நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திருவண்ணா மலையில் தி.மு.க. 70 சதவீதம் வெற்றி பெற்றது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க. படுதோல்வி. தெற்கு மா.செ.வான அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்காக, ஏரியா மாற்றி யதில் செய்த குளறுபடிதான் தோல் விக்குக் காரணமென தலைமைக்கு புகார் பறந்தது. இதுபற்றி ஆலோ சித்த இ.பி.எஸ்.சிடம், "தினகரனின் அ.ம.மு.க.வைப்போல், மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தால் என்ன?' என்று அமைச்சருக்கு நெருக்கமான சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதில் கடுப்பான இ.பி.எஸ்., “""கட்சிக்காரனை ஜெயிக்கவைக்க துப்பில்ல. இதுல, அடுத்த கட்சியைப்போல மூணா பிரி, நாலா பிரின்னு சொல்றீங்களே... வெட்கமாயில்ல'' என திட்டியுள்ளார்.
லெஸ் டென்ஷன் மோர் ஒர்க்!
ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வட இந்தியர் களின் எண்ணிக்கை அதிகரித்துவரு கிறது. இவர்களில் சிலர் சமூகவிரோத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனை முறைப்படுத்த முடிவுசெய்த மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன், சிம் கார்டு விநியோகஸ்தர்களை அழைத்து கூட்டம் நடத்தினார். அதில், "இனி சாலையோரங்களில் குடைகளை அமைத்து சிம்கார்டு விற்கக்கூடாது. வட இந்தியர் களுக்கு சிம்கார்டு விற்கும்போது, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை நகல், நிறு வன உரிமையாளரின் அனுமதிக் கடிதம் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்ட பிறகே விநியோகம் செய்யவேண்டும்' என உத்தரவிட்டுள் ளார். நல்ல திட்டம் என்கிறார்கள் ஈரோடுவாசிகள்.
மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கலாமே!
ஜனவரி 18-ந் தேதி இரவு 9 மணியளவில் வேலூர் கோட்டை மதில் மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது ஒரு காதல்ஜோடி. திடீரென அங்கு வந்த மூன்று இளைஞர்கள், காதல னைத் தாக்கிவிட்டு கத்தி முனையில் இளம்பெண்ணை வன்புணர்வு செய்து ள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் ணை மருத்துவமனையில் சேர்த்த தோடு, புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரிக்க, எஸ்.பி. பிரவேஷ் குமார் அமைத்த தனிப்படை அஜித், மணிகண்டன், சக்திவேல் மற் றும் உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரி ஆகி யோரைக் கைதுசெய்தனர். இவர்களில் 17 வயதே நிரம்பிய அஜித் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மற்றவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. ""மாநகரின் மையத் தில் இருக்கும் கோட்டையிலேயே பாதுகாப்பு இல்லையா?'' என்கிறார்கள் பொது மக்கள்.
நிர்பயாக்கள் நிம்மதியாக வாழவே முடியாதா?
கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்ளாட்சித் தேர் தலில், 22 இடங்களில் எந்தக் கட்சிக் கும் பெரும்பான்மை இல்லை. 11-ந் தேதி நடந்த மறைமுகத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியான பா.ம.க.வைச் சேர்ந்த கவுன் சிலர்கள், தி.மு.க.வுக்கு ஆதர வாக வாக்களித்ததால், தி.மு.க. வின் பலம் 13 ஆனது. இதைப் பார்த்து கடுப்பான அ.தி.மு.க. ஒன்றிய சேர்மன் வேட்பாளர் சாந்தி வேங்கன், வாக்குச் சீட்டுகளைக் கிழித்தெறிந் தார். தேர்தலும் தள்ளிப்போனது. 30-ந் தேதி மீண்டும் நடந்த மறைமுகத் தேர்தலில் 16 கவுன்சிலர் களின் ஆதர வோடு தி.மு.க.வின் உஷா ராணி குமரேசன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ம.க. உடனான கூட்டணி உள்குத்தால், சாந்தி வேங் கனின் சேர்மன் கனவு பறிபோனது.
கூட்டணி தர்மத்தில் இதெல்லாம் சேராது!
1948-ல் இருந்தே இஸ்ரே லுக்கும் பாலஸ் தீனத்துக்கும் இடையே மோ தல் நீடிக் கிறது. இரண்டு நாடு களுமே ஜெருச லேமை சொந்தம் கொண்டாடுகின் றன. 2014-ல் நடை பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை யிலும் தீர்வு எட்டவில்லை. 2017-ஆம் ஆண்டு தலை யிட்ட அமெரிக்கா, ஜெரு சலேம் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம் என்று அறிவித்து, மீண்டும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது. தற்போது இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வுகாண்பதாகச் சொல்லி, மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை வெள்ளை மாளி கையில் வைத்து வெளி யிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். உடன் இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவும் இருந்தார். பாலஸ்தீனமோ, அமெரிக்காவின் இந்தச் சதியை ஏற்கமாட்டோம் என்கிறது. அமெரிக்காவோ, ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர்தான் என்று மீண் டும் பற்றவைத்திருக்கிறது.
கொளுத்திப் போட்டு குளிர்காயும் அமெரிக்கா!
