ff

ttதிருவண்ணா மலை மாவட்டம், புளியரம்பாக்கம் என்கிற கிராமத்தின் வழியே செல்லும் 1.9 கி.மீ. நீளமுள்ள சாலையை சீரமைத்து, சிமெண்ட் சாலை அமைக்க திட்ட மிடப்பட்டது. ரூ.3 கோடி ஒதுக்கி, டெண்டரையும் திறந்துவிட்டது நெடுஞ்சாலைத் துறை. டெண்டரை எடுத்த பி.எஸ்.கே. நிறுவனம், சாலையைக் கிளறிப் போட்டதோடு, நான்கு மாதங்களாக ஏரியா பக்கமே வரவில்லை. இதனால், கிராம மக்கள் 6 கி.மீ. சுற்றிப்போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தட்டிக்கேட்கும் அதிகாரி களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தாங்கள் முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் என்று மிரட்டுவதாக தகவல் வருகிறது.

இவங்ககூட எல்லாமா சி.எம்.முக்கு ஃப்ரண்ட்ஷிப்பு?

tt

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி, இந்தமுறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகரின் முதல் மேயரும், அ.தி.மு.க. மா.செ.வுமான மருதராஜ் தன் மகள் பொன்முத்துவை யும், அமைச்சர் திண்டுக்கல் சீனி வா

ttதிருவண்ணா மலை மாவட்டம், புளியரம்பாக்கம் என்கிற கிராமத்தின் வழியே செல்லும் 1.9 கி.மீ. நீளமுள்ள சாலையை சீரமைத்து, சிமெண்ட் சாலை அமைக்க திட்ட மிடப்பட்டது. ரூ.3 கோடி ஒதுக்கி, டெண்டரையும் திறந்துவிட்டது நெடுஞ்சாலைத் துறை. டெண்டரை எடுத்த பி.எஸ்.கே. நிறுவனம், சாலையைக் கிளறிப் போட்டதோடு, நான்கு மாதங்களாக ஏரியா பக்கமே வரவில்லை. இதனால், கிராம மக்கள் 6 கி.மீ. சுற்றிப்போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தட்டிக்கேட்கும் அதிகாரி களை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தாங்கள் முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் என்று மிரட்டுவதாக தகவல் வருகிறது.

இவங்ககூட எல்லாமா சி.எம்.முக்கு ஃப்ரண்ட்ஷிப்பு?

tt

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி, இந்தமுறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகரின் முதல் மேயரும், அ.தி.மு.க. மா.செ.வுமான மருதராஜ் தன் மகள் பொன்முத்துவை யும், அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன் தனது ஐந்து மருமகள்களில் ஒருவரையும் மேயராக்க திட்ட மிட்டுள்ளனர். தி.மு.க.வைப் பொறுத்த வரை, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளரும், ஐ.பி.யின் தீவிர ஆதரவாளருமான ஜெகன் மனைவி சித்ரா, முன்னாள் ஒ.செ. பெருமாள்சாமி மனைவி சாந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் அருள்வாணி, சகாயமேரி ஆகி யோர் விருப்ப மனு கொடுத்துள்ள னர். இரு கட்சிகளின் மகளிரணி யினரும் ஆர்வம் காட்ட, சூடு பிடிக்கிறது உள்ளாட்சித் தேர்தல்.

அமைச்சருக்குதான் அதிக வாய்ப்பாமே!

