விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமார், கடந்த 11-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், "நான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளராக உள்ளேன். பா.ம.க. சார்பாக மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளேன். எங்கள் கூட் டணிக் கட்சி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகத்தை மரியாதைக்காகச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். சிலர் இவ்விஷயத்தை, என் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும், கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் வகையிலும் பத்திரிகையில் தவறாக செய்தி வெளியிடுகிறார்கள். மேலும், ஜெயராமன் தி.மு.க., ராஜா ஆர்ட்ஸ் என்ற முகநூல் பக்கத்திலும் அவதூறாக செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல்துறை விசாரித்து உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
கடந்த 7-ஆம் தேதி அ.தி.மு.க. அலுவலகத்தில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை, பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமார், மரியாதை நிமித்தமாக சென்று சால்வை அணிவித்து சந்தித்துள்ளார். இதை வைத்து ஒருசில ஊடகங்களில் இதை ஊதி பெரிதாக்கியுள்ளன. விழுப்புரத்தில் தோல்வியடைந்துள்ள சி.வி.சண்முகம், மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமாரை ராஜினாமா செய்யவைத்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாகத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக சிவகுமாருக்கு வேறு பல உதவிகளை சண்முகம் செய்து கொடுப்பாரென்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி கள் வெளிவந்துள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரிக்க, பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமாரை செல்பேசியில் தொடர்புகொண்டால், எடுக்கவில்லை. வாட்ஸ்ஆப் பில் மெசேஜ் அனுப்பி விவரம் கேட்டும், அவ ரிடமிருந்து பதில் வரவேயில்லை. எனவே அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "ஏற்கனவே புகாரில் அளித்துள்ள தகவலையே நம்மிடம் தெரி வித்தனர். மரியாதை நிமித்தமாக சி.வி.சண்முகத்தை அவரது விழுப்புரம் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது, சசிகலா குறித்து சி.வி.சண்முகம் பத்தி ரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டி ருந்ததாகவும், பேட்டி முடியும்வரை அருகில் நின்று கொண்டிருந்த சிவகுமார், பேட்டி முடிந்தபின் சி.வி.சண்முகத்துக்கு சால்வை அணிவித்து வாழ்த் துப் பெற்றதாகவும் கூறினார். இதைத்தான் ஊட கத்தினர் தவறாகப் புரிந்து கொண்டு வதந்தியைப் பரப்பியுள்ளனர். இதை யடுத்து, சி.வி.சண்முகத்தை அவரது வீட்டில் வைத்து சந்திக்காமல், அவரது அலுவலகத்துக்குச் சென்றது ஏன் என்று பா.ம.க. தலைமை கண்டித் திருக்கிறது. இதையடுத்துதான் ஊடகத்தினர், சமூக வலைத்தளத்தில் எழுதியவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சி.வி.சண்முகம் ஆதரவாளர்களி டம் பேசியபோது, "அப்படியெல்லாம் இடைத்தேர் தல் கொண்டுவந்து போட்டியிடும் எண்ணத்தில் சி.வி.சண்முகம் இல்லையென்றும், தி.மு.க.வினர் தான் வேண்டுமென்றே இதுபோன்று வதந்தியைப் பரப்பிவருவதாகவும்' கூறுகிறார்கள்.
-எஸ்.பி.எஸ்.