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் முடிவை தீவிரப்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. அதன்படி, ஏர் இந்தியாவின் நூறு சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்ததோடு, மார்ச் 17-வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் கூறியிருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற முயற்சி தோல்வி அடைந்ததால், ஏர் இந்தியாவை வாங்காமல் விலகிச்சென்ற நிறுவனங்களின் ஆலோசனைப்படி சலுகைகளை அள்ளி வீசியிருக்கிறது மத்திய அரசு. ஏர் இந்தியாவின் மொத்தக் கடனான ரூ. 60 ஆயிரம் கோடியில் ரூ.23 ஆயிரம் கோடியை மட்டுமே அதை வாங்கும் நிறுவனம் செலுத்தினால் போதும். வேண்டுமென்றால் ஏர் இந்தியா என்ற பெயரைக்கூட மாற்றிக்கொள்ளலாம் என சலுகை லிஸ்ட் நீள்கிறது.
கவலைக்கிடமா இருப்பதால் இந்தியாவையும் விற்பாங்களோ?
குளிரால் தரையே கிடுகிடுத்து நடுங்கும் தை மாதம் இது. வெப்ப நகரவாசிகளே குளிர் தாங்கமுடியாமல் போர்வைக்குள் புதைந்திருக்கும்போது, பனி போர்த்திய ஊட்டியைப் பற்றி சொல்லவா வேண்டும். அப்படியொரு காலைப்பொழுதில், சேரிங்கிராஸ் அருகே நீலகிரி கலெக்டர் இன்னொசென்ட் திவ்யா காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையோரப் பாதையில் நடுங்கியபடி படுத்திருந்த மூதாட்டியைப் பார்த்ததும், காரை நிறுத்தியவர் தன்னிடமிருந்த சால்வையை அவருக்குப் போர்த்தி கூட்டி வந்தார். குளிருக்கு இதமாக தேநீர் வாங்கித் தந்தார். கையோடு கூட்டிச்சென்று தன் சிபாரிசில் காப்பகத்திலும் சேர்த்துவிட்டார். மூதாட்டி கைகூப்பி வணங்க... முதுகில் தட்டிக்கொடுத்து கிளம்பினார் கலெக்டர்.
மனிதநேயக் கலெக்டர் ஒரு பெண் பேகன்!
பத்மஸ்ரீ விருது பெறுவோர் பட்டியலை, கடந்த 25-ந் தேதி வெளியிட்டது மத்திய அரசு. மிகவும் விமர்சிக்கப்பட்ட இந்தப் பட்டியலில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுஷோவன் பானர்ஜி என்ற மருத்துவரின் பெயரும் இருந்தது. பிர்பும் மாவட்டத்தில் போல்பூரில், ஏழை மக்களுக்கு வெறும் ரூ.1 மட்டுமே வாங்கி சிகிச்சை அளித்துவரும் இவரை, ஒரு ரூபாய் மருத்துவர் என்றே அழைக்கிறார்கள் அப்பகுதிவாசிகள். இதைப் பாராட்டியே சுஷோவன் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக் கப்பட்டுள்ளார். "அடிப்படையில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தும், என் சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி' என சுஷோவன் தெரிவித் துள்ளார்.
இதுவும் ஒருவித விளம்பரம்தானே!
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந் தவர் ஜெயலெட்சுமி. குடும்ப வறுமையில் தவித்த இவருக்கு உதவுவதாக, அனுசுயா மற்றும் இம்ரான் என்பவர்கள் அறிமுகமாகினர். இடைத்தரகர்களான இவர்கள், குழந்தைப் பராமரிப்பு என்ற பெயரில் ஜெய லெட்சுமியை சிங்கப்பூருக்கு அக்டோபர் மாதம் அனுப்பியுள்ளனர். ஆனால், அங்கு கொத்தடிமை போல வேலைசெய்ய ஜெயலெட்சுமிக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சொந்த ஊருக்குத் திரும்பவேண்டும் என்ற ஜெய லெட்சுமியின் கோரிக்கைக்கு, 2 லட்சரூபாய் பிணை கேட்டிருக்கிறார்கள் அங்கிருந்தவர்கள். ஆவடி காவல்நிலையத்திற்கு புகார் சென்றும் நடவடிக்கையில்லை. வெளியுறவுத்துறை கவ னத்துக்குக் கொண்டுசென்று, ஜெயலெட்சுமியை மீட்கும் பணியில் நக்கீரன் தீவிரமாக இறங்கி யிருக்கிறது.
ஆசை வலை விரிப்போரிடம் எச்சரிக்கை!
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில், ஜனவரி 28-ந் தேதி ஹிந்து ஆன்மிக கண்காட்சி தொடங்கியது. பிப்ரவரி 03-ந் தேதிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், அரங்கத்திற்கு முன்பாக பிரம்மாண்ட கண்ணகி சிலை நிறுவப் பட்டுள்ளது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தொடர்ந்து தமிழகத்தின் தொன்மையான பண்பாட்டு அடையாளங்களின் மீது மத அடையாளத்தைப் பூசப் பார்க்கின்றன. ஏற்கனவே, திருவள்ளுவருக்கு காவி உடை யணிந்து மதச் சாயம் பூசியது சர்ச்சையானது. இந்நிலையில், பிரபலமான இந்துக் கோயில் கள் எதிலும் கண் ணகி வழிபாடு இல்லாத போது, கண்ணகியை ஹிந்து அடை யாளமாக மாற்றத் துடிப்பது கண்டனத்திற்குரியது என்கிறார்கள் தமிழார்வலர்கள்.
ஒண்ணு வைப்பாங்க.. இல்ல ஒடைப்பாங்க!