திண்ணைக் கச்சேரி! : கேமரா கல்வெட்டு... குத்துவெட்டு..

thinaikatchery

மேட்டூர் அணைக்கட்டின் பேரழகும் பிரமாண்டமும் நக்கீரன் மகளிர் அணியை வெகுவாகக் கவர்ந்தது. சேலம் மாவட்டத்திற்கு சிறப்பை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் மேட்டூர் அணையின் பின்னணியில் செல்பி எடுத்துக்கொண்டனர். தனது முகநூலில் பதிவேற்றினார் மெரீனா.

thinaikatchery

பவானி: மெரீனா போஸ் கொடுத்ததைப் பார்த்ததும் எனக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பாஜிபாகரேதான் நினைவுக்கு வந்தாங்க.

மல்லிகை: நெஜம்தான். நாமக்கல், தருமபுரி, தேனி, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், திருநெல்வேலி மாவட்டங்களில் மகளிர் ஆட்சியர் இருக்காக. ஆனால் சேலம் ரோகிணி அளவுக்கு விளம்பரவெறியரா யாருமில்லைனுதான் முகநூல் வட்டாரம் குற்றம் சொல்லுது.

collector-rohiniபவானி: சேலம் மாவட்ட வரலாற்றில் ரோகிணிதான் முதல் பெண் ஆட்சியர். இது ஒரு சிறப்புதான். ஆனால், எதுக்கெடுத்தாலும் போட்டோ போஸ். நினைப்பிலேயே ஒவ்வொரு நாளையும் கடத்துவது ரொம்ப ஓவரில்லீங்களா?

வாணி: எங்க நீலகிர

வாணி: எங்க நீலகிரி மாவட்ட ஆட்சியரா இன்னோசென்ட் திவ்யா இருக்காங்கங்க. மீடியா கேமராக்களை கண்டாலே டென்ஷனாயிடுறாங்க. "ஏங்க என்னோட வேலையைத்தானே நான் பார்க்கிறேன். இதையெல்லாம் போட்டோ எடுப்பீங்களா? செய்தியாக்கணும்கிற அவசியம் இருந்தா நாங்களே மீடியாக்களுக்கு சொல்லியனுப்புகிறோம். இப்ப கிளம்புங்க'னு ஓப்பனா சொல்லி அனுப்பிடுறாங்க.

mp-vasanthiபவானி: ரோகிணி மேடத்துக்கு கேமரா இல்லைனா அந்தநாள் ஒரு கறுப்பு நாளாயிடுதுங்க. ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்ங்க. மல்லியக்கரையில் ஒரு ஸ்கூலுக்கு போனாருங்க. அங்கே போனதும் டீச்சர் அவதாரமெடுத்துவிட்டாருங்க. ஸ்கூல் பஸ்ஸை ஆய்வு செய்து, ஸ்டிக்கரை அவரே பஸ் கண்ணாடியில் ஒட்டி ஒரு போஸ் குடுத்தாருங்க. டெங்கு கொசு ஒழிப்பு முகாமுக்கு போனார். தண்ணி தொட்டிக்குள்ள டார்ச் அடிச்சுப் பார்த்தாருங்க. தனிநபர் கழிப்பறை கட்டுமானப் பணிகளை ஆய்வு செஞ்சாருங்க. அங்கே கொத்தனாராக மாறி, கொத்துக் கரண்டியை கேட்டு வாங்கி, சிமெண்டுக் கலவையை அள்ளிப் பூசி... அந்தக் காட்சி கூத்துல சந்திரமதி வீடு கூட்டுன மாதிரி சிறப்பா இருந்ததுங்க.

கோமுகி: ஆமா நான்கூட கேள்விப்பட்டேன். வெடிக்காரன்பாளையத்தில் ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்குப் போன கலெக்டர் ரோகிணி, குழம்பை மோந்து டேஸ்ட் பாத்து உப்புக் கொஞ்சம் குறைக்கச் சொன்னாராமே?

