சென்னைக்கு அடுத்தபடியாக, கலைஞரின் குருகுலமான தந்தை பெரியாரின் ஈரோட்டில் ஜனவரி 30-ஆம் தேதி கலைஞரின் சிலையை திறக்கிறார் மு.க.ஸ்டாலின். ஈரோடு பேருந்து நிலையம் அருகே முனிசிபல் காலனி சந்திப்பு முகப்பில் தி.மு.க.வுக்குச் சொந்தமான இடத்தில் சிலை நிறுவப்படவுள்ளது. அறிவாலய சிலை செய்த சிற்பி தீனதயாளன்தான் இந்தச் சிலையையும் செய்து வருகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார் ஈரோடு தெற்கு மா.செ.வான சு.முத்துசாமி. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கலைஞரின் சிலையை திறக்கும் ஏற்பாடுகளில் மா.செ.க்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அறிவாலயம்.. குருகுலம்.. தி.மு.க.வில் குதூகலம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் கைதிகளை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, நிர்வாண சோதனையிடுவது வழக்கம். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலாதேவி வழக்கு விசாரணை கைதிகளோ, ""கஞ்சா கொண்டு செல்லும் கைதிகளைக்கூட விட்டுவிடுகிறார்கள். எங்களைக் கட்டாயப்படுத்தி நிர்வாண சோதனை செய்கின்றனர். உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காக, எட்டு மாதங்களாக வீண்பழி சுமத்தி அடைத்து வைத்திருப்பது மட்டுமின்றி, நிர்வாண சோதனையி
சென்னைக்கு அடுத்தபடியாக, கலைஞரின் குருகுலமான தந்தை பெரியாரின் ஈரோட்டில் ஜனவரி 30-ஆம் தேதி கலைஞரின் சிலையை திறக்கிறார் மு.க.ஸ்டாலின். ஈரோடு பேருந்து நிலையம் அருகே முனிசிபல் காலனி சந்திப்பு முகப்பில் தி.மு.க.வுக்குச் சொந்தமான இடத்தில் சிலை நிறுவப்படவுள்ளது. அறிவாலய சிலை செய்த சிற்பி தீனதயாளன்தான் இந்தச் சிலையையும் செய்து வருகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார் ஈரோடு தெற்கு மா.செ.வான சு.முத்துசாமி. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கலைஞரின் சிலையை திறக்கும் ஏற்பாடுகளில் மா.செ.க்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அறிவாலயம்.. குருகுலம்.. தி.மு.க.வில் குதூகலம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் கைதிகளை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, நிர்வாண சோதனையிடுவது வழக்கம். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலாதேவி வழக்கு விசாரணை கைதிகளோ, ""கஞ்சா கொண்டு செல்லும் கைதிகளைக்கூட விட்டுவிடுகிறார்கள். எங்களைக் கட்டாயப்படுத்தி நிர்வாண சோதனை செய்கின்றனர். உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காக, எட்டு மாதங்களாக வீண்பழி சுமத்தி அடைத்து வைத்திருப்பது மட்டுமின்றி, நிர்வாண சோதனையிடுவது மனஉளைச்சலை அதிகப்படுத்துகிறது''’’ என புலம்புகின்றனர்.
மேலிடத்து புரோட்டோகால்தானே?
தூத்துக்குடி வடக்கு, தெற்கு தி.மு.க. மா.செ.க்களான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் கீதாஜீவனுக்கும் இடையே சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லையாம். இது தேர்தலில் சுணக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கலாம் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் கசிந்தது. ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸின் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி செல்வராஜின் மகன் ஊர்வசி அமிர்தராஜ் இதற்காக அடிபோடுகிறாராம். ரேசில் தனுஷ்கோடி ஆதித்தனும் இருக்கிறாராம். அதேபோல், கன்னியாகுமரியும் காங்கிரஸுக்கு போகலாம் என்று சொல்லப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கே வழி தெரியல.. அதுக்குள்ளயா!
திருச்சி மேற்கு அ.தி.மு.க. பூத் ஏஜெண்ட்டுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் உறையூரில், மா.செ. குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடிய கூட்டத்தால் உற்சாகமடைந்த குமார், இவ்வளவு பேர் வந்திருப்பதைப் பார்த்தால், கே.என்.நேருவிடம் இருந்து தொகுதியை நிச்சயம் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாகக் கூறினார். கூட்டத்தை நடத்திய உறையூர் பகுதிச்செயலாளர் பூபதியை அழைத்துப்பேசிய அமைச்சர் வளர்மதியோ, ""ஜெயிக்கப் போறேன்னு பேசியிருக்காரு உங்க மா.செ. போனவாட்டி 25 ஆயிரம் மாதிரி இந்தவாட்டி 50ஆயிரம் ஓட்டு வித்தியாசமா?'' எனக்கேட்டு கிண்டலடித்தாராம்.
