ஜெ. கோட்டையில் தி.மு.க.வை ஜெயிக்க வைத்த அ.தி.மு.க!

அமைச்சரை தோற்கடித்த பெண் எம்.எல்.ஏ!

ட்டினப்பாலையும், சிலப்பதிகாரமும் வாழ்த்திப் போற்றும் காவேரி ஆற்றின் பொங்குபுனலைக் கண்டு களித்து, அள்ளிப் பருகிய மகிழ்வோடு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் படிக்கல்லில் அமர்ந்திருந்தனர் நக்கீரன் மகளிரணியினர்.

thinaikatchery

Advertisment

காவேரி: தி.மு.க. மகளிரணி வி.ஐ.பி.கள் எல்லாரும் அடுத்த ஆட்சி கலைஞர் ஆட்சியென்று சந்தோஷத்தில் இருக்காங்க. தி.மு.க. மகளிரணியில முக்கிய இடத்தில இருந்திருக்க வேண்டிய இறை எழில், மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்கி, இப்ப வெம்பிக் கொண்டிருக்கிறார்.

மெரீனா: சீர்காழி சேர்மனா இருந்தாங்களே... எம்.எல்.ஏ.வுக்குக்கூட நின்னாங்களே அந்த இறை எழில்தானே?

Advertisment

thinaikatcheryகாவேரி: அவங்களேதான். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு ரொம்ப நெருக்கமானவராக இருந்தவங்க. ஆசை யாரை விட்டுச்சு. ரெட்டை இலை தொடர்ந்து இரண்டாவது தடவை ஜெயிச்சதும், அ.தி.மு.க.வுக்கு போனாதான் மறுபடியும் சேர்மன் ஆகலாம்னு கணக்குப் போட்டாங்க. சமீபத்தில் கொலை செய்யப்பட்டாரே ரமேஷ்பாபு அவர் மூலம்தான் அ.தி.மு.க.வுக்கு போனாரு. எப்பிடியும் உள்ளாட்சித் தேர்தல்ல ரமேஷ்பாபு தயவுல சீட் கிடைக்கும். மறுபடியும் சேர்மனாயிடலாம்னு நெனைச்சாரு.

மல்லிகை: ரமேஷ்பாபுதான் கொலையாயிட்டாரே?

காவேரி: அதான் வேதனை. தி.மு.க.காரங்களும் வெறுத்துட்டாங்க. அ.தி.மு.க.காரர்களும் இவரை மனதார ஏத்துக்கலை. எப்படி இருந்திருக்க வேண்டியவள் இப்படி திசை தெரியாம தவிக்கிறேனே என்று கலங்கினாராம்.

கோமுகி: பதவிக்கு வந்தபிறகு, தன்னை மட்டுமே கவனித்துக் கொண்டால் இப்படித்தான் கலங்கி நிற்க வேண்டியிருக்கும். எங்க பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யாபன்னீர்செல்வம் மாதிரி... அமைச்சரையே எதிர்த்து அரசியல் பண்ற துணிச்சல் வரணும்.

மெரீனா: அந்த சத்யாவும் இன்னும் ரெண்டு எம்.எல்.ஏ.க்களும் எம்.பி. அருண்மொழித்தேவன் கோஷ்டி. அமைச்சர் சம்பத் எதிர் கோஷ்டி. ஆமா... இப்ப என்ன புதுப்பிரச்சினை?

கோமுகி: பண்ருட்டி தொகுதிக்குள்ள கூட்டுறவு சங்கத் தேர்தல்ல எம்.எல்.ஏ. சத்யாவோட ஆதரவாளர்களை மண்ணைக் கவ்வ வைக்கணும். வாரி இறைச்சு வரிஞ்சு கட்டி வேலை செஞ்சார் அமைச்சர் சம்பத். ஆனால் கடைசியில் மண்ணைக் கவ்வுனது அமைச்சர் தரப்புதான்.

மல்லிகை: பண்ருட்டி தொகுதிக்குள்ளதானே அமைச்சர் சம்பத்தோட சொந்த ஊர் இருக்கு. அந்தத் தொகுதியிலயா அமைச்சர் தரப்பை, சத்யா தரப்பு ஜெயிச்சது?

கோமுகி: சொந்த ஊரான மேல்குமாரமங்கலத்தில் கூட அமைச்சர் தரப்பு ஜெயிக்கலை. அவனூர், சின்னப்பேட்டை, புதுப்பேட்டை உட்பட பதினாறு, பதினேழு கூட்டுறவு சங்கங்களிலும் எம்.எல்.ஏ. சத்யா ஆதரவாளர்கள்தான் மெஜாரிட்டி.

மெரீனா: குடியாத்தத்துக்குள்ள நுழைய முடியாம இருந்த ஜெயந்தி பத்மநாபன் டி.டி.வி. தினகரன் கொடி ஏத்தின அன்னக்கி வெற்றிகரமா குடியாத்தத்துக்குள்ள வந்துட்டாங்களாமே?

thinaikatcheryகாமாட்சி: ஆமா, ஜெயந்தி பத்மநாபன் தகுதி நீக்கம் செய்யப்பட்டவங்க. இவங்க டி.டி.வி. தினகரன் பின்னாடி போனதும் கோபமான அமைச்சர் வீரமணி ஆதரவாளர்களான ந.செ. பழனி குரூப், குடியாத்தத்தில் ஜெயந்தி கொடும்பாவிய கொளுத்துனாங்க. எம்.எல்.ஏ. அலுவலகத்தை நொறுக்கிப் பூட்டுப் போட்டாங்க. ஜெயந்தி வரட்டும் பார்க்கலாம்னு சவால் விட்டாங்க. இதனால ஒரு வருஷமா ஜெயந்தி பத்மநாபன் குடியாத்தம் நகருக்குள்ள வரலை. இதனால்தான்தான் எம்.எல்.ஏ.ங்கிற மாதிரி ந.செ. பழனி நடந்துகொண்டார். அவரை எதிர்த்து ஒரு கை பார்க்கலாம்கிற தெம்புலதான் ஜெயந்தி வந்திருக்காங்க.

காவேரி: அமைச்சர் சம்பத் தரப்பு, எம்.எல்.ஏ. சத்யா தரப்புகிட்ட தோத்துப் போனதா கோமதி சொன்னாங்கள்ல. ஜெயலலிதாவின் கோட்டைனு சொன்னாங்களே ஸ்ரீரங்கம். அங்கேயே அ.தி.மு.க., தி.மு.க.விடம் மண்ணைக் கவ்விவிட்டது.

மெரீனா: பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் வளர்மதியின் தொகுதியாச்சே ஸ்ரீரங்கம். அங்கே எப்படி?

காவேரி: அவுங்க தனக்கும் ஸ்ரீரங்கம் கூட்டுறவு பண்டகசாலைத் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி ஒதுங்கிட்டாங்களாம். அதோட கட்சிக்காரங்க, நிர்வாகிகள் யாரும் வளர்மதி பேச்சை கேட்க மாட்டாங்க. வெறும் கையில முழம் போடுறவங்களாம் வளர்மதி.

கோமுகி: வளர்மதி வேலை செய்யாட்டி என்ன? மா.செ. குமார் எப்படி கோட்டை விட்டார்?

காவேரி: அவரு பெரிய சூட்கேஸை பகுதிச் செயலாளர் டைமண்ட் திருப்பதிகிட்ட கொடுத்து, "தி.மு.க.காரங்க தீவிரமா இருக்காங்க. கோட்டை விட்டுறாதீங்க'னு சொல்லியிருக்காரு. திருப்பதி ஒண்ணும் செய்யாம இருந்து மொட்டையடிக்க வச்சிட்டாருன்னு அ.தி.மு.க. தொண்டர்கள் கொந்தளிக்கிறாங்க. 12 மெம்பர்கள்ல 3 பேர்தான் அ.தி.மு.க., பாக்கி 9 பேர் தி.மு.க.காரங்க டைரக்டர்ஸ் ஆயிட்டாங்க.

மல்லிகை: ஜெ. கோட்டையில ஒரு கல் சரிஞ்சிருச்சுனு சொல்லு.

மெரீனா: "உழவரோதை மதகோதை உடை நீரோதை தண்பதங் கொல் மழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி' இளங்கோவடிகள் பாடிய காலத்துக் காவிரியை இப்ப பார்க்கக் கொடுத்து வச்சிருக்கு... வாங்க இறங்கலாம்.

-து.ராஜா, ஜெ.டி.ஆர்., க.செல்வகுமார், சுந்தரபாண்டியன்