நக்மாவின் எம்.பி. கனவு! பதவி ஆசையில் மந்திரி மகன் - எம்.எல்.ஏ. மனைவி!

சென்னை -வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

மல்லிகை: ராகுல் காந்தியைச் சந்தித்த நடிகை நக்மா, தமிழக மகளிரணியின் மேலிடப் பொறுப்பாளராக மீண்டும் தன்னை நியமிக்கணும்னு கோரிக்கை வச்சதா கேள்விப்பட்டேன்...?

thinaikatchery

Advertisment

மெரீனா: நெஜம்தான். தமிழக மகளிரணித் தலைவி ஜான்சிராணிக்கும் நக்மாவுக்கும் முட்டல் மோதல், கோஷ்டிக் குழப்பங்கள் வந்ததால்தான், நக்மாவை பாண்டிச்சேரிக்கு மட்டுமான மேலிடப் பொறுப்பாளராக்கிவிட்டு, தமிழகப் பொறுப்பாளரா பாத்திமா தோஸ்னாவை நியமிச்சாங்க. அவங்க தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிக்கூடப் பாக்கலை. தமிழ்நாடு காங்கிரஸ் மகளிரணி முடங்கிப் போச்சு. இந்தக் காரணங்களையெல்லாம் சொல்லித்தான் மறுபடியும் முயற்சி பண்றாங்க நக்மா.

nagmaநாச்சியார்: நக்மாவுக்கு தமிழ்நாட்டு காங்கிரஸ் மகளிரணியில கணிசமான ஆதரவாளர்கள் இருக்காக. அதுக்காக ஏன் இங்கேயே போஸ்டிங் கேட்டு அடம் பிடிக்கணும்? இன்னும் இருபத்தெட்டு மாநிலங்கள் இருக்கில்ல. முயற்சி பண்ணலாம்ல?

Advertisment

மெரீனா: மற்ற மாநிலங்களில் நக்மாவால எம்.பி. சீட் வாங்க முடியாதில்ல. இங்கே வாங்கி விடலாம்கிற நம்பிக்கை. நக்மாவின் கனவு எம்.பி. ஆகணும்கிறது.

பரணி: ஆசை இல்லாதவங்க உலகத்துல யாருங்க இருக்கா? எங்க திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன் இருக்காவளே... அவியளுக்கு தன்னோட மனைவி ஆஷாவை, தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவியாக்கிப்பிடணும்னு ஆசை.

மல்லிகை: பி.டி.ஆர். ராஜகோபால்தான் முன்ன அந்த சீட்ல உட்கார்ந்திருந்தாரு. அவரை வேப்பலோடை வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக்கி, பிறகு மாவட்ட தலைவராக்கினதே சண்முகநாதன்தானே. அவரு இப்ப மறுபடியும் வேப்பலோடைல ஜெயிச்சிருக்கார்ல. மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு அவரு நிப்பாருல்ல?

பரணி: பி.டி.ஆர். ராஜகோபால் இப்ப மா.செ. செல்லபாண்டி கோஷ்டி. அது சண்முகநாதன் எதிர்கோஷ்டி. அதுக்காகத்தான் பெருங்குளம் கூட்டுறவு சங்கத்தில தன் மனைவி ஆஷாவை ஜெயிக்க வச்சிருக்காவ எம்.எல்.ஏ. சண்முகநாதன். இனி மாவட்ட கூட்டுறவு வங்கித் தேர்தல்ல மனைவிய நிறுத்தி ஜெயிக்க வப்பேன்னு சவால் விட்டிருக்கிறார்.

ashaகாவேரி: யாரோ ஒரு பினாமியை நிறுத்தி பலப்பரீட்சை நடத்திறதைவிட, மனைவியை களத்தில இறக்கிறதுக்கும் ஒரு துணிச்சல் வேணும்தான்.