என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை!
திருவாரூர் கொரடாச்சேரி அருகே பெருமாளகரத்தில் செயல்பட்டு வருகிறது கெயில் நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பத்து கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து தருவதாகக்கூறி விவரங்களைப் பெற்றுச் சென்றனர். 15 நாட்களாகியும் எந்தவிதமான உதவியும் செய்யாதது குறித்து விசாரித்தும் உரிய விளக்கமில்லை. இதனால் கடுப்பான பொதுமக்கள் நிவாரணம் தரும்வரை உணவு சமைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தை கெயில் நிறுவனத்தின் முன்பாக தொடங்கிவிட்டனர்.
மத்திய அரசின் சார்பு நிறுவனமாச்சே!
நாமக்கல் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுப்ரியா, கோகுல்ராஜ் வழக்கை விசாரித்துவந்த நிலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதை விசாரித்துவந்த சி.பி.ஐ. எந்தவித முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை முடித்தது. இந்நிலையில், விஷ்ணுப்ரியாவின் சாதி மற்றும் குண்டான உருவம் குறித்து உயரதிகாரிகள் கிண்டலடித்ததாகவும், இறப்பதற்கு முந்தையநாள் எஸ்.பி. செந்தில்குமாருடன் 14 நிமிடம் 14 நொடிகள் போனில் பேசியிருப்பதாலும், முறையாக விசாரிக்கக்கோரி விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். வழக்கை மீண்டும் நீதிமன்றம் கையிலெடுக்க, காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு பற்றியிருக்கிறது.
சி.பி.ஐ. நீதிமன்றமே சி.பி.ஐ.க்கு குட்டு வச்சிருக்கு!
""ஆந்திராவில் செம்மரம் கடத்துபவர்கள் வனத்துறையினரால் சித்தரவதைக்குள்ளாவது தொடர்கதையான ஒன்று. இந்நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி சிந்தமாலுபண்டாவில் ரோந்துசென்ற வனத்துறையினரைப் பார்த்துவிட்ட கடத்தல்காரர்கள் கல்வீசி தாக்கியதாகவும், ஒருவனைப் பிடித்து மற்றவர்களைப் பிடிக்கும் விசாரணை நடப்பதாகவும் டாஸ்க்போர்ஸ் சொன்னது. ஆனால், “இதுபோன்ற சமயங்களில் சிக்கிவிடும் பலரை கணக்கு காட்டாமல் பலநாட்கள் டார்ச்சர் செய்து, பின்னர் வலைவீசிப் பிடித்ததாக செய்தி வெளியிடுவார்கள். யாரையும் சுடக்கூடாது என்பதை உறுதிசெய்யவே போராடிக்கொண்டிருக்கிறோம்''’என பெருமூச்சு விடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மனித மிருகங்கள்!
திருச்சி மகளிர் நீதிமன்றத்தின் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக 2017-ல் நியமிக்கப்பட்டவர் கிருஷ்ணவேணி. அ.தி.மு.க.காரரான இவர் திடீரென்று அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். எதற்காக என்று விசாரித்ததில், போக்சோ உள்ளிட்ட 11 வழக்குகளில் சாட்சியங்களை பிறழ்சாட்சி சொல்ல வைத்திருக்கிறார் கிருஷ்ணவேணி. இதுபற்றி, பெண் போலீஸ் ஆய்வாளர் ஒருவர், மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க, கலெக்டர் கவனத்துக்குப் போனதில் விசாரித்து அதிரடியாக நீக்கிவிட்டதாக சொல்கின்றனர்.
லேட் ஆனாலும் நல்ல தீர்ப்பு!
நகைக் கொள்ளையன் நாதுராமைப் பிடிக்கப்போய், சக காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி சொந்தஊரான நெல்லை மாவட்டம் சாலைப்புதூரில் அனுசரிக்கப்பட்டது. பெரியபாண்டியன் உயிரோடிருக்கையில் அரசுப்பள்ளி கட்டுவதற்கு 15 சென்ட் நிலத்தை தானமாகக் கொடுத்ததால், அவரது பெயரையே பள்ளிக்கு வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை, அரசு அதிகாரிகளிடத்தில் முன்வைத்தனர். "இதோ உடனே செஞ்சிடுறோம்'’என சொல்லிவிட்டுப் போனவர்கள், மறந்தேவிட்டதாக வேதனைப்படுகிறார் பெரியபாண்டியனின் சகோதரர் ஜோசப்.
கலெக்டர் ஆபீஸில் ஃபைல் உறங்குகிறது!
-பரமசிவன், சி.என்.ஆர்., ஜீவா தங்கவேல், ஜெ.டி.ஆர்.,
ராஜா, செல்வகுமார்