பதினெட்டாம்படிக் கருப்பரையும் கள்ளழகரையும் வழிபட்டு, அழகர் மலையேறி ராக்காச்சி தீர்த்தம் வரை சென்று, கீழிறங்கி, நீரின்றி வறண்டு கிடக்கும் ஊருணிப் படிக்கட்டில் உட்கார்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.
மெரீனா: நடிகை கௌதமி புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார்போல?
மல்லிகை: ஆமா... அதுக்காகத்தான் விருதுநகருக்கு வந்தாங்க. உங்களுக்கு ஏதோ பிரச்சினையாமேனு சிலர் மறைமுகமா கேட்டிருக்காங்க. கௌதமி பளிச்சினு சொன்னாங்க. "ஆமாம்; புற்றுநோய் வந்திருக்கு. இதைச் சொல்றதுக்கு எதுக்கு பயப்படணும்? நான் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். இந்நோய் பற்றி நல்லா ஸ்டடி பண்ணிட்டுதான், அதுபற்றி பேச வந்திருக்கேன்'னு ஆரம்பிச்சாங்க.
காவேரி: என்ன அட்வைஸ் வச்சாங்க?
மல்லிகை: அட்வைஸ் இல்லை. கோரிக்கைதான் வச்சாங்க. "நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, வெல்லம், புழுங்கல் அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றை குறைந்த வி
பதினெட்டாம்படிக் கருப்பரையும் கள்ளழகரையும் வழிபட்டு, அழகர் மலையேறி ராக்காச்சி தீர்த்தம் வரை சென்று, கீழிறங்கி, நீரின்றி வறண்டு கிடக்கும் ஊருணிப் படிக்கட்டில் உட்கார்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.
மெரீனா: நடிகை கௌதமி புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார்போல?
மல்லிகை: ஆமா... அதுக்காகத்தான் விருதுநகருக்கு வந்தாங்க. உங்களுக்கு ஏதோ பிரச்சினையாமேனு சிலர் மறைமுகமா கேட்டிருக்காங்க. கௌதமி பளிச்சினு சொன்னாங்க. "ஆமாம்; புற்றுநோய் வந்திருக்கு. இதைச் சொல்றதுக்கு எதுக்கு பயப்படணும்? நான் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். இந்நோய் பற்றி நல்லா ஸ்டடி பண்ணிட்டுதான், அதுபற்றி பேச வந்திருக்கேன்'னு ஆரம்பிச்சாங்க.
காவேரி: என்ன அட்வைஸ் வச்சாங்க?
மல்லிகை: அட்வைஸ் இல்லை. கோரிக்கைதான் வச்சாங்க. "நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, வெல்லம், புழுங்கல் அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்யணும்'னு கோரிக்கை வச்சாங்க. சுய கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை வலியுறுத்தினாங்க கௌதமி.
பவானி: பயனுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றணும்ங்க. எப்படியோ கவுதமியும் களமிறங்கிட்டாங்க.
காவேரி: அ.ம.மு.க. டி.டி.வி.தினகரன்கூட தன்னோட மனைவி அனுராதாவோட அட்வைஸ்படிதான், தன் கட்சியினர் தொழில்நுட்ப அணியை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மெரீனா: புதிய தகவலா இருக்கே?
காவேரி: அ.தி.மு.க.விலிருந்து பதவியேற்றவங்க அ.ம.மு.க.வுக்கு போனால் பண இருப்பு, வசதிகளை பார்த்து ஆறஅமர யோசித்துதான் போஸ்டிங் அறிவிக்கிறார் தினகரன். ஆனால், தகவல் தொழில்நுட்ப அணிக்கான பட்டியலை மட்டும் மனைவியின் மேற்பார்வையில வெகு வேகமாக வெளியிட்டுவிடுகிறார் தினகரன்.
மல்லிகை: அனுராதா தினகரனுக்கு பேஸ்புக், டுவிட்டர்லயெல்லாம் நல்ல ஈடுபாடுனு கேள்விப்பட்டிருக்கேன்.
காவேரி: இணைய பக்கங்களில் அ.ம.மு.க.வுக்கு தினகரனுக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதில் தரணும். தந்தால்தான் கட்சி பலத்துடன் இருப்பதாக மற்ற கட்சிகள் நினைக்கும்னு சொல்லித்தான் அந்த அணியை ஸ்பெஷலா கவனிக்கிறாராம் அனுராதா.