பரணி: விடப்பட்ட ஒரு சேதி... அமைச்சர் கடம்பூர் ராஜுவோட மகளுக்கும் அரசியலில் குதிக்க ஆசையாம். அப்பா மகளைத் தட்டிக் கொடுத்தாராம்.

மெரீனா: அப்பா அம்மா சொந்தம் சுற்றம் தயவில்லாம சுயமா ஒரு பெண் முன்னேறினால் பாராட்டலாம்.

பவானி: அந்த மாதிரி துணிச்சலான ஒரு பெண்மணியைப் பத்தி நான் சொல்றேனுங்க. பல்லடம் காவல் நிலையத்துக்கு பக்கத்தில சிநேகா ஸ்டுடியோவை 20 வருஷமா நடத்திக்கிட்டு இருக்காங்க தனலட்சுமி அக்கா. ஆண் துணையில்லாம ஒரு பெண் இந்தத் தொழிலைச் செய்றது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கெல்லாம் தெரியும்.

காவேரி: ஒரு பெண் போட்டோ ஸ்டுடியோ நடத்துறது கஷ்டமா?

பவானி: ஏனுங்க.. கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துனு என்ன நடந்தாலும், ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணியா இருந்தாலும், கேமராவைத் தூக்கித் தோள்ல மாட்டிட்டு தனலட்சுமியக்கா கிளம்பிடுவாங்கங்க.

மெரீனா: பத்திரிகைகளுக்கு போட்டோ கொடுப்பாங்களோ?

பவானி: அவங்க பல்லடம் போலீஸ் ஸ்டேஷனோட ஆஸ்தான போட்டோகிராபருங்க. அது மட்டுமில்லீங்க. தெருவுல ஒரு கரண்ட் கம்பம் விழுந்துவிட்டால், அதை போட்டோ எடுத்து அதிகாரிக்கு அனுப்பி சரி செய்யும் வரை போராடுவாங்க.

thinaikatcheryமல்லிகை: அப்ப நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். பவானி, உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனைச்சேன். இப்பத்தான் ஞாபகம் வந்தது. ரெண்டு கோடி ரூபாய் சொத்துகளை கைப்பத்தணும்கிறதுக்காக புருஷனை ரூமுக்குள்ள அடைச்சுப் போட்டு, சூடு வச்சு கொடுமைப்படுத்துன சம்பவம் உங்க ஏரியாவுல தானே நடந்திருக்கு. கணவன் மனைவி ஒண்ணா தானே குடும்பம் நடத்தியிருப்பாக. சொத்துப் பிரச்சினை எப்படி?

பவானி: அது சொத்துக்காக நடந்தது இல்லீங்க. சென்னிமலைல தானுங்க அது நடந்தது. நாராயணசாமியும் லலிதாவும் கணவன் மனைவி. ஒரே மகன் முருகேசன். வசதியான குடும்பம்தான். குடும்ப வரவு செலவெல்லாம் மனைவி லலிதாதானுங்க.

மெரீனா: வேற என்ன பிரச்சினை?

பவானி: அந்த லலிதாவை பத்து வருஷம் முன்னாடியே கிறிஸ்தவ பெந்தகொஸ்தே சர்ச்சுக்கு யாரோ கூட்டிப் போயிருக்காங்க. அப்புறம் அந்த லலிதாவே தீவிரமாயிடுச்சு. மகனைக் கூட்டிப் போயிருக்கு. இப்ப ஒரு மாதமா கணவரையும் "வா ஜெபத்துக்கு... நீயும் கிறிஸ்தவனாயிரு'னு சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கு. அவருக்கு விருப்பமில்லை. அதுக்காகத்தான் கட்டிப் போட்டு, அடிச்சு, உதைச்சு சூடுகள் போட்டு... சித்திரவதைங்க.

மல்லிகை: அப்ப எதுக்காக போலீஸ், சொத்து, சுகம்னு கேஸை மாத்துச்சாம்?

பவானி: தெரியலீங்க.

-இளையர், ஜீவாதங்கவேல், அருள்குமார், நாகேந்திரன்