Advertisment

கவர்னரை வைத்து ஏதோ திட்டமிடுகிறார்கள்! -திருச்சி வேலுச்சாமி அதிரடி!

tr

மோடி பிரதமரான பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களில் யாராவது ஒருவர் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாதவர்கள் என ஒருத்தரை கூற முடியுமா? தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டி ருப்பது ஸ்டாலின் அரசுக்கு இடையூறு செய் யும் நியமனம் என்று கே.எஸ்.அழகிரி சொல்வது பதட்டம் அல்ல, ஒருவர் வருகிறபோது இவர் யார்? என்ற உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வது, அவ்வளவுதான். தமிழகத்திற்கு இதற்கு முன்பு எத்தனை ஆளுநர்கள் வந்திருக் கிறார்கள். எந்த ஆளுநரா

மோடி பிரதமரான பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களில் யாராவது ஒருவர் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இல்லாதவர்கள் என ஒருத்தரை கூற முடியுமா? தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டி ருப்பது ஸ்டாலின் அரசுக்கு இடையூறு செய் யும் நியமனம் என்று கே.எஸ்.அழகிரி சொல்வது பதட்டம் அல்ல, ஒருவர் வருகிறபோது இவர் யார்? என்ற உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வது, அவ்வளவுதான். தமிழகத்திற்கு இதற்கு முன்பு எத்தனை ஆளுநர்கள் வந்திருக் கிறார்கள். எந்த ஆளுநராவது வருவதற்கு முன்பு இப்படி ஒரு விமர்சனம் வந்திருக்கிறதா?

Advertisment

முதலமைச்சர் என்பவர் புதிய ஆளுநரை மரபுப்படி வரவேற்றுத்தான் ஆக வேண்டும். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க. வரவேற்கிறது. என்கிறீர்கள். ஆனால் நாகலாந்தில் ஓடிப்போ ஓடிப்போ வேகமாக ஓடிப்போ என்று இவரை சொன்னது தெரியாதா? அங்கிருக்கும் ஆட்சியே பா.ஜ.க. கூட்டணி ஆட்சிதான். அங்குள்ள முதலமைச்சரே இவரை வேண்டாம் என்றுதானே சொல்கிறார். ஆளும் கட்சி எதிர்த்தால் எதிர்க்கட்சி ஏற்க வேண்டும். எதிர்க்கட்சி எதிர்த்தால் ஆளும் கட்சி ஏற்க வேண்டும். ஆனால் அத்தனைக் கட்சிகளும் அங்கே எதிர்க்கின்றன.

trichyvelusami

7 பேர் விடுதலை குறித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இதுபோன்று தீர்மானம் அனுப் பினால் ஆளுநர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுதலிக்க லாம். இரண்டை யுமே செய்யாமல் ஒன்றே முக்கால் வருடம் வைத்திருந்தாரே முந்தைய ஆளுநர்? அதற்கு பிறகு ஜனாதி பதிக்கு அனுப்பியதாக சொல்கிறார். ஜனாதிபதி எனக்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசுதான் முடிவு எடுக்கணும் என்கிறார். மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் இதனை மாநில ஆளுநரே முடித்துக்கொள்ளலாம் என சொல்கிறது. இந்த பந்தை இவர்கள் 3 பேரும் சுற்றிச் சுற்றி போடுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆளுநர் மறுதலித்து அனுப்பலாம். ஆனால் அதே தீர்மானத்தை இரண்டாவது முறையாக போட்டு திருப்பி அனுப்பினால் ஆளுநர் அதனை மறுக்க முடியாது. கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என சட்டம் இருக்கிறது. காலம் காலமாக கடைப்பிடிக்கிற அந்த சட்ட வரைமுறைகளை அதற்கு முரணாக புரோஹித்தே இவ்வளவு விளையாட்டு காட்டினார். இந்த இடத்தில் இவர் வருகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அண்ணா மலை சொல்கிறார், அங்கு டெரரிஸ்ட்டையே அடக்கி ஒடுக்குனவர் என்கிறார். அப்படியே வைத்துக்கொள்வோம். தமிழகத்தில் டெரரிஸ்ட் இருக்கிறார்களா? அப்படி யென்றால் ஏதோ ஒன்றை திட்டமிட்டு உருவாக்கு கிறார்கள் என்று அர்த்தம். கவர்னர் பதவி என்பதே தேவையில்லாத சுமைதான். எதிர்காலத்தில், அது இல்லாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

-வேல்

படம்: விவேக்

nkn220921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe