Advertisment

திண்ணைக் கச்சேரி! : நகராட்சி ராணிகள்!

thinaikatchery

காரைக்குடியில் பல வீதிகளிலும் சென்று, நகரத்தார்களின் கலைநயமிக்க "நாட்டுக்கோட்டை வீடுகளைக்' கண்டு, வியந்த நக்கீரன் மகளிரணியினர், கடைசியாக கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்திற்கு வந்தார்கள். அங்கேயே அமர்ந்து தங்கள் கச்சேரியைத் தொடங்கினர்.

Advertisment

மல்லிகை: கலையும் மொழியும் கொலுவிருக்கும் நகரம். ஆனால் சுத்தம், சுகாதாரம்னு சொன்னா கிலோ என்ன விலைனு கேக்கிறாங்க.

thinaikatchery

பரணி: புது பஸ் ஸ்டாண்ட் நகராட்சி டாய்லெட்டுக்கு பக்கத்திலகூட போகமுடியலை. விஷ வாயு தாக்குது... தனியார் டாய்லெட்ல ஒன் பாத்ரூமுக்குள்ள நுழையணும்னா கூட அஞ்சு ரூபாயை அடிச்சுப் புடுங்குறானுவ. இவனுகளுக்கு பிசினஸ் ஆகணும்ங்கிறதுக்காக, வெளியில இருந்து கழிவுகளை அள்ளி வந்து இலவச கழிப்பறையில கொட்டி வச்சு பஸ் ஸ்டாண்டையே பாய்சனாக்கிட்டானுவ.

நாச்சியார்: நகராட்சி அதிகாரிகளின் நாணயமும், நடவடிக்கையும் அப்பிடி இருக்குத்தா... சுந்தராம்பாள்னு ஒரு அம்மணிதான் இப்ப காரைக்குடி நகராட்சியின்

காரைக்குடியில் பல வீதிகளிலும் சென்று, நகரத்தார்களின் கலைநயமிக்க "நாட்டுக்கோட்டை வீடுகளைக்' கண்டு, வியந்த நக்கீரன் மகளிரணியினர், கடைசியாக கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்திற்கு வந்தார்கள். அங்கேயே அமர்ந்து தங்கள் கச்சேரியைத் தொடங்கினர்.

Advertisment

மல்லிகை: கலையும் மொழியும் கொலுவிருக்கும் நகரம். ஆனால் சுத்தம், சுகாதாரம்னு சொன்னா கிலோ என்ன விலைனு கேக்கிறாங்க.

thinaikatchery

பரணி: புது பஸ் ஸ்டாண்ட் நகராட்சி டாய்லெட்டுக்கு பக்கத்திலகூட போகமுடியலை. விஷ வாயு தாக்குது... தனியார் டாய்லெட்ல ஒன் பாத்ரூமுக்குள்ள நுழையணும்னா கூட அஞ்சு ரூபாயை அடிச்சுப் புடுங்குறானுவ. இவனுகளுக்கு பிசினஸ் ஆகணும்ங்கிறதுக்காக, வெளியில இருந்து கழிவுகளை அள்ளி வந்து இலவச கழிப்பறையில கொட்டி வச்சு பஸ் ஸ்டாண்டையே பாய்சனாக்கிட்டானுவ.

நாச்சியார்: நகராட்சி அதிகாரிகளின் நாணயமும், நடவடிக்கையும் அப்பிடி இருக்குத்தா... சுந்தராம்பாள்னு ஒரு அம்மணிதான் இப்ப காரைக்குடி நகராட்சியின் ஆணையர். இந்த ஆணையர் தணிக்கை அதிகாரிகள் முகத்திலேயே ரிப்போர்ட்டிங் பேப்பர்களை தூக்கியெறிஞ்சிருக்காக. அம்புட்டு எகத்தாளம்.

மெரீனா: தலையுமில்லாமல் வாலுமில்லாமச் சொன்னா எப்படி புரியும்?

நாச்சியார்: வருஷா வருஷம் மண்டல நகராட்சி நிர்வாகத்தில இருந்து எல்லா நகராட்சிகளுக்கும் தணிக்கைக்கு வருவாக. போனவாரம் காரைக்குடி நகராட்சிக்கு மண்டல தணிக்கை அதிகாரிகள் வந்தாக. வீட்டு வரி, வரவு-செலவு வங்கியில் இருப்புக் கணக்கு வழக்கு, சொத்து வரிவசூல் விவரம்னு எதுவுமே சரியா இல்லை. இதையெல்லாம் எழுதி, "இதுல கையெழுத்துப் போட்டுத்தாங்க'னு மேலாளர் சியாமளாவிடம் கொடுத்தாங்க தணிக்கை அதிகாரிகள்.

பரணி: யாருக்கு மேலாளரு?

thinaikatchery

நாச்சியார்: நகராட்சி மேலாளர் சியாமளாட்ட பேப்பர்ஸை நீட்டியிருக்காக. அந்தம்மா, "நான் கையெழுத்துப் போடக்கூடாது, வாங்க'னு கூட்டிப்போய் ஆணையர் சுந்தராம்பாள் முன்னாடி நிறுத்தி, "இவுககிட்ட வாங்கிக்கங்க'னு சொல்லிட்டுப் போயித்தாக. பேப்பர்ஸை வாங்கிப் பார்த்த ஆணையரம்மா, "இந்த மாதிரி கேள்விகளை எங்கிட்ட கேட்க உங்களுக்கு அதிகாரமில்லை. உங்க டைரக்டர்தான் கேக்கணும்'னு சொன்னபடி அந்த பேப்பர்களை தணிக்கை அதிகாரிகளின் மூஞ்சியில் விட்டெறிஞ்சிட்டு வேகமா வெளிய போய்ட்டாங்க.

மல்லிகை: நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை நிச்சயம்னு சொல்லுங்க.

நாச்சியார்: என்கொயரி வந்திருச்சு. அதை எதிர்கொள்ளத் திராணி இல்லாமத்தானே அம்மணி லீவு போட்டுட்டு போயிருச்சு.

பவானி: "அம்மணமா திரியிற ஊர்ல கோவணம் கட்டுனவன் பைத்தியக்காரன்'னு சொல்லுவாங்களே அம்மணி... சரிதானுங்களே. அதுமாதிரிதானுங்க வேலை செய்யாம சம்பளம் வாங்கிறவங்க நிறைஞ்ச ஊர்ல கண்டிப்பானவங்க வந்தா கொடுமைக்காரங்கனு பட்டம் சூட்டுறாங்கங்க.

மெரீனா: நீங்க எதைச் சொல்றீங்க கொங்கு நாட்டு செல்வி?

பவானி: திருச்செங்கோடு நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரியை கண்டிச்சு 15 நாளா போராட்டம் நடத்துறாங்க, அந்த நகராட்சித் துப்புரவுத் தொழிலாளிகள்.

மல்லிகை: ஆணையர் ராஜேஸ்வரி என்ன தப்பு செஞ்சாங்களாம்?

பவானி: "காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல்னு தினமும் நான்கு முறை வருவாய் பதிவேட்டில் கையெழுத்துப் போடணும்'னு புதுச்சட்டம் போட்டிருக்காங்களாம். இதுதான் முக்கியமான தப்பு.

நாச்சியார்: ஊரு உலகத்தில இல்லாத சட்டமாவில்ல இருக்கு இது.

பவானி: நகராட்சி ஆணையரம்மா என்ன சொல்றாங்கனாங்க... பத்து வார்டுகளை பிரைவேட் காண்ட்ராக்ட்ல கொடுத்திருக்கோம். அந்த வார்டுகள் சுத்தமாயிருக்கு. நகராட்சி துப்புரவுத் தொழிலாளிகள் 150 பேர் சம்பளம் வாங்கிட்டு வேலை செய்ற மற்ற வார்டுகள் நாறிக்கெடக்கு. காலைல வர்றாங்க. கையெழுத்துப் போடுறாங்க. காணாமல் போயிடுறாங்க. மறுநாள் காலைலதான் அவங்க முகத்தை பார்க்க முடியறது. அதனால இப்படி 4 முறை கையெழுத்து சிஸ்டத்தை கொண்டு வந்தேன். குமாரபாளையம் ராசிபுரம் நகராட்சிகளுக்கும், நான்தான் பொறுப்பு. என்னால இவங்களை கண்காணிக்கிறதுதான் முக்கியமா போச்சுங்க. அவங்கவங்க வேலைகளை அவங்கவங்க செய்யணும்னு சொல்றாங்க.

நாச்சியார்: அவங்கவங்க வேலையை எத்தனை அரசு அதிகாரிகள் நாணயமா செய்றாங்க? எங்க புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார கல்வி அதிகாரியா உமாதேவிங்கிறவுக 3 வருஷமா வேலை செய்றாங்க. ஆசிரியர்களிடம் வசூல் செய்றதுதான் இவுக செய்ற உருப்படியான வேலையாம்.

மெரீனா: மாமூல் வசூல் பண்றாங்களா? யாருக்காக?

நாச்சியார்: அவுங்களுக்காகத்தான். அந்த ஒன்றியத்தில் 550 ஆசிரியர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட மாதாமாதம் தலா 200 ரூபாய் வசூல் பண்றாங்களாம். காரணம் கேட்டா அலுவலகச் செலவுக்காகனு சொல்றாங்களாம். அப்புறம் ஒவ்வொரு செமஸ்டருக்கும் ஸ்கூல்களுக்கு புத்தகங்கள் கொண்டு போக அரசாங்கம் 32 ஆயிரம் கொடுக்குதாம். அதை இந்தம்மா முழுங்கிட்டு ஒவ்வொரு ஸ்கூலும் தங்கள் சொந்த செலவுல எடுத்திட்டுப் போங்கனு சொல்றாங்களாம்.

பரணி: பல்கலையிலிருந்து ஆரம்பப் பள்ளிவரை மாமூல்... சீமை விஷக்கருவை மாதிரி மண்டி வளருது. இப்படிப் போனா நாடு எப்பிடி நல்லாருக்கும்?

-ஜீவா தங்கவேல், செம்பருத்தி, நாகேந்திரன்

nkn121018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe