Advertisment

முறைகேட்டை மறைக்கவே என்னை எதிர்த்தனர்! -பள்ளி விவகார ஃபாலோ அப்!

ss

"100 கோடி ரூபாய் பள்ளி நிலம். அபகரிக்கத் திட்டமிடும் ஆளும்கட்சி புள்ளி, கைகோர்க்கும் எதிர்கட்சி' என்கிற தலைப்பில் ஆகஸ்ட் 28ந்தேதி இதழில் வெளிவந்த செய்தி திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியில் என் விளக்கத்தை சரியாக பதிவு செய்யவில்லை என நம்மிடம் பேசினார் விக்டோரியா பள்ளி அறக்கட்டளையின் தற்போ தைய செயலர் - தாளாளரு மான வழக்கறிஞர் பிரகாஷ்பாபு.

Advertisment

sc

""நகரின் முக்கிய பிரமுகர்கள் என் தாத்தா உட்பட பலர் இணைந்து

"100 கோடி ரூபாய் பள்ளி நிலம். அபகரிக்கத் திட்டமிடும் ஆளும்கட்சி புள்ளி, கைகோர்க்கும் எதிர்கட்சி' என்கிற தலைப்பில் ஆகஸ்ட் 28ந்தேதி இதழில் வெளிவந்த செய்தி திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியில் என் விளக்கத்தை சரியாக பதிவு செய்யவில்லை என நம்மிடம் பேசினார் விக்டோரியா பள்ளி அறக்கட்டளையின் தற்போ தைய செயலர் - தாளாளரு மான வழக்கறிஞர் பிரகாஷ்பாபு.

Advertisment

sc

""நகரின் முக்கிய பிரமுகர்கள் என் தாத்தா உட்பட பலர் இணைந்து ட்ரஸ்ட் ஆரம்பித்து, நன்கொடை மூலமாக இந்த பள்ளியை உருவாக்கினார்கள். வாடகை இடத்தில் தொடங்கிய பள்ளியை பின்னர் நன்கொடையாளர்கள் மூலமாக இடத்தை சொந்தமாக வாங்கினார்கள். பின்னர் கட்டடங்கள் கட்டுகிறார்கள், அதில் சில கட்டட பகுதிகளை சாமி முதலியாரின் மருமகன் தன் மாமனார் பெயரில் கட்டி தருகிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எனது தந்தை இந்த பள்ளியின் தாளாளராக இருந்தவருக்கு மரியாதை தராமல், அவர் இறந்த அன்றே செயலாளர் பதவிக்கு சுப்பிர மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கடுத்த மாதம் என்னை உறுப்பினராக்கினார்கள், அப்போது 19 நிர்வாக குழு உறுப்பினர்கள் இருந்தார்கள். 2018ல் அதனை 10ஆக குறைத்து பதிவு செய்துள்ளார். ஆனால் தீர்மான நோட்டில் 13 பேர் என பதிவு செய்துள்ளனர். ஒருவர் ஆர்.டி.ஐ மூலம் நிர்வாக குழு உறுப்பினர்கள் எத்தனை பேர் எனக் கேட்க, 13 பேர் எனச் சொல்லி என் பெயரும் தரப்பட்டுள்ளது. இப்படி பதிவு அலுவலகத்தில் ஒரு தகவல், தீர்மான நோட்டில் ஒரு தகவல் என ஏமாற்றியுள்ளனர். நான் சென்னைவாசி என நிறுவ முயன்றுள்ளனர்.

சுப்பிரமணியின் நிர்வாகம், பள்ளியின் முழுநேர நிர்வாக பணி செய்த கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கவாசகத்தால் பள்ளியின் வளர்ச்சி தடைப்பட்டது. கடந்த ஜூன் மாதம் சுப்பிரமணி இறந்ததும் புதிய செயலர்-தாளாளர் தேர்வு செய்ய கூட்டம், செயலாளராக மாணிக்கவாசகம் வர விரும்புவதாக குறிப்பிட்டு ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பியபோது, அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு தேர்வு செய்ய வேண்டுமென நான், உட்பட 3 உறுப்பினர்கள் கருத்து எழுதி கையெழுத்திட் டோம். ஆனால் கடிதம் வழியாகவே செயலாளர் தேர்வு செய்தனர். நான் அதை ஏற்றுக் கொள்ளாமல் கல்வித்துறைக்கு புகார் தெரிவித்து கடிதம் எழுதி நிறுத்தினேன். இப்போது 11 நிர்வாக குழு உறுப்பினர்களில் 8 பேர் என்னை செயலாளராக தேர்வு செய்துள்ளார்கள். கடந்த காலத்தில் நிதி முறைகேடு உட்பட பல தவறுகள் நடந்துள்ளன. விளக்கம் கேட்டு கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். நான் பள்ளி வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுவேன்'' என்றார்.

-து.ராஜா

nkn020920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe