th

(5) குலசாமி வந்துருச்சு!

ல்லிக்கட்டில் காளைகள் கொடுமைக்கு ஆளானால், பாதிக்கப்பட்ட மாடு மறுபடி வளர்த்தவனின் வீட்டுக்குத் திரும்பாது. வாடியில் விளையாடிய பிறகு காட்டுக்குள் ஓடும் மாடுகள், காட்டுமாடுகளுடன் இணைந்துகொள்ளும்.

ஆனால், வளர்த்தவன் மீது நாய்களுக்கு நன்றியுணர்ச்சி இருப்பது போல, மாடுகளுக்கு பாச உணர்ச்சி அதிகம். அதனால்தான் வீடு திரும்புகிறது.

Advertisment

ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இது.

மனிதர்களை தனது குடும்ப உறுப்பினர்களாகப் பார்க்கிறது. அந்த உணர்வு மட்டுமே வாடியில் அவிழ்க் கப்பட்ட மாடுகளை வீட்டிற்கு அழைத்துவருகிறது.

இதற்கு ஒரு சில விதிவிலக்கு களும் உண்டு. அவிழ்த்த காளைகள் ஏதாவது இணையுடன் சேர்ந்துவிடும். அல்லது கிடைகளுடன் இணைந்து விடும். அப்படி ஒருநாள் வாடியில் அவிழ்க்கப்பட்ட கொம்பன்காளை வீடு திரும்பவில்லை. வாடி, முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகியும் கொம்பன் திரும்பாததால் குடும்பமே துயரமாகிறது.

Advertisment

முனியனின் தாய் தலைவிரி கோலமாக ஒப்பாரி வைக்கிறாள். வீட்டில் சாணி தெளிக்கவில்லை. உலை வைக்கவில்லை. விளக்கேற்றவில்லை. இழவு வீடு போல காட்சியளிக்கிறது.

"டேய் முனியா, கொம்பன் நம்ம குலதெய்வம்டா. அவுத்த மாடு வீடு திரும்பலனா, குல தெய்வம் வாசலுக்கு வெளிய நிக்குதுன்னு அர்த்தம் அப்பு. எங்கபோய் தேடுவியோ? கொம்ப னோட திரும்ப வா'' தீர்க்கமாக சொல்லிவிட்டாள் முனியனின் தாய்.

அப்படியே கிளம்பினான் முனி யன். கையில் பணமெல்லாம் இல்லை. கொம்பனைத் தேடிய பயணத்தைத் தொடங்குகிறான். கொம்பன் அவிழ்க் கப்பட்ட தப மலை, வாடியிலிருந்து மாடு வெளியே வந்து செல்ல வாய்ப் பிருந்த மூன்று திசைகளில் இருக்கும் ஊர்களிலும் சொல்லி வைக்கிறான். ஒவ்வொருவரிடமும் விசாரிக்கிறான். சிலர் பார்த்ததாகச் சொல்கிறார்கள். அவர்கள் காட்டும் திசையில் சென்று பார்த்தால் அது வேறு மாடாக இருக்கிறது.

அருகே இருக்கும் ஊர் களில் தங்கிக்கொள்கிறான். ஏதாவது வீட்டில் கேட்டு சாப்பிடு கிறான். அங்கிருக்கும் திண்ணைகளில் உறங்குகிறான். மறுபடியும் காடுகளில் பயணிக்கிறான். ஏதாவது சதுப்புநிலங்களில் மாட்டிக்கொண்டதா? கிணறுகளில் விழுந்து விட்டதா? என்றெல்லாம் கவலையில் அலைந்து, ஊருக்கு வெளியே மாட்டின் கால்தடம் பார்த்து திரிந்து, மாட்டு சாணங்களைப் பின்தொடர்ந்து, நாட்கள் சென்றுகொண்டேயிருக்கிறது. சில வாரங்கள் முடிகிறது.

tt

கொம்பன் மாறு கொம்புக்காளை. ஊருக்கு வெளியே, கருவேலங்காட்டை தாண்டிய பொட்டல் வெளியில் ஒரு சிறிய பாறைக்குன்றின் மேல் மாறு கொம்புக் காளையை பார்த்ததாக ஒருவர் சொல்ல, குன்றில் ஏறுகிறான் முனியன். மாட்டுச் சாணியும், காலடித்தடங்களும் தெரி கிறது. பின்தொடர்ந்து சென்றால் கொம்பன்காளை ஒரு புதரின் மறுபக்கம் மேய்ந்துகொண்டிருக் கிறது. புதரில் இருந்து மறைந்து தாவி, தான் கட்டிய லுங்கியை அவிழ்த்து கொம்பனுடைய கொம்புகளைச் சுற்றி முடிச்சுப்போட்டு அன்ராயருடனேயே, காளையைப் பிடித்தபடி வருகிறான்.

இத்துடன் முனியன் சொன்ன கதை முடி கிறது. அதற்குப்பின் வெகு நாட்களாக நடை பெறாமல் தள்ளிப் போய்க்கொண்டிருந்த முனியனின் திருமணம் அந்த வருடமே நடந்த தாக சிரித்துக்கொண்டே கூறினான். இதில் எனக்குக் கிடைத்த புரிதல், காளையை குலதெய்வமாக பாவிக்கும் மனிதர்களின் தீவிரம்.

