பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று பேசிவருகிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஆனால், ‘"குஜராத் காமராஜரே... டெல்லி எம்.ஜி.ஆரே...'’ என மோடியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆதரவாளரான தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் தலைவர் முள்ளக்காடு செல்வகுமார். குறிப்பாக, அந்தப் போஸ்டரில், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதனை மட்டும் வைத்துவிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மா.செ. செல்லப்பாண்டியன் ஆகியோரின் படங்களை கவனமாக தவிர்த்துவிட்டார்.
இந்த விஷயமெல்லாம் மோடிக்கு தெரியுமா?
ராஜபாளையம் எம்.எல்.ஏ. எஸ்.தங்கப்பாண்டியன். இவரிடம் சொக்கநாதன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தின் உட்புற சாலைகளை சீரமைத்துத் தருமாறு வாட்ஸ்ஆப் வழியாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். சில மாதங்களாக தொகுதியில் எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் சொக்கநாதன்புதூர் சாலைப்பணிகள் பற்றியே பேசிவந்த எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், 35 லட்ச ரூபாய்க்கான ஒப்பந்தப் பணிகளை அறிவித்து பணிகளையும் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று பேசிவருகிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஆனால், ‘"குஜராத் காமராஜரே... டெல்லி எம்.ஜி.ஆரே...'’ என மோடியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆதரவாளரான தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் தலைவர் முள்ளக்காடு செல்வகுமார். குறிப்பாக, அந்தப் போஸ்டரில், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதனை மட்டும் வைத்துவிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மா.செ. செல்லப்பாண்டியன் ஆகியோரின் படங்களை கவனமாக தவிர்த்துவிட்டார்.
இந்த விஷயமெல்லாம் மோடிக்கு தெரியுமா?
ராஜபாளையம் எம்.எல்.ஏ. எஸ்.தங்கப்பாண்டியன். இவரிடம் சொக்கநாதன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தின் உட்புற சாலைகளை சீரமைத்துத் தருமாறு வாட்ஸ்ஆப் வழியாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். சில மாதங்களாக தொகுதியில் எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் சொக்கநாதன்புதூர் சாலைப்பணிகள் பற்றியே பேசிவந்த எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், 35 லட்ச ரூபாய்க்கான ஒப்பந்தப் பணிகளை அறிவித்து பணிகளையும் தொடங்கிவிட்டார். வெறும் வாட்ஸ்ஆப் கடிதத்தை ஏற்றுக்கொண்டு தேவையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
வாவ்.. இவர் டிஜிட்டல் எம்.எல்.ஏ.!
தஞ்சையில் உள்ள பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் பொன் தா.மனோகரன். இவர் அ.ம.மு.க.விற்கு தாவிவிட்டதால், அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவை நடத்த திட்டமிட்டார் மயிலாடுதுறை எம்.பி. பாரதிமோகன். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை மீறியும் தில்லுமுல்லுகள் செய்து விழாவை நடத்தினர் அவரது ஆதரவாளர்கள். அதில், பாஸ்கர், வீராசாமி ஆகிய இருவருக்கு அந்தப் பதவியை ஏற்கனவே தருவதாக உறுதியளித்திருந்த எம்.பி., இறுதியில் "நீங்களே இருங்கள்' என்று மற்றவர்களைச் சொல்லவைத்து விட்டார்.
பின்னே.. விழா நடத்துனதே அதுக்குத்தானே!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஐ.டி.விங் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சமூகவலைத்தளங்களில் வேலை செய்வதற்கென்றே சம்பளத்திற்கு ஆள் வைத்திருக்கின்றனர். ஆனால், திருச்சி மா.செ. குமாரோ முக்கிய நிர்வாகிகள், பூத் கமிட்டி மற்றும் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்கள் என 150 பேருக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவர்களும் பத்திரிகையாளர்களுக்கு போட்டியாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஸ்மார்ட்போனுடன் சுற்றித் திரிகின்றனர். மூன்றாவது முறையாக எம்.பி.யாக வேண்டும் என்ற குமாரின் கணக்குதான் இது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
’ஸ்மார்ட்’போன் கணக்கு குமாருக்கு ஹிட் அடிக்குமா?
