ff

mmசென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தமிழ் மொழியின் பெருமை குறித்து கொஞ் சம் தூக்கலாகவே பேசினார் பிரதமர் மோடி. ஆனால், அந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக, “"ஓம் சஹனா பவது; சகனவ் புனக்து'’ என் கிற சமஸ்கிருதப் பாடல்தான் பாடப் பட்டது. இதுபற்றி பிரதமர் அலுவல கமே ஐ.ஐ.டி.யிடம் விளக்கம் கேட்க, "எங்கள் நிறுவனம் தன்னாட்சி அமைப்பு. இடஒதுக்கீட்டையே நாங் கள் பின்பற்றுவதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தெல்லாம் பாடமாட்டோம்'’ என தெனாவட்டாகவே பதில் வந்ததாம். இன்னொருபுறம் "மோடி யின் ஐ.ஐ.டி. நிகழ்ச்சியை நேரலையில் காட்டவில்லை' எனச் சொல்லி பொதிகை தொலைக்காட்சியின் துணை இயக்குனர் வசுமதி மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறதாம்.

அவங்கவங்க வேலைய கரெக்டா தான்யா பண்றாய்ங்க!

சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையங் களை, கடந்த அக்டோபர் 01-ல் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச் சர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா வில், "நல்லநீர

mmசென்னை ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தமிழ் மொழியின் பெருமை குறித்து கொஞ் சம் தூக்கலாகவே பேசினார் பிரதமர் மோடி. ஆனால், அந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக, “"ஓம் சஹனா பவது; சகனவ் புனக்து'’ என் கிற சமஸ்கிருதப் பாடல்தான் பாடப் பட்டது. இதுபற்றி பிரதமர் அலுவல கமே ஐ.ஐ.டி.யிடம் விளக்கம் கேட்க, "எங்கள் நிறுவனம் தன்னாட்சி அமைப்பு. இடஒதுக்கீட்டையே நாங் கள் பின்பற்றுவதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்தெல்லாம் பாடமாட்டோம்'’ என தெனாவட்டாகவே பதில் வந்ததாம். இன்னொருபுறம் "மோடி யின் ஐ.ஐ.டி. நிகழ்ச்சியை நேரலையில் காட்டவில்லை' எனச் சொல்லி பொதிகை தொலைக்காட்சியின் துணை இயக்குனர் வசுமதி மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறதாம்.

அவங்கவங்க வேலைய கரெக்டா தான்யா பண்றாய்ங்க!

சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையங் களை, கடந்த அக்டோபர் 01-ல் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச் சர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா வில், "நல்லநீரை மக்களுக்கு அறிமுகப்படுத்திய எடப்பாடி, இந்தத் தண்ணியை குடிக்க பயன்படுத்தலாமா?' என உள் ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் சந்தேகத்துடன் கேட்க... சட்டென்று தண்ணீரை எடுத்து மடக் மடக்கென குடித்தார் வேலுமணி. இதைப் பார்த்து எடப் பாடி உள்ளிட்ட பலரும் அதிர்ந்து போனார்கள். சுத்திகரித்த தண்ணீர் குடிக்க உகந்ததுதான் என்பதைக் காட்டத்தான் வேலுமணி இப்படிச் செய்தாராம்.

இப்படி பொசுக்குனு செய்தா முதல்வரே மிரண்டுடுவாரே!

aa

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் தி.மு.க.வைச் சேர்ந்த காத்தவராயன். இவர்மீது தி.மு.க. வினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டு களை முன்வைக்கிறார்கள். குறிப்பாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், எம்.எல்.ஏ. காத்தவராய னுக்கு வேண்டப்பட்ட இளைஞர்கள் ஏழுபேரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாம். எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தி லும் அலுவலகத்திலேயே இருக்கும் அவர்கள், குடியும் கூத்துமாக அலப் பறை கொடுக்கிறார்களாம். இந்த கும்மாளத்தின் படங்களும் சோஷி யல் மீடியாக்களில் வைரலாகின. காத்தவராயனோ, "அ.தி.மு.க.வினர் தான் இப்படியெல்லாம் கொளுத்திப் போடுகிறார்கள்' என்கிறார். ஆனால், அவரை அழைத்து துரைமுருகனே டோஸ் விட்டதாக தகவல் வருகிறது.

