கலை ஏரியா முழுக்க சிவதாண்டவம் ஆடியிருக்கு. பயந்துபோன துறைத்தலைவர் பதவியை ராஜினாமா பண்ணியிருக் கிறார். பிறகு மாணவி புகார் செய்யலைனு தெரிஞ்சதும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்கியிருக்கிறாரு.

மல்லிகை: சரி கோமு. வாட்ஸ்அப் ஆடியோவை ஆன் பண்ணு... கேட்கலாம். (ஆன் செய்கிறார் கோமு)

ஆண் குரல்: சொன்னா கேளு டார்லிங். நான் எல்லாத்தையும் விட்டுட்டேன். உன்னை மட்டுந்தான் என் நெஞ்சில் நிறுத்தியுள்ளேன்.

பெண்குரல்: இதுவரை நீங்க சொன்ன எல்லாத்தையும் நம்பியதால்தான் என்னை முட்டாளாக்கியிருக்கீங்க.

ஆண் குரல்: எல்லாத்தையும் மற. இப்ப ஒரேயொரு முத்தம் தா.

பெண் குரல்: நேத்து அழைச்சிட்டுப் போனீங்களே அவங்ககிட்ட கேளுங்க தருவாங்க.

ஆண் குரல்: அவங்க அவங்களா வந்தாங்க. மிளகாய்ப் பொடியோடு வந்தாங்க.

பெண் குரல்: நீங்க கூப்பிடாம உங்க வீட்டுக்கு அவங்க வந்தாங்களா? நான் நம்பணுமா?

ஆண் குரல்: நான் திருந்திட்டேன். இனிமே தப்பு பண்ணமாட்டேன். ப்ளீஸ் முத்தம்? (இப்படி பத்து நிமிடங்கள் சிணுங்கலும் முனகலுமாய் தொடருகிறது வாட்ஸ் அப் தொலைபேசி உரையாடல்)

நாச்சியார்: இப்படிப்பட்ட கவுச்சி வாத்தியார்களால்தான் பல்கலைக் கழகங்களின் மானம் மரியாதை எல்லாம் பறக்குது.

மெரீனா: புளியங்கண்ணுத் திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் சீட் கிடைத்து விட்டதாம். இதற்காக பெரிய சட்டப் போராட்டமே நடத்தியிருக்கிறார் தமிழ்ச்செல்வி.

மல்லிகை: நர்ஸிங் படிப்புக்கு ஏன் போராடணும்?

மெரீனா: தமிழ்ச்செல்விக்கு அரசு கல்லூரியில் பெண்கள் பிரிவில் இடம் கிடைத்தது. ஆனால், தானொரு அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருநங்கை என்றும் திருநங்கை என்ற முத்திரையோடு தனக்கு செவிலியர் இடஒதுக்கீடு வேண்டுமென்றும் போராடினார். மருத்துவக் கல்வி சுகாதாரத்துறை என மனு போராட்டம் நடத்தி உரிமை வேண்டினார். அவர்கள் கண்களை மூடிக்கொண்டதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஒதுக்கீட் டைப் பெற்றார்.

கோமுகி: உயர்நீதிமன்றம் சொல்லித்தான் சீட் கிடைத்ததோ?

மெரீனா: உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சமயத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை தாமாக எடுத்துக்கொண் டது. வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் திருநங்கை என்ற உரிமையோடு செவிலியருக்கு படிப் பதற்கு அனுமதி அளித்து உத்தர விட்டார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலரிடம் அந்த உத்தரவு கடிதத்தை கொடுத்து கல்லூரியில் சேர்ந்துவிட் டார் திருநங்கை தமிழ்ச்செல்வி.

கோமுகி: பலப்பல கப்பல்கள் துறைமுகம் சேர்வதற்கு உயர்நீதி மன்றங்களே கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறது.

-சக்தி, ராஜா