hh

டலூர் அ.தி.மு.க.வின் கிழக்கு மா.செ.வாக அமைச்சர் சம்பத்தும், மேற்கு மா.செ.வாக முன்னாள் எம்.பி. அருண்மொழி தேவனும் இருந்துவந்தனர். மா.செ.க்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்த காரணத்தால், கோஷ் டிப்பூசல் நீடித்துவந்தது. சமீபத் தில் கடலூர் அ.தி.மு.க.வை மூன் றாகப் பிரித்த தலைமை, கிழக்கு மா.செ.வாக அருண்மொழிதேவன் ஆதரவாளரான எம்.எல்.ஏ. பாண்டியனை நியமித்து, மத்திய மா.செ.வாக அமைச்சர் சம்பத்தை அறிவித்தது. இந்நிலையில், சிதம் பரத்தில் ஒரு விழாவில் அமைச்சர் சம்பத்தும், எம்.எல்.ஏ. பாண்டிய னும் சந்தித்து கைகுலுக்கி, பரஸ்பரம் அன்பைப் பரிமாறிய நிகழ்வு, கோஷ்டிகளுக்கு இடையே உற்சாகத்தையும், இணக்கத் தையும் ஏற்படுத்தியது. அருண் மொழிதேவனோ தனிமரமாக நிற்கிறார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

டெல்டாவை புரட்டிப்போட்ட கஜா புயலில், கோடிக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்திலும் சாயாத சில மரங்களை, வெட்டிச் சாய்த்தார்கள் ஒப்பந்ததாரர்கள். இதுபற்றி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புகார் கொடுத்தபோது, உயிர்மரங்களை வெட்டுபவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்டார். ஓரளவுக்கு குறைந்தது. தற்போது ஓராண்டாகியுள்ள நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தினசரி வீட்டுக்கு சென்றுவரும் அன்னவாசல் கடைவீதியில், கஜா புயலிலும் கம்பீரமாக நின்று நிழல்தந்த பிரம்மாண்ட புளியமரத்தை சாலைக்கு பாதிப்பாக இருப்பதாக வெட்டி அகற்றிவிட்டனர். மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மரத்தின் அடியில் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் நெஞ்சை உலுக்கியது.

புயலைவிட மோசமானவங்க போல!

சென்னையில் சுகாதார மேம்பாட்டுக்கான பணிகளை முடுக்கிவிட்டதோடு, அங்குள்ள 15 மண்டலங்களிலும் அரசுப்பள்ளி மாணவிகளை தூதர்களாக நியமித்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் துரிதப்படுத்தினார் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். “"என் வீதி என்ன உன் வீட்டுக் கழிப்பறையா?, கொசுக்களை நசுக்குவோம்!' போன்ற வாசகங்களுடன் டிஜிட்டல் மற்றும் ஆட்டோ பிரச்சாரத்தை மாணவிகள் நடத்த... அது 80% வெற்றி அடைந்ததென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலு மணிக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. இதில் உற்சாகமடைந்த அமைச்சர், இதை இன்னும் விரிவுபடுத்த உத்தரவிட்டார். மாநகராட்சி முழுவதும் மாணவிகளின் பிரச்சாரம் போஸ்டர்களாக காட்சியளிக்கிறது.

வாழ்த்துகள் மாணவிகளே!

hh

சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்டு, ஈரோட்டுக் குழந்தைகளின் கல்விப்பசியைத் தீர்த்தவர் கல்வி வள்ளல் மீனாட்சி சுந்தரனார். அவர்சார்ந்த செங்குந்த முதலியார் சமுதாயத்தின் வாக்குகளை வளைக்கும் விதமாக, முக்கியத்துவம் வாய்ந்த பிரப் சாலையின் பெயரை, மீனாட்சி சுந்தரனார் சாலையாக மாற்றி, சமீபத்தில் விழா எடுத்தது அ.தி.மு.க. அரசு. குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்காமல், சாலை பெயரை மாற்றுவதால் யாருக்கு என்ன லாபம்? என்கிறார்கள் முதலியார் சமுதாயத்தினர். இன்னொருபுறம், ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் தந்த பிரப் பெயரை மாற்றியதன் விளைவு, உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அ.தி.மு.க.வுக்கு எதிராக கொடிபிடிக்கிறார்கள் கிறிஸ்தவ மக்கள்.

நினைச்சது ஒண்ணு! நடக்கிறது ஒண்ணு!

-இளையர், சக்தி, ஜீவாதங்கவேல், பகத்சிங், து.ராஜா, காளிதாஸ்

nkn031219
இதையும் படியுங்கள்
Subscribe