ராமநாதபுரம் திருவாடனை தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்றவர் எம்.எல்.ஏ. கருணாஸ். இவருக்கும் theriதகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால், சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரையொருவர் காலைவாரிக் கொள்கின்றனர். அப்படித்தான், ஆர்.எஸ்.மங்கலத்தில் இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு பேசிய அமைச்சர் மணிகண்டன், “""தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் இருக்காரா இல்லையான்னே தெரியல. ஊருக்கும் ஒண்ணும் பண்ணுறதில்ல. எங்கேன்னு தேடிப்போனா டாஸ்மாக்கிலோ, லாட்ஜிலோ கெடப்பார்''’என ஓப்பனாக பேசிவிட்டார்.

கருணாஸ் பேசாத ஓப்பன் டாக்கா?

theri

Advertisment

கிறிஸ்துமஸ் விழாவிற்காக திருச்சி சென்றிருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. இலக்கிய வெளியீட்டுச் செயலாளர் என்.செல்வேந்திரனைப் பார்க்க சீனிவாச நகருக்குச் சென்றார். செல்வேந்திரனிடம், "எப்படி இருக்கீங்க? டி.வி., பத்திரிகையெல்லாம் பார்க்கிறீங்களா?' என ஸ்டாலின் கேட்க பதில் வரவில்லை. உங்க வயசு என்ன? என்றதும் குறைத்துச் சொல்லியிருக்கிறார் வேகமாக. உடனிருந்த கே.என்.நேரு, "என் வயசைச் சொல்றீங்க ஐயா'’எனச் சிரிக்க, செல்வேந்திரனின் மகன் எழில், “"அவருக்கு வயது 79, அப்பப்போ மறந்திடுவாரு. மத்தபடி ஒண்ணுமில்ல'’எனச்சொல்ல அந்த இடமே சிரிப்பொலியால் நிறைந்தது.

காய்ச்சலை மறக்கடித்த தருணம்!

2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு பலம் சேர்த்தது கொங்கு மண்டலம்தான். கரூர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முப்பதாயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்துவிட்ட நிலையில்... அது அ.தி.மு.க.வின் சரிவாகவே பார்க்கப்பட்டது. தற்போது, ஈரோடு அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக ஜெ.வால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரமேஷ்குமாரும் தி.மு.க.வில் இணைந்துள்ளார். மேலும், தனது ஆதரவாளர்கள் பத்தாயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்வை, ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறாராம்.

Advertisment

அம்மா வழி ஆட்சி பிடிக்கலை போல!

அரியலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ் இளவரசன், தமிழர் உரிமை மற்றும் மரபுசார் விவசாயம் சார்ந்த புத்தகங்களை விற்பனை செய்துவருகிறார். அதேசமயம், சிமெண்ட் ஆலைகள், ஸ்டெர்லைட் மற்றும் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்தும் வருவதால் நேரம் பார்த்திருந்தது காவல்துறை. சமீபத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் படம் பொறித்த காலண்டர் விற்ற தமிழ் இளவரசனை, "பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக'க் கூறி 153, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

போராடினால் போட்டுத்தள்ளும் அரசாச்சே!

திருவண்ணாமலை ஆரணி தொகுதியிலிருந்து முதன்முதலில் அமைச்சரானவர் சேவூர் ராமச்சந்திரன். அவர் தொகுதிக்கு நல்லது செய்வதாக பல அமைப்புகள் பாராட்டு விழா நடத்துகின்றன. டிச. 23-ல் வியாபாரிகள் சங்கம் நடத்திய விழாவில் சேவூராரோடு கலந்துகொண்ட ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலை, ""பட்டுப்பூங்கா அமைப்பதற்காக மத்தியத்துறை அமைச்சரிடம் கேட்டால் நிதியில் 50% கமிஷன் கேட்கிறார். திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டம் பற்றி பேசினால், ரயில்வே அமைச்சர் மறுக்கிறார். இப்படி மோடி அரசு ஐந்தாண்டுகளாக ஏமாற்றுகிறது. ஆனால், மக்கள் திட்டுவது என்னமோ எங்களைத்தான்''’என நொந்து பேசியிருக்கிறார்.

தேர்தல் வந்துட்டா இப்படியெல்லாம் பேசத்தோணுமோ?

duraimurugan

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு, நெல்லையில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வுசெய்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தியது. அதில் நெல்லை மாநகர ஆணையர் நாராயணன் நாயரிடம், “""எந்தவிதமான எஸ்ட்டிமேட்டும், நிதி ஒதுக்கீடும் இல்லாமல் நீங்கள் சேர்மனாக இருக்கும் அம்மா உணவகங்களுக்கு பத்துகோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதே? சுகாதார ஆய்வாளர் இல்லாத நிலையில் காலாவதியான மாத்திரைகள் சப்ளை செய்யப்பட்டுள்ளதே?''’எனக் கேட்டு திகைக்க வைத்திருக்கிறார் துரைமுருகன். "விசாரிக்கிறேன்' என்றாராம் தயங்கிய குரலில் ஆணையர்.

தன்னைத்தானே விசாரிச்சிக்குவாரோ?

theri

குற்றங்களைக் கண்டறிதல், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, காவலர்களின் சமூகப்பணிகள், மக்களை வரவேற்பது மற்றும் காவல்நிலைய தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் டாப் 10 காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதன்படி, இந்தாண்டுக்கான லிஸ்டில் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் சொந்தஊரான பெரியகுளத்தில் உள்ள வடகரை டி-1 காவல்நிலையம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய ஓ.பி.எஸ். காவலர்களுடன் நின்றும், அமர்ந்தும் விதவிதமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அமைதிப்பூங்காவுக்கு எதுக்கு போலீஸ் ஸ்டேஷன்?

""திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருந்தவர் மகிழேந்தி. சட்டப்பணிகள் குழுத்தலைவராகவும் பொறுப்புவகித்த இவர், களத்தில் இறங்கி மாவட்ட நிர்வாகம், காவல்துறை போட்டி என கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பல விவகாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, மக்களுக்கு நீதிகிடைக்க வழிசெய்தார். தற்போது அவரை திருச்சி மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது நீதித்துறை. மூன்றாண்டுகள் நிறைவடைந்ததுதான் இதற்கான காரணமென்று சொல்லப்பட்டாலும், “மேலிடத்து அதிருப்திதான் டம்மியான இடத்திற்கு மாற்றியிருக்கிறது''’என்கின்றனர் அதிர்ச்சியிலிருக்கும் சமூக ஆர்வலர்கள்.

ஊழலா செஞ்சாரு? பதவி நீட்டிப்பு செய்ய!

-பரமசிவன், ஜீவாதங்கவேல், எஸ்.பி.சேகர், ஜெ.டி.ஆர்., து.ராஜா, நாகேந்திரன், சக்தி