திருச்சி திருவெறும்பூர் நடராஜபுரம் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக அ.தி.மு.க. சார்பில் பொறுப்பேற்றவர் பொற்செல்வி. அவர், அரசு உதவிபெறும் theriமுக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகவும் பணிபுரிகிறாராம். அரசு ஊழியரான பொற்செல்வி கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவராக போட்டியின்றி தேர்வானது எப்படி? என்று கலெக்டருக்கு புகார் பறந்திருக்கிறது. அதிர்ச்சியான கலெக்டரின் விசாரணையும் அதை உண்மையாக்கிவிட, கூட்டுறவு சங்க உயரதிகாரிகளை அழைத்து, "அரசியல்வாதிங்க சொல்படி கேட்க வேண்டியதுதான்.. அதுக்காக இப்படியா? உங்க வேலைக்கே உலையாகிடும் பாத்துக்கோங்க'’என்று கடிந்திருக்கிறார்.

கடிந்துகொள்ளத்தான் தெரியுமா கலெக்டரே?

Advertisment

நெல்லை களக்காட்டில் எம்.பி. தேர்தல் பிரச்சாரத்துடன் புத்தாண்டையும் இணைத்து சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர் உ.பி.க்கள். ஒ.செ. பி.சி.ராஜனின் ஏற்பாட்டில் "மோடிக்கு குட்பை'’என்ற தலைப்பில் இருசக்கர வாகனப் பேரணியும் நடத்தப்பட்டது. பேரணியாக சென்றவர்கள், ‘வரவிருக்கும் எம்.பி. தேர்தலில் மோடிக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?’என்பதை எடுத்துச்சொல்லும் பிரசுரங்களை வீதியெங்கும் பொதுமக்களுக்கு வழங்க, செல்லுமிடமெல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ். பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் "குட்பை மோடி' என முழங்கியதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே.

தமிழகத்துக்கும் தாமரைக்கும் ரொம்பதூரம் போல!

h raja

Advertisment

பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈரோடு வந்திருந்த எச்.ராஜா, பிரப் சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அவரை கோவிலுக்கு பின்புறம் கூட்டிச்சென்ற பா.ஜ.க.வினர் சி.எஸ்.ஐ. மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் மைதானத்தைக் காட்டி கோவில்நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக குற்றம்சாட்டினர். நூற்றாண்டு காலமாக கிறித்தவ அமைப்புக்குச் சொந்தமான இந்த நிலத்தை அபகரிக்க, பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் பல போராட்டங்களை நடத்தி பதற்றத்தையும் ஏற்படுத்தி வரும்நிலையில், அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச்.ராஜாவை காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை. தனது அரசியல் எடுபடாததை உணர்ந்த எச்.ராஜா "இன்னொரு நாள் வருகிறேன்' எனக்கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!

சமீபத்தில் விருதுநகர் அரசு மருத்துவமனை சார்பில் நடந்த ரத்ததான முகாமில் அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 450 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். அவர்களின் ரத்தப்பிரிவை சோதனை செய்யாமலே ரத்தத்தை சேகரித்துவிட்டு, அதற்கான சான்றிதழ்களை மொத்தமாக கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தத்தால் கர்ப்பிணிப்பெண் பாதிக்கப்பட்ட நிலையில், பயந்துபோய் ரத்தங்களை சோதித்ததில் ஒரேயொரு மாணவனுக்கு ஹெபடைடிஸ்,மஞ்சள்காமாலை தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த மாணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறாராம்.

உயிர் வேலையில் இத்தனை அலட்சியமா?

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மாதம்தோறும் புதன்கிழமைகளில் கூடும் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வாரத்தில் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் வீடுகளில் அமைச்சர்களுக்கு விருந்துகொடுத்து, விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் கொடுப்பது வழக்கம். வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் தனது முதல் விருந்துக்கே கடன்வாங்கித்தான் செலவு செய்திருந்தார். இதனால், அவரது மகள் திருமணத்தை நடத்தவே திணறிப்போனார். மீண்டும் அவரது சுற்று வந்தபோது பரிசுப்பொருட்களுக்குப் பதிலாக தனது உதவியாளரும், ஓவியருமான ரகுவை வைத்து அமைச்சர்களை ஓவியங்களாக வரைந்து அவற்றைக் கொடுத்து‘தன்னால் முடிந்தது இதுதான்’ எனக்கூறியிருக்கிறார்.

கம்யூனிஸ்டுக்கான அடையாளமே இதுதானே!

அ.ம.மு.க.வைச் சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடிக்கும், சிவகங்கை அ.ம.மு.க. மா.செ. கூத்தக்குடி theriஉமாதேவனுக்கும் ஏழாம்பொருத்தமாம். இருவருக்கும் இடையே டி.டி.வி.யே பஞ்சாயத்து நடத்திய சம்பவமும் உண்டு. ஒருநாள் பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை வீட்டிற்கு அழைத்து, "யாரையும் போகவேணாம்னு தாங்கமுடியாது. பழைய நிர்வாகிகளுக்கு பொறுப்பு கிடையாது'’என பேசியிருக்கிறார். இதுபற்றி அவர்களில் சிலர் கென்னடியிடம் முறையிட... "எனக்கே இங்க மரியாத இல்ல. வேற கரைவேட்டிக்கு மாறுனா நல்லா இருக்குமா?'’என கேட்டிருக்கிறார்.

அடுத்த பார்ட்டி ரெடி.. எந்தப் பார்ட்டிக்குப் போகுமோ!

திண்டுக்கல் அ.தி.மு.க.வில் வனத்துறை அமைச்சர் சீனிவாசனும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் பழனி சிவகிரிப்பட்டி வேளாண் கூட்டுறவு மைய நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலில் இந்த இரு கோஷ்டியினரும் வேட்புமனு செய்தனர். இறுதிகட்ட வேட்புமனுவுக்கான பரிசீலனை நடந்துகொண்டிருந்த சமயத்தில், அமைச்சர் சீனிவாசன் தரப்பும், நத்தம் விஸ்வநாதன் தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். காவல்துறையினர் புகுந்து விலக்கிக் கொண்டிருக்க, வேட்புமனுக்களை ஒட்டாமலேயே அதிகாரிகள் ஓடிவிட்டனர்.

இந்தத் தேர்தலை எவ்ளோ நாள் ஒத்திவைப்பாங்களோ?

ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டா நிலங்களில் மண் அள்ளுவதற்கு புவியியல்#சுரங்க ஏ.டி., ஆர்.டி.ஓ, வனத்துறை, தாசில்தார் அடங்கிய டி.ஐ.ஏ.ஏ. குழு அனுமதி வழங்குகிறது. தேனியில் இந்த அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் ஒருலட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே மணல் அள்ள லைசன்ஸ் கிடைக்கிறதாம். அதுமட்டுமின்றி, மாசுக்கட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர் கருப்பணனுக்கு ரூ.5 லட்சம் தரச்சொல்லி டி.ஈ. குமரவேலும், கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ரூ.5 லட்சம் தரச்சொல்லி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவும் அமைச்சர்களின் பி.ஏ.க்களிடம் அனுப்புகிறார்களாம்.

டீம்-ஒர்க் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களே!

-ஜீவாதங்கவேல், ஜெ.டி.ஆர்., மணிகண்டன், நாகேந்திரன், அருண்பாண்டியன், ப.ராம்குமார்