மாடுகளின் மேல் தெய்வம் இருப்பதாக பரவலாகவே நம்புகிறார்கள். தெய்வத்தை வேண்டி அவிழ்க்கும் மாடு, பிடிமாடாகிப் போனால் அபசகுனமாகப் பார்ப்பவர்கள் அதிகம். எந்த ஊரில் ஏறு தழுவுதல் நடந்தாலும் அந்த எல்லைக்குட்பட்ட தெய்வத்திற்கு முறை யான மரியாதை சடங்குகள் நடக்கிறது. மாடு பிடி வீரன் சிந்தும் ரத்தம் அந்த தெய்வத்திற்கு தரும் காணிக்கை என்பதே ஏறு தழுவுதலின் அடிநாதம். இது பகுத்தறியப்பட வேண்டியதைத் தாண்டி, பாட்டன்மார்களை வணங்கும் தமி ழர்களின் தொன்றுதொட்ட வழக்கத்தின் தொடர்ச்சி யாகவே பார்க்கலாம்.

இந்த குல தெய்வ நம்பிக்கைகளில் இருக்கும் உண்மைத்தன்மை கேள்வி களுக்கு அப்பாற்பட்டது. அதில் முப்பாட்டன்களை நினைவுகூரும் பக்தியைக் காணமுடிகிறது.

இந்து மதத்தின் ஆகப் பெரிய தெய்வமாக, ஆதி யோகியாக, சமண மதத்தில் முதல் தீர்த்தங்கரர் ரிஷப நாதராக வணங்கப்படுகின்ற பரமசிவனின் வாகனமாக காளை இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் பசுபதி என்ற பெயரில் மாட்டின்மேல் சிவன் அமர்ந்திருக்கும் பாறை ஓவியங்கள் கிடைக்கின்றன.

நந்தீஸ்வரன் என்ற பெயரில் மாட்டை தெய்வமாக வணங்குகிறார்கள். பிரதோஷ காலத் தில் நந்தியை வழிபடுகிறார்கள். அபிஷேகம் முதற்கொண்டு தனிப்பட்ட மரியாதை செய்கிறார்கள். நந்தியை வணங்கிய பின்தான் சிவ தரிசனம்.

இந்து மதத்தில் கூறப்படுகிற முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது, மாட்டின் வயிற் றில் இருக்கும் 33 கோடி நுண்ணுயிர்களைக் குறிக்கிறது என்கிறது ஒரு தரவு. இந்த நுண்ணி யிர்கள் தான் மாட்டுச்சாணத்தை சிறந்த உரமாக்கும் வேலையை செய்கிறது. புடம் போட்ட மாட்டு சாணத்தை திருநீறாகப் பூசு வது தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கம். மீண்டும் சொல்கிறேன்! திருநீறு பூசுவது தமிழர்களின் தொன்றுதொட்ட வழக்கம்.

இயல்பாகவே மனிதனுக்கு உடலிலேயே நெற்றியில்தான் அதிக வியர்வை சுரக்கும். நெற்றியில் திருநீறு பட்டை போடும்போது அது வியர்வையை உறிஞ்சிவிடுகிறது. இதனால் நெற்றிக்குள் புருவ மத்தியில் மூன்றாவது கண் என்று நம்மாலும், பீனியல் கிளாண்ட் என்று அறிவியலாலும் அழைக்கப்படு கின்ற மூளையின் ஒரு முக்கிய உணர்வுப் பகுதி குளிர்ச்சி யாகிறது. மாட்டுச்சாணத்தால் செய்யப்படுகின்ற திருநீறு தமிழர்களின் அரிய கண்டு பிடிப்பு.

இப்படி தெய்வீகப் போக்கிலேயே மாடுகள் நம்மோடு இணைந்திருப்பது பற்றிய புரிதல்கள் மெல்ல, மெல்ல விரிந்துகொண்டே இருந்தது.

கிருஷ்ணன் என்று வணங்கப்படுகின்ற மாயோ னைப் பற்றிய வியப்பான தகவல்கள் புதிய கோணத் திற்கு என்னைத் திசை திருப்பியது.

(ஆட்டம் தொடரும்...)

__________

நாலு வகை பொங்கல்!

றுதழுவுதலுடன் நெருங்கிய தொடர்புடைய தைப் பொங்கல் திருவிழா தமிழகத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

நமது முன்னோர்கள் காட்டை எரித்து விவசாயம் செய்தனர். அப்படி உருவானதே தமிழகத்தின் மருதநிலப் பகுதிகள். மகாபாரதத்தில் அர்ஜுனன் காட்டை எரித்து இந்திரப் பிரஸ்தம் என்ற ஊரை உருவாக்கினான் என்ற பதிவு இருக்கிறது. காண்டீபன் என்றால் காட்டை எரிப்பவன் என்று பொருள். காட்டை எரித்துத் தீயில் நடந்து நிலம் செம்மைப்படுத்தி உழுது பயிரிட்டதை நினைவுகூரும் விதமாகவே இன்றும் தமிழகத்தின் மருதநிலப் பகுதிகளில் தீமிதி திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

காட்டை எரித்ததை நினைவுகூருவதற்கு போகியும், உழுது பயிரிட்டு அறுவடை செய்ததற்கு பொங்கலும், அதற்குத் துணையாக இருந்த மாடுகளை நினைவுகூர்வதற்கு மாட்டுப் பொங்கலும், விளைச்சல் முடிந்ததும் உறவாகக் கூடி வாழ்தலுக்காக காணும் பொங்கலும் என்று நான்கு நாட்கள் கொண்டாட்டங்கள் தொடர்கிறது.