nelபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பயிரிட்டு, நெல் திருவிழாவின் மூலம் அவற்றை ஊரெங்கும் பரப்பியவர் ‘"நெல்' ஜெயராமன். இவர் சென்றாண்டு டிசம்பர்.06-ல் புற்றுநோயால் உயிரிழந்தார். இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் விதைகள்மீது அவர்காட்டிய அக்கறைக்காக, அவரது அரும்பணியை பாடமாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். அதன் படியே, 12-ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நாமன் போலக், எம்.எஸ்.சுவாமிநாதன் உடன் "நெல்' ஜெயராமனின் வாழ்க்கைக் குறிப்பும் இடம் பெற்றிருக்கிறது.

பள்ளியில் பாடமானவர், சசிகுமார் நடிப்பில் படமாகவும் வர்றாராமே!

தென்சென்னை தொகுதியில் வெற்றிபெற்ற தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் உள்ள தனது தந்தை தங்கபாண்டியனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்திருந்தார். முன்னாள் அமைச்சரான தங்கபாண்டியன் 1997-ல் திடீரென மறைந்தபோது, தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "கையறு நிலை'’என்ற தன் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார் தமிழச்சி. தந்தைமீது இத்தனை பாசம் வைத்திருக் கும் அவர், எம்.பி. ஆகியிருப்பதைப் பார்க்க அப்பா உடனில் லையே என்கிற ஏக்கத்தில் தன்னை அறியாமல் கண்ணீர் உகுத்த சம்பவம், கூடியிருந்தவர்களைக் கரையச் செய்தது.

தந்தை பெயரைக் காப்பாற்றணும்!

Advertisment

முன்னாள் மத்திய இணையமைச்சரான பொன்.ராதாகிருஷ் ணன், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே 40 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொண்டிருப்பதாக ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவர் கொண்டுவந்த இரண்டு பாலங்களால் தொகுதி மக்களுக்கு பயனில்லாமல் போனதோடு, உள்ளூர் வியாபாரிகள் கணிசமாக பாதிக்கப்பட்டனர். போதாக்குறைக்கு மேலும் இரண்டு பாலங்களைக் கட்டுவதாக அவர் கூறிவிட, வாழ்வாதாரங்களை இழந்து நிற்பவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துவிட்டார். அவர்களில் 90% பேர் இந்துக்கள் வேறு. தான் கொண்டுவந்த திட்டங்களைத் திரும்பத் திரும்பப் பேசினார் பொன்னார். ஆனால், வாக்காளர்கள் காது கொடுக்கவில்லை என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிட்டது.

சாதனைகளே சோதனைகளாகும்னு கனவா கண்டிருப்பார்!

Advertisment

rri

திருச்சி எம்.பி. தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டவர் புதுக்கோட்டை மன்னர் வாரிசு சாருபாலா தொண்டைமான். தனது மகள் ராதா நிரஞ்சனியுடன் சாருபாலா கிராமம் கிராமமாக பிரச்சாரத்திற்குச் சென்றபோது, தண்ணீர் பஞ்சம்தான் பிரதான பிரச்சினையாக இருந்திருக்கிறது. தேர்தலில் சாருபாலா தோற்றிருந்தாலும், அவரது மகள் ராதா, புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி களிலுள்ள கிராமங் களுக்கு புதுக்கோட்டை மன்னர் அறக்கட்ட ளையின் சார்பில் நாளொன்றுக்கு வாடகை லாரி மூலம் 10 ஆயிரம் லிட்டர் குடிதண்ணீர் வழங்கி வருகிறார்.

அரண்மனை வாரிசு தண்ணீர் தருகிறது. அரசாங்கம் என்ன செய்யுது?

தூத்துக்குடி வேட்பாளராக தமிழிசை களமிறங்கியபோது, அவருக்காக தேர்தல் தொழில்நுட்ப வேலைகளைக் கவனித்தவர் பா.ஜ.க. இளைஞரணியைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா. இவர் களநிலவரத்தை மாற்றிக் கொடுத்ததுதான் தமிழிசையின் தோல்விக்கான காரணமென்று காவிகள் கிசுகிசுத்தனர். தமிழக பா.ஜ.க. தலைவர் மாறப்போவதாக தகவல் பரவியபோது, அந்த ரேஸில் இருந்த ஹெச்.ராஜா மீது பணமோசடி புகார்களும், கோவையில் தோற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் மீது அவதூறுகளும் கிளப்பிவிட்டதில் சூர்யாவின் பங்கு அமோகமாம். மாநிலத்தலைவர் பதவியைக் குறிவைத்திருக்கும் வானதிக்கு சாதகமாக சூர்யா காய் நகர்த்துவதாக சொல்கிறது பா.ஜ.க. வட்டாரம்.

வலுவான கூட்டணியா இருக்கும்போல!

"தர்மபுரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் யாராக இருந்தாலும், தொடர்ச்சியாக இரண்டாவது முறை அதே தொகுதியில் ஜெயித்ததில்லை' என்பது வரலாறு. 1999-ல் பா.ம.க. வேட்பாளர் பு.தா.இளங்கோவன் எம்.பி. ஆனார். 2004-ல் அவரே பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோற்றுப்போனார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற மருத்துவர் செந்தில், 2009 தேர்தலில் ஜெயிக்கவில்லை. அப்போது வெற்றிகண்ட தி.மு.க. தாமரைச்செல்வன், 2014-ல் பா.ம.க. அன்புமணி ராமதாஸிடம் தொகுதியைப் பறிகொடுத்தார். அதே அன்புமணி தற்போது தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோற்று வரலாறை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

வரலாற்றை மாற்றுவாரா தற்போதைய தி.மு.க. எம்.பி?

nnn

ரசு ஊழியர்களின் உரிமை, பாதுகாப்பு, ஊதிய உயர்வு என பல்வேறு போராட்டங்களில் தோள் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள். அவர்களுக்கு அரசு ஊழியர்கள் கொடுத்திருப்பது என்னவோ பெரும்பாலும் செல்லாத வாக்குகள்தான். நடந்துமுடிந்த தேர்தலில் நாகை, திருப்பூரில் சி.பி.ஐ., மதுரை, கோவையில் சி.பி.எம். வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர் களுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் தபால் வாக்குகள் மூலமாக அரசு ஊழியர்கள் கொடுத்தது சராசரியாக ஐந்நூறு செல்லாத ஓட்டுகள். அதைவிட கொடுமையாக 70 முதல் 100 வாக்குகள் வரை நோட்டாவுக்கு கொடுத்து கடமையை செவ்வனே நிறைவேற்றி இருக்கின்றனர்.

உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே!

னி ஆந்திராவில் ஒவ்வொரு வழக்கின் விசா ரணைக்கு முன்பும் சி.பி.ஐ. மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. மோடி அரசிடமிருந்து மாநில உரிமையைக் காப்பதற்காகவே இந்த முடிவென்று அவர் கூறினார். மேற்குவங்கத்தின் மம்தாவும் இதேபோல் அறிவித்து அதிரடி கிளப்பினார். தற்போது ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்திருக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபுவின் முடிவைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.

மாநில உரிமையா சொந்தப் பகையா? முட்டி மோதுறாங்க!

-ஜீவாதங்கவேல், ராம்கி, இரா.பகத்சிங், செல்வகுமார், மணிகண்டன், அரவிந்த், மதிவாணன், இளையராஜா