தஞ்சாவூர் சாந்தி தியேட்டர் முன்பாக கூடிய அ.தி.மு.க.வினர் "சர்கார்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜய்யின் உருவ பொம்மையை எரிக்கவும் தயாராகிக்கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வருகைக்காக கொடும்பாவி, பெட்ரோல் சகிதம் காத்திருந்தனர். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வைத்தியலிங்கம், “""இது பிரச்சனையை வீரியமாக்கும். அதோட தஞ்சாவூர்ல இடைத்தேர்தல் வேற வரப்போகுது. இந்நேரத்துல விஜய் கொடும் பாவியை எரிச்சா அவரோட ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்''’எனக்கூறி தடுத்துவிட்டார்.
ஹார்ஷா திட்டிட்டு கிளம்பிட்டாங்களாம்!
அமைச்சர் வளர்மதியின் வீடு இருக்கும் உறையூர் லிமிட்டிற்கு உட்பட்ட காவல்நிலையத்திற்கு ரூ.1லட்சம் தீபாவளி பணமாகக் கொடுத்து பிரித்துக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். போக்குவரத்துப் பிரிவு போலீசாரோ ‘"எங்களோட பங்கு கிடைக்கலையே!'’ என புலம்பிக் கொண்டி ருக்கின்றனர். அதே ஸ்டேஷனுக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ‘வழக்கமா ஆயிரம் ரூபாய் கொடுப்பேன். இந்தமுறை ஐந்நூறு மட்டும் வச்சுக்கோங்க.. அடுத்த தீபாவளிக்கு இதை விட 4 மடங்காதர்றேன்'’என ஆசுவாசப் படுத்தியிருக்கிறார்.
வேற வழியில் வசூல் பண்ணிப்பாங்க!
தினகரன் அணிக்குத் தாவிய விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச் செல்வன் அ.ம.மு.க. மா.செ.வாக ஆனதால், அவரது அ.தி.மு.க. ந.செ. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து 18 எம். எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் போலவே கலைச்செல்வன் உள்ளிட்ட மூன்று அதிருப்தி எம்.எல்.ஏ.க் களுக்கும் நடக்கலாம் என தகவல்கள் வெளி யாகின. ஒருவேளை அப் படி நடந்தால் காலியாகும் தொகுதியில் எம்.எல்.ஏ. மற்றும் ந.செ. பதவிகளுக்கான பேரத்தை நடத்தி வருகின்றனர் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் எம்.பி. அருண்மொழித் தேவன் அணி யினர். கலைச் செல்வனோ "ஆளும்தரப்பு அனுப்பிய நோட்டீஸ் வரவில்லை. வந்தால் பார்த்துக்கொள்ளலாம்' என்கிறார்.
இருபதோடு இருபத்தொன்றா?
கர்நாடக இசையில் மதச்சார்பின் மையை வலியுறுத்தும் விதமாக கிறித்துவ, இஸ்லாமிய பாடல்களையும் பாடி வருகிறார் பாடகர் டி.எம்.கிருஷ்ணா. இவர் டெல்லியில் இந்திய விமானநிலையங்கள் ஆணையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், இந்துத்வவாதிகள் டி.எம். கிருஷ்ணாவை அர்பன் நக்சல், மதம்மாறிய மதவெறியன் என கடுமையாக விமர்சித்த தால் அவரது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட் டது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, "சொன்ன தேதியில் டி.எம். கிருஷ்ணாவின் இசைநிகழ்ச்சி நடை பெறும். கலை, கலைஞர்களின் கண்ணியத்தைக் காக்கவேண்டியது நம் கடமை'’ என அறிவித்தார் அதிரடியாக. அரசு நடத்திய விழாவில் அசத்தினார் டி.எம். கிருஷ்ணா.
அவங்க பயந்தா சரியாத்தான் இருக்கும்!
திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் நடத்திவரும் போஸ் மக்கள் பணியக நிர்வாகியின் திருமணம் ராம நாதபுரம் ஓ.வி.எஸ். மஹாலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஜெய் ஆனந்த் அங்கிருந்து கிளம்ப, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எதிரே வந்தார். மணமக்களுடன் அவசர அவசரமாக போட்டோ எடுத்துக்கொண்டு வெளியேறிய அமைச்சர், ஜெய் ஆனந் துடன் காரில் அமர்ந்து “""உங்க குடும்பத்தால தான் இவ்ளோ உயரத்துக்கு வந் தேன். எப்பவும் உங்க விசுவாசி நான். அப்பாவைக் கேட்டதா சொல்லுங்க''’ என பாசமாகப் பேசியிருக்கிறார். இதை உளவுத்துறை மூலமாக அறிந்து கொண்ட மேலிடம் அமைச்சரைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறது.
திவாகரனின் ஸ்லீப்பர் செல்!
திருநெல்வேலி அம்பை தாலுகாவில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் மையங்களில், நெல் மூட்டை களை விற்றனர் விவசாயிகள். அப்போது 42 கிலோ எடையுள்ள மூட்டையை 40 கிலோவுக்கும், இல்லாத இடைத்தரகருக்கு கமிஷனாக 60 ரூபாயும் பிடித்துக்கொண்டனர் அதிகாரிகள். அதே போல், நெல் கொள்முதலுக்கு மறுநாளே பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கம் மாறி, நான்கு கோடி ரூபாய் வரை நிலுவையில் வைத்திருக் கின்றனர். விவசாயிகளோ வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்ட முடியாமல் விழிக்கின்றனர். கொள் முதல் மையங்களின் மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகனோ, கலெக்டர் ஷில்பாவோ இதுபற்றி வாய்திறக்கவே இல்லை.
மக்கள் வாய்திறந்தா சரியாகிடும்!
உலகின் தலைசிறந்த ஃபார்முலா ஒன் கார்பந்தய வீரர் லூயிஸ் ஹேமில் டன் "இந்தியா போன்ற ஏழை நாடுகளில் பந்தயம் நடத்துவது அவசிய மில்லை' என தெரிவித்திருந் தார். இதற்கு பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்த, "அழகிய மற்றும் வளரும் பொருளாதார நாடு இந்தியா. ஆனால், வசிக்க வீடுகூட இல்லாதவர்களும் அங்கு இருக்கின்றனர். பந்தயத் துக்கு ஆகும் செலவை பள்ளிக்கூடங்கள் மற் றும் வீடுகள் கட்டப் பயன்படுத்தலாமே'’என விளக்கமளித்துள்ளார் ஹேமில்டன். "பட்டேல் சிலை நிறுவியதற்கு பதிலாக பல்வேறு நலத்திட் டங்கள் செய்திருக்க லாம்' என பிரிட்டன் எம்.பி. பீட்டர்போன் ஏற்கெனவே தெரிவித்து விட்டார்.
அதிகார மையத்துக்கு புரியணுமே!
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய தமிழக அரசின் தீர்மானத்தில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்தவித முடிவும் எடுக்க வில்லை. இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, உலகத் தமிழர்கள் பலரும் கவர்னருக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க வாழ் சீக்கியர்களும் கவர்னர் துரிதமாக செயல் பட வேண்டுமென கடிதம் எழுதியுள்ளனர். காலிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கையும், அதன்விளைவாக ஏற்பட்ட கொடுந்துயரங் களும்தான் சீக்கியர்கள் கடிதம் எழுதுவதற்கான காரணம் என்கின்றனர் அமெரிக்கவாழ் தமிழர்கள்.
3 பேர் மட்டுமல்ல, 7 பேரும் இருக்காங்க!
-பரமசிவன், ஜெ.டி.ஆர்., ராஜா, செல்வகுமார், நாகேந்திரன், சுந்தரபாண்டியன்