நாகை மாவட்டத்தின் புதிய எ ஸ்.பி.யாக ராஜ சேகரன் வந்ததிலிருந்தே காக்கிகளின் மத்தியில் முணு முணுப்பு பலமாகத் தெரிகிறது. அவரின் வாஸ்து சாஸ்திர நம்பிக்கைதான் அதற்குக் காரணமாம். தனது அறை உட்பட எஸ்.பி. அலுவலகத்தின் அனைத்து அறைகளிலும் தெற்கு பார்த்து போடப்பட்ட நாற்காலி களை, ஈசான்ய மூலையைப் பார்ப் பதற்கு வசதியாக கிழக்கு நோக்கி போட வைத்துவிட்டார். வெளியில் தெற்கு நோக்கி இருந்த கார்டன், பொதுமக்களுக்கான இருக்கைகளை இடித்தே தள்ளிவிட்டார். இதே வாஸ்து காரணத்தால் கேம்ப் ஆபீஸ் வீட்டில் தங்காமல், தனியார் லாட்ஜில் ரூமெடுத்து, அதையும் ஒரு கை பார்த் திருக்கிறார். பத்திரிகையாளர்களே வாய்ஸ் மெசேஜில்தான் பேச வேண்டுமென்று ஆர்டரும் போடுகிறாராம்.
ஸ்காட்லாந்து யார்டுக்கு வந்த சோதனை!
வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிப்பதாக அறிவித்தது தமிழக அரசு. இதைக்கேட்டு திருப்பத்தூர் மக்கள் குதூகலிக்க, ராணிப்பேட்டை மக்களோ அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இதனிடையே, ஆற்காடு என்பது ஆயிரமாண்டு காலத்து வரலாற்றுப்பெயர். நவாப்கள் காலம் வரை தலைநகராக இருந்தது. அதனால், ராணிப்பேட்டைக்கு பதிலாக, ஆற்காடு என்று பெயரிடக்கோரி ஆற்காடு பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர். அதேநேரம், அரக்கோணத்தில் இருந்து ராணிப்பேட்டை வெகுதொலைவில் இருப்பதால், அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கக்கோரி கோரிக்கை வலுக்கிறது.
எடப்பாடி மைண்ட்வாய்ஸ் : பிரிச்சிட்டா போச்சு!
திருச்சியில் உள்ள கண் டொன்மெண்ட் ஏ.சி.மணிகண்டன், கோட்டை ஏ.சி.சுர்ஜித், ஸ்ரீரங்கம் ஏ.சி.ராமச்சந்திரன் ஆகிய மூவருமே கடமையில் கெடுபிடியானவர் கள். இவர்களை பணத்தைக் காட்டி வளைக்க முடியாமல் ரொம் பவே நொந்து போயிருக்கிறார் கள் மணல் கொள்ளையர் களும், பார் ஓனர்களும். ஏரியாக்காரரான அமைச்சர் தங்க மணியிடம் இது பற்றி முறை யிட்டதும், சந் தர்ப்பம் வரட்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். குளத்திற்குள் இருந்து அத்திவரதர் வந்ததுமே அதிகாரிகளிடம் பேசி, இம்மூவரை யும் காஞ்சிபுரத்திற்கு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பிவிட்டார் அமைச் சர். இதனால் மணல் பார்ட்டிகளுக்கு ஒரே கொண்டாட்டமாம்.
அத்திவரதர் கிளம்பியதால் மறுபடியும் திண்டாட்டமாம்!
திருப்பூர் மாவட்ட அ.தி. மு.க.வின் மா.செ.வாக இருக் கிறார் ஆனந்தன். முன்னாள் அமைச்சரான இவரை கட்சியில் வளர்த்துவிட்ட சிவசாமி, கட்சி யில் இருந்து விலகியிருந்தார். தற்போது மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாக இருக்கும் சிவசாமி, ""அம்மாவால் கட்சியில் வளர்க் கப்பட்டவன் நான். என்னையே ஏமாற்றி கட்சியில் வளர்ந்த இந்த ஆனந்தனை மா.செ. பதவியி லிருந்து தூக்கி வீசணும். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு அந்தப் பதவியைக் கொடுக்கணும்'' என எடப்பாடியிடம் பேசியிருக்கிறார். எடப்பாடியும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். ஆனந்தனின் இரு கைகளாக இருந்த அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி குணசேகரனின் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டார்களாம்.
தி.மு.க.வுக்கு தாவும் யோசனையில் இருக்கிறா ராம் ஆனந்தன்!
குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தலின்போது அ.தி.மு.க. வேட்பாளர் கஸ்பா.மூர்த்தி ஒரு ரவுடி என பிரச்சாரம் செய்தது தி.மு.க. தரப்பு. தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் வெற்றியும் பெற்றார். இந்நிலை யில், கடந்த 10 நாட்களாக தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயனின் அராஜகலீலைகள் என்ற பதிவை வாட்ஸ்அப்பில் பரப்பினார் கஸ்பா.மூர்த்தி. இதில் கடுப்பான காத்தவராயன் கஸ்பா.மூர்த்தி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத் திருக்கிறார். பதிலுக்கு கஸ்பா.மூர்த்தி, சதீஸ்குமார் என்பவரை வைத்து காத்தவராயன் கமிஷன் கேட்பதாக புகார்தர வைத்துள்ளார். செய்வதறியாமல் குழம்பியிருக்கும் போலீஸ், முதல்வர் அலுவலகத்தில் முறையிட்டிருக்கிறது.
இதுக்கே குழம்பிட்டா எப்படி போலீஸ்கார்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இலுப்பூர் மற்றும் கந்தர்வக்கோட்டையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் திறப்புவிழா நடந்தது. இதில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.இளங்கோவன் மற்றும் சில மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். தான் வரும் வழிகளிலெல்லாம் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் வைத்திருந்த பதாகைகளைக் கண்டு அதிர்ச்சியுற்ற நீதிபதி இளங்கோவன், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். முதலில் நீதிபதியின் பெயரை மட்டுமே மறைத்தனர். ஆனால், நீதிபதி இளங்கோவனின் கெடுபிடியால் உடனடியாக ப்ளக்ஸ் பதாகைகள் அகற்றப்பட்டன.
தமிழ்நாடு முழுக்க நடந்தா நல்லதுதான்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான களப்பணியாளர் பணியிடங்கள் காலியாகி உள்ளது. இந்தப் பணிகளை தற்காலிகமாக செய்துவந்த ஒப்பந்தத் தொழி லாளர்களை பணியிடங்களில் நியமிக்காமல், வடமாநிலத் தவர்களை பணியமர்த்துகிறது தமிழக அரசு. ஏற்கனவே பணி அனுபவம் உள்ள ஒப்பந்தப் பணியாளர்களைத் தவிர்த்துவிட்டு, வடமாநிலத்தவர்களை அழைத்துவந்து இரண்டு ஆண்டுகள் பயிற்சியும் கொடுக்கிறார்கள். இதைக் கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தின்முன் தொடர்உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். பேரிடர் காலங்களில் கடுமையாக வேலை வாங்கிய மின்துறை அமைச்சர் என குற்றம்சாட்டுகின்றனர்
மின் தொழிலாளர்களுக்கே ஷாக்கா!
-ஜெ.டி.ஆர்., து.ராஜா, இரா.பகத்சிங், க.செல்வகுமார், அருள்குமார், அ.அருண்பாண்டியன்