லெக்டர் வீட்டு வேலைக்கு அங்கன்வாடி ஊழியர்கள்! தி.மு.க. பெண் மா.செ. மாற்றம்?

வைகை ஆற்றில் தண்ணீர் வருவதைப் பார்ப்பதற்காக மதுரை ஆரப் பாளையம் பஸ் நிலையம் வந்து இறங்கி னார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

மல்லிகை: வைகையைப் "பொய்யாக் குலக்கொடி' என்று வணங்கிப் பாராட்டுவார் இளங்கோவடிகள். கடல் முகம் காணா நதியென்று விமர்சனம் செய்வதும் உண்டு. இப்பவெல்லாம் இராமநாதபுரம் கண்மாய்க்குப் போறதுக்குக்கூட வைகையில தண்ணி வர்றதில்லை.

thinaikatchery

Advertisment

நாச்சியார்: மதுரையில ஆவின் நிறு வனத்திடம் கறவை மாடு கேட்டு சர்ச்சையில் சிக்கினாரே ஆட்சியர் வீரராகவ். அவரை இராமநாதபுரத்துக்குத்தான் டிரான்ஸ்பர் செஞ்சாக. அங்கே போனதும் இதைவிடப் பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டாராமே நெஜமாவா?

மல்லிகை: ஆட்சியரின் மனைவி ஹசந்திகா, இராமநாதபுர மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி கிருஷ்ணவேணிக்கு போன்போட்டு "அங் கன்வாடியில் உதவியாளர்களா வேலை பார்க்கிற ஏழு பெண்களை அனுப்பி வை. நான் இரண்டு பேரை செலக்ட் பண்ணிக்கிறேன்'னு சொல்லியிருக்காங்க.

பவானி: எதுக்குங்களாம்?

மல்லிகை: சொல்றேன். அதிகாரி, ஏழு பெண்களை அனுப்பினாங்களாம். அதுல பட்டணம்காத்தான் கலைவாணி யையும், பாரதிநகர் ஸ்ரீதேவியையும் செலக்ட் செஞ்ச திருமதி கலெக்டர், ""ஒருத்தி காலைல 7 மணிக்கு டியூட்டிக்கு வரணும். என்னோட ரெண்டு குழந்தை களையும் எழுப்பி, பிரஷ்பண்ணி, குளிக்க வச்சு, சாப்பாடு ஊட்டிவிட்டு, யூனிஃபார்ம் போட்டு, ஷூ மாட்டிவிடணும். குழந்தைகள் ஸ்கூல் போனதும் ஒருத்தி டியூட்டி முடிஞ்சாச்சு. இன்னொருத்தி 12 மணிக்கு வந்தாப்போதும். குழந்தைகள் ஸ்கூல்ல இருந்து வந்ததும், அவங்களைத் தூங்க வச்சிட்டு போயிடலாம்'' என்று கட்டளையிட்டாராம்.

காவிரி: ரெண்டு பெண்களும் என்ன சொன்னாங்களாம்?

thinaikatcheryமல்லிகை: "திருமதி ஹசந்திகா வீரராகவ் எங்களை தன்னோட வீட்ல வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துறாங்க. மாவட்ட அதிகாரி கிருஷ்ணவேணிதான் அங்கே போகச்சொல்லி கட்டாயப்படுத்தினாங்க'னு தங்களுடைய அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தில் புகார் பண்ணியிருக்காங்க.

மெரீனா: ஆஸ்பிடல்ல இருந்து ரெண்டு நர்ஸ்களையும் ஸ்கூல்ல இருந்து ரெண்டு டீச்சர்களையும் கூப்பிடலையா?

நாச்சியார்: மாவட்டத் துக்கே பெரிய அதிகாரியோட மனைவி அதான் கேக்குறாக.

காவேரி: மயிலாடுதுறை சரக மது விலக்குப் பிரிவு ஆய் வாளரா 3 மாதம் முன் னால ஸ்ரீபிரி யா வந் தாங்க. அவங்களுக்கு கீழே ஏட்டய் யாவாக, அவங்க கணவர் சோமசுந்தரம். ரெண்டுபேரும் அறுவடை செய்றது மத்த காக்கிகளுக்குப் பயங்கர எரிச்சல். "என் கண வரை நாகப்பட்டினத்துக்கு மாத்துங்கள்'னு மாற்ற வைத்தார் ஆய்வாளரம்மா.

மெரீனா: அதுதானே முறை?

காவேரி: போனவாரம் எஸ்.பி. விஜய குமாரின் உத்தரவுப்படி சீர்காழி ரவுண்டானாவுல சோதனை நடந்துச்சு. ஒரு கார் நிக்காம பறந்துச்சு. மடக்கிப் புடிச்சுச்சு ஸ்பெஷல் டீம். டிக்கி நிறைய மதுபானப் பாட்டில்கள்... யாரோட கார் தெரியுமா?

மல்லிகை: யாரோட கார்?

காவேரி: மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் ஸ்ரீபிரியாவின் கணவர் சோமசுந்தரத் தின் கார். மதுவிலக்குக் கடத்தலைத் தடுக்க வேண்டிய கணவன்-மனைவியின் காரில்தான் சரக்கு கடத்தியிருக்காங்க. கடத்தலுக்கு இதைவிட பெரிய பாதுகாப்பு உண்டா?

நாச்சியார்: வேலூர் தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் முத்தமிழ்ச்செல்வியை மாத்தப்போறதா கேள்விப்பட்டேன்.

காமாட்சி: கட்சியின் புதிய பொருளாளரான துரைமுருகன் தனது மாவட்டத் தில் ஒரு கோடி ரூபாய் நிதி வசூலித்தார். அவரும் ஒரு தொகை கொடுத்தார்.

ஆனால், மா.செ. முத்தமிழ்ச்செல்வியால் நிதி தர இயலவில்லை. இதைக் காரணம் காட்டி முத்தமிழ்ச்செல்வியை தூக்கிவிட்டு, பழைய மா.செ. தேவராஜை கொண்டுவரும் முயற்சிகள் நடந்தன. "தேவராஜ் வந்தால் கோஷ்டிப் பிரச்சினை கொடிகட்டிப் பறக்கும், அவர் வேண்டாம் முத்தமிழ்ச்செல்வியே தொடரட்டும்' என திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ந.செ.க் களும், பொதுக்குழு உறுப்பினர்களும் துரைமுருக னிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

மல்லிகை: காண்ட்ராக்ட் எடுக்காத, கலெக்ஷன் திறமையில்லாத, எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் இல்லாதவங்களால எப்படி நிதி தரமுடியும்?

காவேரி: மழை வர்ற மாதிரி இருக்கு கிளம்பலாம்.

-து.ராஜா, க.செல்வகுமார், நாகேந்திரன்