டகிழக்குப் பருவமழையின் அறிகுறியாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. வெளியில் போராட்டம் ஏதுமில்லை. உள்ளே மக்களும் அதிகமில்லை. வள்ளுவர் கோட்டத்திற்குள் அமர்ந்திருக்கிறார்கள் "நக்கீரன்' மகளிரணியினர்.

மல்லிகை: நீங்க ரெண்டுபேரும் குடும்பத்தோடு ஒகேனக்கல் போய் வந்திருக்கீங்க. அனுபவமும் சந்தோஷமும் கூடியிருக்கும். வேற ஏதாச்சும் விசேஷம் உண்டா? (மெரீனாவையும் காமாட்சியையும் பார்த்துக் கேட்டார்)

thinaikatchery

மெரீனா: இப்பதான் முதல்தடவை போனோம். என்ஜாய் பண்ண முடிந்தது. அந்த அருவி... பரிசல் சவாரி ரெண்டுமே குடும்பத்துல எல்லாருக்கும் பிடிச்சதுதான். வெளிநாட்டுக்காரங்க நிறைய வர்றாங்க. அங்கே மீன் வாங்கினோம். சமைச்சுத் தரவும், வறுத்துத் தரவும் பெண்கள் இருக்காங்க. ஒரு கிலோ மீன் 130 ரூபாய்தான். ஆனால் அதை வறுக்கிறதுக்கு இருநூறு ரூபாய் வாங்கிட்டாக.

காமாட்சி: மீன் சமாச்சாரமெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. மனைவி மக்களோட போறாங்களேனு கூட நினைக்காம "அண்ணே சரக்கு வேணுமா... வேற ஏதாச்சும் வேணுமா'னு எலிமெண்ட்ரி ஸ்கூல் பையனுங்களை விட்டுக் கேக்குறாங்க. முச்சந்திக்கு முச்சந்தி, தெருவுக்குத் தெரு ஏதாவது ஒரு வீட்ல பெண்கள் டாஸ்மாக் சரக்கு விக்கிறாங்க. முதலைப்பண்ணை, ஆத்தங்கரை, அருவிக்கரை எங்கே பார்த்தாலும் காலிபாட்டில்களும் பிளாஸ்டிக் டம்ளர்களும்... கூட்டம் கூட்டமா உக்கார்ந்து குடிக்கிறாங்க. உண்மையிலேயே பயமாயிருக்கு.

thinaikatcheryபவானி: ஏனுங்க இதெல்லாம் வருஷக்கணக்கா கேள்விகேப்பாரு இல்லாம நடக்கிறதுதானுங்க. கலெக்டரும் எஸ்.பி.யும் நேரடியா தலையிட்டாதான் தடுக்க முடியும்.

மெரீனா: கோமுகி! உங்க ஏரியா செய்தி ஒண்ணு என் காதுல விழுந்துச்சு. உண்மையா பொய்யானு சொல்லுங்க.

கோமுகி: என்ன சேதி?

மெரீனா: ஜெயங்கொண்டம், பெரம்பலூர், காரை ஆஸ்பிடல்களில் சமையல் உதவியாளர் செக்யூரிட்டி, ஸ்டோர் கீப்பர்னு பல்நோக்கு பணியாளர்கள் வேலைக்கு 25 பேரிடம் மூணு லட்சம், நாலு லட்சம்னு வாங்கிட்டு வேலை கொடுத்திருக்கிறதா மேல்மட்டத்துக்கு புகார் போயிருக்கிறதாமே?

thinaikatchery

கோமுகி: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் மருத்துவமனை இணை இயக்குநரா சசிகலானு ஒரு மேடம் இருக்காங்க. நீங்க சொல்ற பல்நோக்குப் பணியாளர் வேலைகளை அந்த மூணு ஆஸ்பத்திரிகளில் எட்டு வருஷம், பத்து வருஷமா நிறையபேர் டெம்ப்ரவரியா செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்கள்ல யாரையும் கன்ஃபார்ம் பண்ணாம, வெளியில இருந்து ஆட்களை வேலைக்குச் சேர்த்துட்டாங்க அந்த சசிகலா மேடம். புகார்கள் போனதால, தனக்குக் கீழ் பணியாற்றிய செபஸ்டியன், சக்திவேல்னு ரெண்டுபேரை டிரான்ஸ்பர் பண்ணிட்டதா கேள்வி. மற்றபடி பணம் புழங்கியது பற்றி எனக்குத் தெரியலை.