பவானி: அதுமட்டுமில்லை... பக்கநாடு -குண்டுமலைக்காடு பகுதிகளில் மரம் வளர்ப்பை ஆய்வு செய்தாங்களாம். ஒவ்வொரு இலையையும் மென்மையா வருடிப்பார்த்து ரொம்ப நுட்பமாக ஆய்வு செய்திருக்காங்க. இப்படிப்பட்ட செய்திகளையும் படங்களையும் பிரசுரிக்கணும்னு மக்கள் தொடர்புத்துறை மீடியாக்களுக்கு பிரஷ்ஷர் கொடுக்கும்போதுதான் எரிச்சலாருக்கு.

hemalathaபரணி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் 20 லட்சம் செலவில் ஒரு புதிய கட்டடம் கட்டினாங்க. திறப்புவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நடந்திருச்சு. கல் வெட்டும் தயாராயிருச்சு. அழைப்பிதழ்கள் அனுப்பியாச்சு. மாவட்ட ஆட்சியர் ஷில்பா தலைமையில் அமைச்சர் ராஜலட்சுமி திறப்பதாக இருந்தது. தொகுதி எம்.பி. வசந்திமுருகேசன் பெயர் கல்வெட்டிலோ அழைப்பிதழிலோ இல்லை. எம்.பி.யைக் கூப்பிடவும் இல்லை.

மல்லிகை: "தொகுதியை எட்டிப் பார்க்காத, தொகுதியில் ஏதாச்சும் பிரச்சினை என்றால் கண்டுகொள்ளாத எம்.பி.க்களில் வசந்திமுருகேசனும் ஒருத்தர்'னு ஏற்கனவே பெயரெடுத்தவராச்சே.

பரணி: டென்ஷனான எம்.பி. வசந்திமுருகேசன், மாவட்ட ஆட்சியர் ஷில்பாவுக்கு போனைப் போட்டு, "கல்வெட்'ல என் பெயரில்லை. விழாவுக்கு என்னைக் கூப்பிடலை. என்னைப் புறக்கணித்துவிட்டு நாளைக்கு விழா நடத்துவீங்களா? அந்தக் கட்டடத்தை திறக்கக்கூடாது; அதை நிறுத்துங்க' என்று பயங்கரமா சத்தம் போட்டிருக்காங்க.

மெரீனா: அப்புறம்?

பரணி: அப்புறமென்ன? திறப்புவிழாவை ரத்து செய்துவிட்டார் கலெக்டர். ஆனால் கல்வெட்டின்மீது பேப்பரை ஒட்டி மறைத்துவிட்டு, நகராட்சி அதிகாரிகள் புதிய கட்டடத்தில் உட்கார்ந்து வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

மல்லிகை: நல்ல கூத்துதான். கடலூர் மாவட்டத்தில ஒரு ஊராட்சியின் முன்னாள் தலைவிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதாக காதில் விழுந்துச்சே?

கோமுகி: காட்டுமன்னார்கோயில் பக்கத்தில வடமூர்னு ஒரு ஊர். இந்த ஊராட்சியின் தலைவியா இருந்த ஹேமலதாவும் இன்னும் 13 பேரும் சேர்ந்து, வாட்டர் டேங்க் ஆபரேட்டர் சம்பத்குமாரை கொடூரமாக வெட்டிக் கொன்னுட்டாங்க.

பவானி: எப்பங்க கொலை நடந்தது?

கோமுகி: அது நடந்து அஞ்சு வருஷமாச்சு. குற்றவாளிகளில் ரெண்டுபேரு இறந்து விட்டார்கள். ஹேமலதா உள்ளிட்ட 12 பேருக்கும் சிதம்பரம் நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் ஆயுள் தண்டனையும், தலா இரண்டாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மெரீனா: ஒரு பெண், அதுவும் ஊராட்சிமன்றத்தின் தலைவி, தலைமை ஏற்று ஒரு கொலையைச் செய்திருக்காங்க. என்ன கொடுமை பார்த்தீங்களா?

-பரமசிவன், இளையராஜா, காளிதாஸ்

nkn021018
இதையும் படியுங்கள்
Subscribe