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் மீன்பிடி ஏலத்தை எடுத்தவர் கார்த்திகேயன். சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய்க்கான ஏலம் என்பதால், மீன் திருடுபோவதைத் தடுக்க ஐந்து இளைஞர்களை ரோந்துப் பணிக்காக சம்பளம் கொடுத்து வைத்திருந்தார். அவர்களும் ஏழு மாதங்களாக பணியை சிறப்பாக செய்துவர, கடுப்பாகினர் கொள்ளையர்கள். சில தினங்களுக்கு முன்னர் அணையில் முப்பதுபேர் கொண்ட கும்பல் மீன்பிடித்துக் கொண்டிருந்தது. அவர்களை விரட்டச் சென்ற இளைஞர்களில் இருவரை நீரில் தள்ளி கொன்றேவிட்டனர். சிலநாட்கள் மெத்தனத்திற்கு பிறகு இரண்டுபேரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
இதெல்லாம் எப்போ மாறப்போவுது?
அரியலூர் அ.ம.மு.க. மா.செ.வாக இருந்த முத்தையன், அண்ணா தொழிற்சங்க மா.செ. ஆண்டிமடம் அம்மா சண்முகம், ந.செ.க்கள் என இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் தாய்க்கழகமான அ.தி.மு.க.விற்கே சென்றுவிட்டனர். கட்சியின் உள்குத்துதான் இதற்கெல்லாம் காரணமென்று செய்தி பரவியது. இதுபற்றி கேட்டால், "முத்தையனை தூக்கிவிட்டு நியமிக்கப்பட்ட மணிவேலின் செயல்பாடுகள் அதிருப்தியைத் தருவதாக தினகரனிடமே சொன்னாக்கூட பயனில்ல. இங்க வந்து கடனாளிகளா ஆனதுதான் மிச்சம். பார்வைக்குதான் அ.ம.மு.க. மரமா இருக்கு. உண்மையில் உளுத்துப்போன கட்டைதான். எப்போ வேணாலும் பொலபொலவென உதிர்ந்திடும்'’என விரக்தியில் பேசுகின்றனர்.
அ.தி.மு.க. மட்டும் ஸ்ட்ராங்கா இருக்குதோ?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா புகழ்பெற்றது. பத்து நாட்கள் நடக்கும் இந்த விழாவிற்கான செலவு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது. திருவிழாவுக்காக உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் செய்யும் செலவையும் கோவில் நிர்வாகத்தின் செலவுக்கணக்கில் ஏற்றிவிடுகின்றனர். இதுபற்றி இந்து அமைப்பைச் சேர்ந்த சில பிரமுகர்கள் 2017ஆம் ஆண்டு ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கோரினர். ஆனால், 2019ஆம் ஆண்டு திருவிழா வந்தும் பதில் மட்டும் வருவதாக இல்லை. சொந்த மாவட்டக்காரரான சேவூர்.ராமச்சந்திரன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தும் பதில் கிடைக்காததால், நீதிமன்ற படியேறப் போகிறார்களாம்.
பக்தி இருக்கு, பயமில்லாம போச்சு..
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன். ஒருகாலத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என பிரபலமாக இருந்தவர், அரசியலில் இருந்து விலகி கல்வித்தந்தை ஆகிவிட்டார். இவரது மகன்களில் ஒருவரான செல்வம், மாவட்டத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிகள், பாலாற்றை தூய்மை செய்தல் போன்றவற்றில் முதன்மையாக நிற்கிறார். இதனால், செல்வத்திற்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. எம்.பி. தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்று கிளப்பிவிட்டனர் சிலர். ஆனால், "போன தேர்தலிலேயே இதுபோலத்தான் கொளுத்திப்போட்டனர். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை' என்கின்றனர் செல்வத்திற்கு நெருக்கமானோர்.
நல்லவேளை.. அடுத்த சி.எம்.னு கொளுத்திப்போடல!
-எஸ்.பி.சேகர், ஜெ.டி.ஆர்., து.ராஜா, நாகேந்திரன், செல்வகுமார்