திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் பயணித்தபடியே தங்கள் அலசல்களைத் தொடர்ந்தனர் நக்கீரன் மகளிரணியினர்.

Advertisment

காமாட்சி: நம்ம திருவண்ணாமலை எம்.பி. வனரோஜாவைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியுமா?

மெரீனா: தானுண்டு தனது பதவி உண்டு, தொழில் உண்டுன்னு ரொம்ப நல்ல பிள்ளையா ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதாவது பொதுநிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், கட்சியினரின் குடும்ப விழாக்கள் எதிலுமே தலைகாட்டியதில்லை. டில்லிக்குப் போறார். சென்னையில் ஓ.பி.எஸ். ஆபீசுக்குப் போறார். திருவண்ணாமலையில் உள்ள மகள் வீட்டுக்குப் போறார். அப்புறம் செங்கத்தில் உள்ள தன்னோட வீடு. இதுதான் திருவண்ணாமலை எம்.பி. வனரோஜாவின் இன்றைய வாழ்க்கை. நான் சொல்றது சரியா?

thinaikatchery

Advertisment

காமாட்சி: சரிதான். போன வாரம் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன். செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு போனைப் போட்டு ""நான் எம்.பி. பேசுறேன். சில முக்கியமான வேலைகளைச் செய்தாக வேண்டியிருக்கு. பொது நிதி எவ்வளவு இருக்கு?''னு எகத்தாளமா எம்.பி.யின் கணவர் சண்முகம் கேட்டிருக்கிறாரு.

மல்லிகை: மக்கள் பிரதிநிதிகளாக உள்ள பெண்கள் சுயமா செயல்பட முடிவதில்லை. புருஷனும் அப்பனும் மகனும்கூட தான்தான் எம்.பி.னு முடிவுபண்ணி எல்லாரையும் மிரட்ட ஆரம்பிச்சுடுறாங்க. வனரோஜா விஷயத்திலயும் அதுதான் நடந்திருக்கு. சரி அப்புறம் என்னாச்சு?

காமாட்சி: எம்.பி.யே கேட்டாலும் சொல்லக்கூடாது சார்... அதெல்லாம் அவசர வேலைகளுக்காக செலவு பண்ற தொகைனு கொஞ்சம் சவுண்டா சொல்லிப்பிட்டாரு அந்த அதிகாரி. டென்ஷனான எம்.பி. கணவர் சண்முகம், நேரடியாக செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கே போய் அந்த அதிகாரியை மிரட்டியிருக்காரு. இந்த விஷயம் மாவட்ட ஆட்சியருக்கும், ஒருங்கிணைப்புகளுக்கும் போயிருக்கு.

மெரீனா: வனரோஜாவின் கணவரை வருத்தம் தெரிவிக்கச் சொல்லீட்டாங்களோ?

Advertisment

காமாட்சி: அப்படியெல்லாம் கற்பனைக் கோட்டை கட்டாதீங்க. எம்.பி.யோடும் எம்.பி. கணவரோடும் அனுசரிச்சுப் போங்கனு வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு சொல்லப்பட்டிருக்குதாம்.

மல்லிகை: எங்க திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் அலகாபாத் வங்கினு ஒரு தனியார் வங்கி இருக்கு. இந்த வங்கியின் மேலாளர் சொர்ணப்பிரியா என்ற லேடியை, மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ. விஜயலட்சுமி அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பியிருக்காங்க.

thinaikatcheryபவானி: சொர்ணப்பிரியா... தங்கமான பெயரா இருக்கே... என்ன தப்புப் பண்ணினாங்களாம்.

மல்லிகை: குன்றக்குடி ஆவிடைப்பொய்கையில் சித்த மருத்துவமனை நடத்தும் சொக்கலிங்கத்திடம் "ஐம்பது லட்சம் விவசாயக் கடன் தர்றேன்'னு சொல்லி அவரோட நிலப்பத்திரத்தை வாங்கி, லோனை சாங்சன் பண்ணி, வெறும் ஆறு லட்சத்தை மட்டும் சொக்கலிங்கத்திடம் கொடுத்துவிட்டு மீதி 45 லட்சத்தை 2 வருஷமா கொடுக்கலை. சொக்கலிங்கம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேலிடம் புகார் கொடுத்திருக்கிறார். விசாரித்தபோதுதான் சொர்ணப்பிரியா "மொத்தம் ஏழு பேரிடம் மூணு கோடி ரூபாயை சுருட்டியிருக்கிறார்' என்ற விஷயம் தெரிந்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மெரீனா: சொர்ணப்பிரியாவைக் கைது செய்தபோது, குற்றத்துக்குப் பின்னணியா இருந்த ஆண்களையும் கைது செய்திருக்கணும்.

பவானி: சரி... சரி... டென்ஷன் ஆகாதீங்க. இப்ப நான் நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிருந்தா பற்றிய தகவலைச் சொல்றேன்.

காமாட்சி: இந்தப் பிருந்தாதானே ஆணவக் கொலை செய்யப்பட்ட ஓமலூர் கோகுல்ராஜ் வழக்கில் விசாரணை அதிகாரி?

பவானி: ஆமா அவங்கதான். கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யும்போது அவருக்கு வேண்டிய பாயிண்ட்ஸ்களை எடுத்துக் கொடுத்து வேகப்படுத்துவார். கேள்விகள் விடுபட்டிருந்தால்கூட அதுபற்றிய குறிப்புகளையும் அரசு வழக்கறிஞருக்குக் கொடுப்பார்.

மல்லிகை: இன்ஸ்பெக்டர் பிருந்தாவுக்கு என்ன ஆச்சு? டிரான்ஸ்பர் செஞ்சுட்டாகளா?

பவானி: இல்லீங்க. இந்த பிருந்தா விசாரணை அதிகாரி மட்டுமில்லை. அரசுத் தரப்புச் சாட்சியாகவும் உள்ளார். ஆரம்பத்துல கண்டுக்காம இருந்த யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் அரசுத் தரப்பு சாட்சி வழக்கு மன்றத்தில் இருக்கக்கூடாதுனு வலியுறுத்தினாங்க. நீதிபதியும் இன்ஸ்பெக்டர் பிருந்தாவை வெளிய அனுப்பிவிட்டார்.

மெரீனா: அதனால என்ன?

பவானி: சாட்சிகள் பல்டியடிக்கும்போது, அரசு வழக்கறிஞர்களுக்கு பக்கத்தில இருந்து பாயிண்டுகளை எடுத்துக் கொடுக்க முடியலையேனு அப்செட்டாயிட்டாங்க பிருந்தா.

காவேரி: திருச்சி அ.தி.மு.க. மகளிரணி மா.செ.யாக இருந்த தமிழரசிகூட இப்ப ரொம்ப அப்செட்டாதான் இருக்காங்க.

பவானி: இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்பட்ட தமிழரசியா?

காவேரி: அதே அம்மணிதான். அ.தி.மு.க. மகளிரணி மா.செ.யா இருந்தாங்க. ஜெ. இறந்ததும் ஓ.பி.எஸ். அணிக்கு போனதால மா.செ. பதவி போச்சு. அப்புறம் அ.ம.மு.க. மறுபடியும் அ.தி.மு.க. வந்தாங்க. பறிபோன பதவி கிடைக்கும்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து இப்பவும் இலவமரத்து கிளி மாதிரி காத்திருக்காங்க அதே அப்செட்டோட...

மல்லிகை: ஆளுநரே இப்ப அப்செட்தான்.

-சக்தி, து.ராஜா, ஜெ.டி.ஆர்., இளையராஜா