சங்கத் தலைமைப் புலவர் நக்கீரனின் ஆற்றுப்படையிலும், ஆன்மிகப் பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற கோயில் திருப்பரங்குன்றம்.
விரிவடைந்து கொண்டிருக்கும் மதுரை மாநகரை, திருப்பரங்குன்றில் அமர்ந்து வியந்தபடி இருந்தாலும், நக்கீரன் மகளிர் அணியினரின் கச்சேரி என்னவோ காந்தியம்மை அருளாட்சி செய்கின்ற நெல்லைச் சீமையில் இருந்தே தொடங்கியது.
பரணி: நெல்லை மாவட்டத்தில் நாலு பெண்கள் பவர்ஃபுல்லா இருக்காங்க. மக்களவை எம்.பி. வசந்திமுருகேசன், மாநிலங்களவை எம்.பி. விஜிலா சத்யானந்த், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா... ஆனால் இவிய நாலுபேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் வேண்டாதவுகளாத்தான் நடந்துக்கிறாவ. அதிலயும் கலெக்டரும் மினிஸ்டரும் ஏழாம் பொருத்தம்.
மெரீனா: ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சினை?
பரணி: எத்தனையோ நடந்திருக்காம். உதாரணத்துக்கு ஒண்ணைச் சொல்றேன். திருவேங்கடம் பகுதி
சங்கத் தலைமைப் புலவர் நக்கீரனின் ஆற்றுப்படையிலும், ஆன்மிகப் பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற கோயில் திருப்பரங்குன்றம்.
விரிவடைந்து கொண்டிருக்கும் மதுரை மாநகரை, திருப்பரங்குன்றில் அமர்ந்து வியந்தபடி இருந்தாலும், நக்கீரன் மகளிர் அணியினரின் கச்சேரி என்னவோ காந்தியம்மை அருளாட்சி செய்கின்ற நெல்லைச் சீமையில் இருந்தே தொடங்கியது.
பரணி: நெல்லை மாவட்டத்தில் நாலு பெண்கள் பவர்ஃபுல்லா இருக்காங்க. மக்களவை எம்.பி. வசந்திமுருகேசன், மாநிலங்களவை எம்.பி. விஜிலா சத்யானந்த், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா... ஆனால் இவிய நாலுபேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் வேண்டாதவுகளாத்தான் நடந்துக்கிறாவ. அதிலயும் கலெக்டரும் மினிஸ்டரும் ஏழாம் பொருத்தம்.
மெரீனா: ரெண்டுபேருக்கும் என்ன பிரச்சினை?
பரணி: எத்தனையோ நடந்திருக்காம். உதாரணத்துக்கு ஒண்ணைச் சொல்றேன். திருவேங்கடம் பகுதியில, மாணவர்களும் சுகாதாரத்துறை பணியாளர்களும் இணைந்து ஆட்சியர் மற்றும் அமைச்சர் தலைமையில் சுத்தம் செய்யணும்னு திட்டம் போட்டிருந்தாவ. பணியாளர்கள் வந்து விட்டனர். 200 மாணவர்கள் வந்துவிட்டனர். ஆட்சியர் ஷில்பாவும் வந்து விட்டார். ஆனால் அமைச்சர் ராஜலட்சுமி வரலை.
காவேரி: வரலைனா என்ன? தூய்மைப் பணியை ஆரம்பிக்க வேண்டியதுதானே...?
பரணி: அமைச்சர் வரலைனா என்ன நாம செய்வோம்னு ஆட்சியர் ஷில்பா சொன்னதும் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த மாணவர்களும் சுகாதாரத்துறையினரும் மள மளனு சுத்தம் செய்ய ஆரம்பிச்சுட்டாவ.
முக்கால் மணி நேரத்துல அந்த ஏரியாவே கிளீனாயிருச்சு. குப்பைகளை ஒரு எடத்தில குமிச்சு வைக்கயில வந்து எறங்கினாவ மினிஸ்டரம்மா. சுத்துமுத்தும் பார்த்தாவ. மாணவர்கள் எல்லாரும் கிளம்பத் தயாராயிட்டாங்க. அமைச்சரம்மாவுக்கு நிலைமை நிமிஷத்துல புரிஞ்சிருச்சு. "நான் லேட்டானா காத்திருக்க மாட்டியளோ? நான் தானே சீப் கெஸ்ட். நான் வருமுன்னே எப்பிடி வேலையை ஆரம்பிப்பிய? எப்படி முடிக்கலாம்'னு குதிச்சாவ...
மெரீனா: ஆட்சியர் ஷில்பா திருப்பிக் குடுக்கலியா?
பரணி: அவிய முகம் கறுத்துப் போச்சு. குமிச்சு வச்சிருந்த குப்பையில கொஞ்சத்தை அள்ளி ரோட்ல கொட்டச் சொன்னாவ. இப்படிக் கூட்டிப் பெருக்குங்கனு சொன்னவா. கூட்டுற மாதிரி போஸ் கொடுத்தாவ அமைச்சர் ராஜலட்சுமி. அப்புறமும் ஆத்திரம் அடங்கலை. "இனிமே எந்த நிகழ்ச்சியும் நான் வராம ஆரம்பிக்கக்கூடாது'னு சவுண்டு விட்டாவ. கலெக்டரம்மா சட்டை செய்யலை. பை பை சொல்லிட்டு கார்ல ஏறிக் கிளம்பிப் போய்ட்டே இருந்தாவ. அடுத்த சந்திப்புல மோதல் பெரிசா இருக்கும்.
மல்லிகை: சில பேருக்கு பெரிய பதவியில் உட்கார்ந்துவிட்டால் தலை எது, கால் எதுன்னு புரியாது.
காவேரி: திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பதவிக்கு வந்திருக்கும் உஷாவோட நிலைமை அந்த மாதிரி புரியாத நிலைதான். இந்தம்மாவோட கணவர் திருச்சி மெடிக்கல் காலேஜ்ல மெடிக்கல் ஆபீஸர். அந்தச் செல்வாக்கில இவங்க இணை இயக்குநராகி விட்டாங்க. டைரக்டர் சீட்ல உக்கார்ந்ததில இருந்து யாரையும் பாக்கிறதும் இல்லை. எந்த கோப்புலயும் கையெழுத்துப் போடுறதுமில்லை.
மெரீனா: புரியலை காவேரி?
காவேரி: திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அத்தனை கல்லூரிகளும் திருச்சி மண்டலத்துக்குள்ளதான் வருது. இந்த கல்லூரிகளில் பணியாற்றுவோரின் சம்பளம், சம்பள உயர்வு, பென்ஷன் எல்லாத்தையும் கவனிக்கிறதுதான் இணை இயக்குநர் உஷாவின் வேலை? யாரையும் சந்திக்க மறுக்கிறாராம் உஷா. திருச்சியில் உள்ள ஒரு பாரம்பரியமான கல்லூரியின் முதல்வரும் செயலாளரும் போயிருக்காங்க. "நான் ரொம்ப பிஸி. இப்ப யாரையும் பார்க்க முடியாது'னு சொல்லியனுப்பிட்டாங்க.
கோமுகி: ஐந்து மாவட்ட கல்லூரிகளின் பேராசிரியர்களும் பணியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தால் டிரான்ஸ்பர் ஆயிடுவாங்கள்ல?
காவேரி: அதற்கான புகார்கள் போய்க்கொண்டிருக்காம்.
பரணி: என்கிட்ட இன்னோரு தாக்கல் இருக்கு. கேட்டீங்கன்னா கொதிச்சுப் போயிருவீங்க?
மெரீனா: சொல்லுங்க. கொதிக்கிறமா, கூலாகிறமானு பார்க்கலாம்.
பரணி: நான் வேறொரு ஏரியாவிலிருந்து குடும்ப அரசியல் தகவல் சொல்றேன்...
காவேரி: எந்த ஊரு? எந்தக் கட்சி?
பரணி: கன்னியாகுமரிதான். பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோதங்கராஜ் இருக்கிறாரே அவர்தான் தி.மு.க. மாவட்டச் செயலாளர். இவர் மனைவிதான் அஜிதா. அஜிதா வெளிநாட்ல ரெண்டு மூணு லட்சம் சம்பளம் வாங்கினவங்க. அவர் சொந்த மண்ணுக்கு திரும்பிவர, அவரை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக்கினார் மனோதங்கராஜ். அஜிதாவுக்கு மூணு, நாலு மொழி தெரியும். மேடையில் அருமையா பேசுவாங்க.
மெரீனா: அப்புறமென்ன?
பரணி: அஜிதா கிடுகிடுனு வளர்ந்திட்டாங்க. இப்ப கணவனும் மனைவியும் வேற வேற வீட்ல இருக்காங்க. அஜிதாவுக்கு கட்சியில எந்தப் பதவியும் கிடைக்கக்கூடாது என்ற கவனத்துடன் அரசியல் காய்கள் நகர்த்தப்படுதாம்.
கோமுகி: அடக்கடவுளே...!
-ஜெ.டி.ஆர், மணிகண்டன், நாகேந்திரன்