கட்சி ஆபீஸ்னு நெனைச்சிட் டாங்க போல!

cc

பிறந்த தின விழா என்றாலே ஆடம்பரச் செலவுகளால் காசைக் கரியாக்கும் காலத்தில், சுற்றுச் சூழ லுக்கு உதவும் விதமாக தங் கள் மகன் ஆருத்ரனின் பிறந்ததினத்தைக் கொண்டாடி யிருக்கிறார்கள் வெங்கடேசன்-நர்மதா தம்பதி. உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள எறையூர் பளையகுஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், ஊர் முக்கியஸ்தர்களிடம் முறைப்படி அனுமதிபெற்று ரூ.40 ஆயிரம்வரை செலவுசெய்து விலையுயர்ந்த பலன்தரும் நல்ல மரக்கன்றுகளை வாங்கிவந்தனர். ஆருத்ரனின் பிறந்தநாளான 29-ந் தேதி ஊர்ப் பொதுமக்கள் சூழ, கன்றுகளை நட்டு அவற்றுக்கு மத்தியில் கேக் வெட்டி விழாவை சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

மனம் நிறைந்த வாழ்த்துகள்!

cc

கோவை மத்திய சிறை தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாக நம்மிடம் கதறினார் சிறைத்துறை காக்கி ஒருவர். “சிறைக்கைதிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். அதுவும் 10-ம் நம்பர் பிளாக்கில், எல்லாவிதமான எலக்ட்ரானிக் சாதனங்களும் புழக்கத்தில் உள்ளன. ஆனால், மருத்துவ வசதியோ ரொம்பவே மோசம். கடந்த ஒரே வருடத்தில் 30 கைதிகள் இதனால் செத்தார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் லட்சங் களில் கொழுக்கிறார் ஜெயில் எஸ்.பி. கிருஷ்ண ராஜ்’’ என்றார் அவர். இதுபற்றி கிருஷ்ண ராஜிடமே கேட்டால், ""அதெல்லாம் இல்லீங்க. சமீபத்தில் ஜெயில்ல ரெய்டு ஒண்ணு நடத்தினோம். அதனால் பாதிக்கப்பட்டவங்க இப்டி ஏதாச்சும் சொல்லியிருப் பாங்க''’என்கிறார் அசால்ட்டாக.

ரெய்டில் சிக்கிய லேப்டாப், செல்போனெல்லாம் யாரோடது சார்?

சட்டமன்ற இடைத்தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றவர் அ.தி.மு.க.வின் தேன்மொழி. தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் தலைகாட்டும் இவர், 261 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதில் சில அறிவுரை களைக் கூறிய தேன்மொழி, “"குழந்தை பிறந்த ஒரு மாசத்திலேயே புட்டிப்பால் கொடுத்து விடாதீங்க. ccஅதனால குழந்தைக்கு பாதிப்பு மட்டுமில்லாம, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கு. உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், தாய்ப்பால் மட்டுமே கொடுங்க'’என உருக்கமாகப் பேசியதைக் கண்டு கர்ப்பிணிப் பெண்களே பூரிப் படைந்தனர்.

தாய்மார்கள் ஓட்டு கன்ஃபார்ம்!

கொள்ளிடம் ஆற்றில் கதவணை மற் றும் தடுப்பணைகள் கட்ட உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பாராட்டு விழா நடத்த முடிவு செய்தது கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கம். இதற்காக பல லட்சங்களை வசூல்செய்த அதன் தலைவர் வினாயகமூர்த்தி, விழா நடத் தாமல் அந்தப் பணத்தை ஸ்வாஹா செய்து விட்டார் என்று குற்றம்சாட்டுகிறார்கள் விவசாய சங்கத் தலைவர்கள். வினாயகமூர்த்தி யோ ""ஆளுங்கட்சியின் உட்கட்சி பூசலால் விழாவை நடத்தாமல் விட்டோமே தவிர, கணக்குவழக்கில் குறையில்லை. சிலரிடம் விளம்பரங்கள் வாங்கி, அதன்மூலம் நன்றி மலர் வெளியிட்டிருக்கிறோமே'' என்கிறார்.

அப்போ விழா நடத்த மாட்டீங்கதானே?

-இளையர், பிரகாஷ், எஸ்.பி.சேகர், து.ராஜா, சக்தி, அருள்குமார்

nkn111019
இதையும் படியுங்கள்
Subscribe