மல்லிகை: எட்டு வருஷம், பத்து வருஷம்னு பத்தாத கூலிக்கு வேலை பார்த்தவங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்த வேலைகளுக்குப் புதிய ஆட்களை நிரந்தர வேலைக்கு சேர்த்திருக்காங்கனா என்ன அர்த்தம்?

கோமுகி: மூணு லட்சம் வாங்கிட்டுத்தான் வேலை கொடுத்தேன் என்றோ, நாலு லட்சம் கொடுத்துதான் வேலை வாங்கினேன் என்றோ யாராவது சொல்லுவாங்களா? ஆதாரமில்லாமல் சொல்லலாமா?

thinaikatcheryகாமாட்சி: முன்னாள் அமைச்சர் சேலம் விஜயலட்சுமி பழனிச்சாமி அரசியல் துறவறம் பெறப்போவதாகச் சொல்றாங்களே?

பவானி: ஆமாமுங்க... எம்.ஜி.ஆரின் கண்டுபிடிப்பு அவங்க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. வீரபாண்டி ஆறுமுகத்தை தோற்கடிச்சவங்க. 2011-ல் தனது தொகுதியில் மகன் வீரபாண்டி ராஜாவை நிறுத்திவிட்டு, சங்ககிரியில் போட்டியிட்டார் தி.மு.க. வீரபாண்டி ஆறுமுகம். சங்ககிரியில் விஜயலட்சுமி பழனிச்சாமியை இறக்கி மீண்டும் வீரபாண்டி ஆறுமுகத்தை தோற்கடிக்க வைத்தாங்க ஜெயலலிதா. அப்படி தலைமையின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர் இன்னக்கி ஏண்டா இந்தக் கட்சியில இருக்கிறோம்னு நொந்துபோயிருக்காங்க.

மெரீனா: செம்மலையும் விஜயலட்சுமி பழனிச்சாமியும் ஓ.பி.எஸ்.ஸை நம்பிப் போனவங்கதானே?

பவானி: ஆமாமுங்க. எடப்பாடிக்கும் விஜயலட்சுமிக்கும் எப்பவுமே புடுச்சுக்கிறாதுங்க. அதனாலதான் உடனே ஓ.பி.எஸ். பக்கம் போனாங்க. இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் இணைஞ்சதும் செம்மலையை தன் பக்கத்துல இழுத்து வச்சுக்கிட்ட ஓ.பி.எஸ்., விஜயலட்சுமி பழனிச்சாமியை நட்டாத்துல விட்டுட்டாருங்க. கட்சிக்காரர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடம் எந்த மரியாதையும் இல்லாததாலதான், அரசியல்ல இருந்து ஓய்வு பெறப்போறதா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க விஜயலட்சுமி பழனிச்சாமி.

மல்லிகை: எல்லாத்துக்கும் எல்லாருக்கும் ஓய்வு கட்டாயம் வேணும். தீபாவளிக்கு எல்லாரும் வெடி வாங்கிட்டீங்களா?

காமாட்சி: வாங்கணும். வாங்கி, பாதிச்சாமத்துல எந்திரிச்சு வெடிவெடிச்சு நீதியையும்... சட்டத்தையும் பாதுகாத்தாகணும். தூறல் விட்ருக்கு... கிளம்பலாமா?

-எஸ்.பி.சேகர், இளையராஜா