பரணி: பா.ஜ.க. மாநிலத் தலைவி தமிழிசைக்காக 144 தடையுத்தரவு போட்டது தெரியுமா?
மெரீனா: இது எங்கே நடந்துச்சு.
பரணி: செங்கோட்டை விநாயக சதுர்த்தி கலவரத்தின்போது கைதான இந்து பிரமுகர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறவந்த தமிழிசைக்காக 144-ஐ போட்டு ஆலங்குளத்திலேயே இறக்கி விட்டார்கள். "அவர்களை விடுவிக்கவில்லை என்றால் நானே போராட வேண்டியிருக்கும்'னு ஆர்ப்பாட்டத்தில் குதித்த தமிழிசை, ""குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு சப்போர்ட்டாக காவல்துறை செயல்படுது. நெல்லை மேலப்பாளையம் பாகிஸ்தானில் இருப்பதுபோல நடந்து கொள்கிறார்கள்'' என்ற ரீதியில் பேசினார் தமிழிசை.
மல்லிகை: ஓ... அதனாலதான் முகநூல், வாட்ஸ்அப் பதிவுகளில் முஸ்லிம் தரப்பில், "எங்களுக்கும் அப்படித்தான் தோணுது. மேலப்பாளையம் தமிழ்நாட்டில் இருப்பதாக நினைத்தால் தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களுக்கு கிடைக்கும் அடிப்படை உரிமைகள் மேலப்பாளையத்திற்கும் கிடைத்திருக்கும் அல்லவா? ஒருலட்சம் மக்கள் வசிக்கும் இங்கே வங்கிக் கிளைகள் இல்லை. ஏ.டி.எம். சென்டர் இல்லை. பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை செலுத்தி பலவருடங்கள் ஆச்சு. இன்னும் பாதாளச் சாக்கடைக்கான திட்டம் கூட தீட்டலை. ஹைதராபாத்ல ஒரு கலவரம்னா இங்கே போலீசைக் குவிக்கிறாக. ஆக மொத்தத்தில் மேலப்பாளையம் பாகிஸ்தானில் இருக்கிறதானு கேட்ட தமிழிசையை பாராட்டுகிறோம்'னு வஞ்சப்புகழ்ச்சியா வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
பரணி: விழுப்புரம் மாவட்டத்துல டாஸ்மாக் விற்பனை பாதியா குறைஞ்சு போச்சாம்ல? கேட்கும்போதே மனசுல சந்தோஷம் கூடு கட்டுது.
மெரீனா: குடிகாரர்கள் பாதியா கொறைஞ்சு போயிட்டதா நெனைக்கிறீங்களா?
கோமுகி: சேச்சே... அப்படியெல்லாம் நெனைச்சு விழுப்புரம் மாவட்டத்துக்கு விருது வழங்கிடாதீங்க. கல்வராயன் மலைல காய்ச்சுற சாராயம் ஆந்திரா, கர்நாடகாவில இருந்து கொண்டு வர்ற எரிசாராயம்தான். இப்ப விழுப்புரம் மாவட்டத்தில நீக்கமற நிறைஞ்சிருக்கு.
காவேரி: தடுப்புப் பிரிவு என்னதான் செய்யுது?
கோமுகி: அப்பப்ப புடிக்கத்தான் செய்றாங்க. போனவாரம் விழுப்புரம் டவுனுக்குள்ள 250 கேன் எரிசாராயத்தை இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி புடிச்சாங்க. அதை ஸ்டேஷனுக்கு கொண்டு போக வண்டி கிடைக்கலை. அத்தனை ஓட்டுநர்களும் கள்ளச்சாராய தாதாக்களை நினைச்சு நடுங்குறாங்க.
மெரீனா: அப்புறம் எப்படித்தான் எரிசாராய கேன்களை கொண்டுபோனாங்க?
கோமுகி: அட்டைப்பெட்டிகள் கொண்டு போகணும்னு பொய்சொல்லி வேனை கூட்டிவந்து ஏத்தினாங்களாம். என்ன செய்ய... டாஸ்மாக் மாமூலைப்போல பத்து மடங்கு மாமூல் கள்ளச்சாராயத் தாதாக்கள் கொடுப்பாங்களே... அதான் கள்ளச்சாராயம் தாராளமா புழங்குது.
மல்லிகை: பொழுது போனதே தெரியலை. கிளம்பலாமா?
-சி.என்.இராமகிருஷ்ணன், எஸ்.பி.சேகர், து.ராஜா, நாகேந்திரன்