திண்ணைக் கச்சேரி!

thinai katchery

சுதந்திர தினத்தில் அசத்திய சப்-கலெக்டர்! அதிகாரிகளை மிரட்டும் சுயஉதவிக்குழு!

சுதந்திர தினத்திற்கு மறுநாள், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நக்கீரன் மகளிரணியின் திண்ணைக் கச்சேரி தொடங்கியது.

மெரினா: காமாட்சியக்கா, நேத்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட் டாட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கொடியேத்திய சுதந்திரதின விழாவுல கலந்து கொண்டீங்க போலிருக்கு. கொடியைக் குத்திவிட்டு, ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தாங்களா?

காமாட்சி: உண்மையைச் சொல்ல ணும்னா அந்த சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அத்தனை பேரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்னுதான் சொல்லணும்.

காவேரி: சுதந்திரப் போராட்டத்தைப் பத்தி ரொம்ப உருக்கமா பேசினாங்களோ?

காமாட்சி: சப்-கலெக்டரம்மா இன்னும் மூணுபேரை சேர்த்துக்கொண்டு தேசியக் கொடியை ஏத்துனாங்க.

thinaikatchery

மெரினா: மற்ற மூணு வி.ஐ.பி.க்கள் யாரும்மே?

காமாட்சி: ஒருத்தரு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு ஊழியர் முருக

சுதந்திர தினத்தில் அசத்திய சப்-கலெக்டர்! அதிகாரிகளை மிரட்டும் சுயஉதவிக்குழு!

சுதந்திர தினத்திற்கு மறுநாள், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நக்கீரன் மகளிரணியின் திண்ணைக் கச்சேரி தொடங்கியது.

மெரினா: காமாட்சியக்கா, நேத்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட் டாட்சியர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கொடியேத்திய சுதந்திரதின விழாவுல கலந்து கொண்டீங்க போலிருக்கு. கொடியைக் குத்திவிட்டு, ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தாங்களா?

காமாட்சி: உண்மையைச் சொல்ல ணும்னா அந்த சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அத்தனை பேரையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்னுதான் சொல்லணும்.

காவேரி: சுதந்திரப் போராட்டத்தைப் பத்தி ரொம்ப உருக்கமா பேசினாங்களோ?

காமாட்சி: சப்-கலெக்டரம்மா இன்னும் மூணுபேரை சேர்த்துக்கொண்டு தேசியக் கொடியை ஏத்துனாங்க.

thinaikatchery

மெரினா: மற்ற மூணு வி.ஐ.பி.க்கள் யாரும்மே?

காமாட்சி: ஒருத்தரு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு ஊழியர் முருகேசன். இன்னொருத்தர் திருப்பத்தூர் நகராட்சித் துப்புர வுப் பணியாளர் கணேசன். மூணாவது நபர் ஒரு மாணவன். ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கிப் படிக்கிற அந்த ஏழைச் சிறுவனின் பெயர் மகேந் திரன். இந்த மூணு பேர் அப்புறம் சப்-கலெக்டர் பிரியங்கா. இந்த நாலுபேரும் சேர்ந்துதான் கொடி ஏத்தினாங்க.

காவேரி: நாம இதுவரை கேள்விப்படாத புது விஷயம்டி இது. அந்த மூணுபேருக்கும் கொடியேற்றும் வாய்ப்பளிச்சதுக்கு காரணம் சொன்னாங்களா?

காமாட்சி: ஆமா. நமக்கு கீழே உள்ளவர்களிடம் வேலை வாங்குகிறோம். ஆனால் இவர்களை பாராட்டுவதும் பெருமைப்படுத்துவதும் இல்லை. அப்படிப்பட்ட தொழிலாளிகளை பெருமைப் படுத்த வேண்டும், கௌரவிக்க வேண்டும். ஏழ்மையான தலித் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேணும்கிறதுக்காகத்தான் இவர் களைக் கூட்டி வந்து கொடியேற்ற வைத்தேன்னு சொல்லி எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சாங்க.

காவேரி: சப்-கலெக்டர் பிரியங்கா மற்ற வங்களை கௌரவிச்சு சந்தோசப்பட்டிருக்காங்க. சில பெண்கள் அதிகாரிகளை மிரட்டியே காரியம் சாதிப்பாங்க. மல்லியம்பத்து மகளிர் சுயஉதவிக் குழுத் தலைவி செல்வி ரெண்டாவது வகை.

பவானி: மகளிர் சுயஉதவிக்குழு தலைவி, அதி காரிகளையே மிரட்டுறார்னா பெரிய விஷயம்தானுங்க.

thinaikatcheryகாவேரி: திருச்சி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்ற பொருட்களை விற்பனை செய்றதுக்காக, திருச்சியில் மிக முக்கிய இடத்தில, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பாபு நிர்வாகத் தில், பூமாலைங்கிற பிரம்மாண்டமான வணிக வளா கத்தை கட்டினாங்க. அதை ஒரு வருஷ குத்தகையா மல்லியம்பத்து செல்விகிட்ட குடுத்தாங்க. கடந்த நாலு வருஷமா டீக்கடை, ஹோட்டல்னு பூமாலையை சொந்த வளாகமாக்கிட்டாங்க.

மெரினா: சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தியை விற்பதாகக் குத்தகை எடுத்துவிட்டு, ஹோட்டல் நடத்தும் செல்வி மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலியா?

காவேரி: எடுக்கப் போறேன்னு சொன்ன இயக்குநர் பாபு திடீர்னு, செல்விக்கு ஒரு வருஷ ஒப்பந்த நீட்டிப்பு செய்திருக்கார்னா பார்த்துக்க. என்னான்னு விசாரிச்சேன். நாலு வருஷமா ஒவ் வொரு மாதமும் அதிகாரிகளுக்கு எவ்வளவு படி யளந்தம்னு பட்டியல் போட்டு வச்சிருக்காம். அந்தச் செல்வி அதுக்குப் பயந்துதான் ஒப்பந்த நீட்டிப்பு.

பவானி: எதையும் உரிமையோடு நாணயமா செய்யணும். அப்படிச் செஞ்சா பேரெடுக்கலாம். அடுத்த மாதம் 16ஆம் தேதி திருப்பூர்ல நடக்கப்போற தே.மு.தி.க. மாநாட்டிற்கான வேலைகளுக்கு இப்பவே திட்டமிட ஆரம்பிச்சுட்டாரு திருப்பூர் மா.செ. முத்து வெங்கடேஸ்வரன்.

காமாட்சி: கேப்டனும் பிரேமலதாவும் அமெரிக்காவுல இருந்தப்பவே இங்கே வேலை ஆரம்பிச்சிடிச்சு?

பவானி: ஆடியில மாநாட்டு வேலைகளை ஆரம்பிக்க வேணாம்னு சொல்லியிருந்தாங்க. ஆனாலும் தினமும் அங்கேயிருந்து மா.செ. முத்து வெங்கடேஸ்வரனைத் தொடர்பு கொண்டு பேசுறாங்க பிரேமலதா. பந்தல் எப்படி போடணும், மேடை எப்படி அமைக்கணும், பார்க்கிங் எந்தப் பக்கம், தொண்டர்களுக்கு சாப்பாட்டு வசதினு ஒவ்வொண்ணைப் பத்தியும் அக்கறையோட டிஸ்கஸ் பண்றாங்களாம்.

மல்லிகை: முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக்கின் அண்ணன் பேத்தி டாக் டர் டயானஜிப், லண்டன்ல இருந்து கேரளாவுக்கு வந்தாங்க. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக் காக கொண்டுவந்த மருந்து மாத்திரைகளை கொடுத்துவிட்டு தேனிக்கு வந்தாக.

மெரினா: தேனியில் ஏதாச்சும் புரோக்ராமா?

மல்லிகை: ஆமா. தேனி என்.ஆர்.டி. மருத் துவமனையில் நடந்த குழந்தைகள் விழிப்புணர்வு விழாவில் கலந்துகிட்டாக. அப்புறமா கலெக்டர் ஆபீஸ்ல எஸ்.பி.யை பார்த்துவிட்டு, பத்திரிகை யாளர்களையும் சந்திச்சாக.

காமாட்சி: என்ன சொன்னாக?

மல்லிகை: தன்னோட தாத்தா, ""முல்லைப் பெரியாறு அணை, உலகின் மிகப் பலமான அணை. இதில் 152 அடி தண்ணீரை அச்சமின்றி தேக்கலாம். அதற்குமேல் வரும் நீரை கேரளாவும் தமிழகமும் முறைப்படி பகிர்ந்துகொள்ளவும்'' என்று தெளிவாக தனது ஆவணத்தில் எழுதியிருக்கிறதா சொன்னாக.

காவேரி: நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருந்தா பிரச்சினைகள் ஏன் வருது?

-ஜீவாதங்கவேல், சக்தி, து.ராஜா, ஜெ.டி.ஆர்.

nkn240818
இதையும் படியுங்கள்
Subscribe