அதிருப்தியில் இருக்கும் அ.ம.மு.க.வினரை தலைமைக் கழ கத்தில் உடனடியாக இணைக்க உத்தரவிட்டிருக்கிறது அ.தி.மு.க. தலைமை. அப்படி இணைபவர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுக் கிறார்கள் அ.தி. மு.க. நிர்வாகிகள். சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் அ.ம.மு.க.வினரைத் தேடிப்பிடித்த தொகுதி எம்.எல்.ஏ. வும், அமைச்சருமான கடம்பூர் ராஜு பெருமிதமாக பேட்டி கொடுத்து, போட்டோவுக்கு போஸும் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அ.ம.மு.க. தென் மண்டல பொறுப்பாளர் கயத்தாறு மாணிக்கராசா, ‘"ரெண்டுபேரை இணைச்சிட்டு, நூறுபேரை இணைச்ச மாதிரி போஸு கொடுக் கிறீங்களா? உம்ம திருவிளை யாடலை என்கிட்ட வைச்சுக்கா தீங்க' என்று கடம்பூர் ராஜுவிடம் கொதித்திருக்கிறார். அதிலிருந்து கட்சியில் இணையவரும் அ.ம. மு.க.வினருடன் போஸ் கொடுப் பதையே நிறுத்திவிட்டாராம் அமைச்சர்.
ஒரு போட்டோ எடுத்தது குத்தமா?
தமிழக பா.ஜ.க. தலை வருக்கான ரேஸில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் என பலரும் காய்நகர்த்துகின்றனர். அவர்களில், ‘திராவிடக்கட்சியில் வளர்ந்த தேசியப் பார்வை’ கொண்டவரான நயினார் நாகேந்திரன்தான் தலைவர் பதவிக்குத் தகுதியானவர். அவர்மூலமே கட்சி வேரூன்றும் என்று அமித்ஷாவிற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது ‘திரிவேணி குரூப்ஸ்’ எனும் நிறுவனம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவின் ஆதரவும் நயினாருக்கே என்பதோடு, அடுத்த தலைவர் நயினார் நாகேந்திரன்தான் என அடித்துச் சொல்கிறது ஆர்.எஸ்.எஸ். தரப்பு.
நாக்குக்கு விலைபேசுன நயினார்தானே?
வேலூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். பெருமுகை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, அங்கிருந்த மாணவனை அழைத்துப்பேசிய செங்கோட்டையன், "பாடப்புத்தகமெல்லாம் எப்படி இருக்கு தம்பி?' என்று கேட்டிருக்கிறார். அமைச்சரை அடையாளம் கண்டுகொள்ளாத அந்த மாணவனோ, “"பாடம் ஒண்ணுமே சரியில்ல. கஷ்டமா இருக்கு' என்றிருக்கிறான். "லேப்டாப் கொடுத்துட்டாங்களா?' என்று கேட்டதற்கு, "போனவருஷம் படிச்ச அண்ணனுங்களுக்கே தரலையாம். அதுக்குள்ள எங்களுக்கு தருவாங்களா?'’ என நக்கலாக பதிலளித்துள்ளான். அமைச்சருக்கு இந்த அவமானம் தேவையா? என்று கிசுகிசுத்திருக்கின்றனர் உடனிருந்தவர்கள்.
பந்தாவுக்கு பண்ணதே பங்கமாகும்னு கனவா கண்டிருப்பார்?
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் - அங்கன்வாடி சமையல் உதவியாளர் தெய்வானையின் மகள் தீபா. செங்கம் வட்டம் நந்திமங்களத்தைச் சேர்ந்த ஊர் ஊராக துணிவியாபாரம் செய்யும் ராஜி - மலர்கொடி தம்பதியின் மகள் ப்ரியா. இருவருமே, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று, முறையே கீழ்ப்பாக்கம் மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரிகளில் சீட் பெற்றிருக்கிறார்கள். இருந்தும், தங்கிப் பயில்வதற்கான வசதி இல்லாமல் தவிப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தன்னார்வலர்களின் உதவியோடு தலா 50ஆயிரத்தை தந்து உதவியிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பல மாணவர்களின் தேவையுணர்ந்து உதவும் ஆட்சியருக்கு, பாராட்டுகள் குவிகின்றன.
நல்ல மனம் வாழ்க!