th

vவிருதுநகர் எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திருமங்கலம் தேவர் திடலில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ. ரஃபேல் ஊழல், ஸ்டெர்லைட் விவகாரம், குஜராத் கலவரம் என மோடி அரசை ஒரு பிடிபிடித்த அவர், எடப்பாடி அரசையும் விட்டு வைக்கவில்லை. உணர்ச்சி கொப்பளிக்கும் வைகோவின் பேச்சைக் கேட்டபடி அருகில் நின்றிருந்த மாணிக்கம் தாகூர், "2009-ல் இந்த வைகோவையா என்னால் வெல்ல முடிந்தது' என்பதுபோல முகபாவத்தை வைத்திருந்தார்.

காலச்சக்கரம் விருதுநகரையும் விட்டுவைக்கவில்லை!

sr

அ.தி.மு.க.வின் பாரம்பரிய தொகுதியான திண்டுக்கல்லை உட்கட்சிப் பிரச்சனையால் பா.ம.க.விற்கு ஒதுக்கிவிட்டார்கள். பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். கட்சித் தலைமையிடம் இருந்து பணம் வராததால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே செலவுகளைக் கவனித்துக் கொண்டு, பிரச்சாரத்திற்கும் செல்கிறார். பிரச்சாரம் தொடங்கிய நாளில் எப்போதும் அரைக்கை சட்டை அணிபவரான ஜோதி

vவிருதுநகர் எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திருமங்கலம் தேவர் திடலில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ. ரஃபேல் ஊழல், ஸ்டெர்லைட் விவகாரம், குஜராத் கலவரம் என மோடி அரசை ஒரு பிடிபிடித்த அவர், எடப்பாடி அரசையும் விட்டு வைக்கவில்லை. உணர்ச்சி கொப்பளிக்கும் வைகோவின் பேச்சைக் கேட்டபடி அருகில் நின்றிருந்த மாணிக்கம் தாகூர், "2009-ல் இந்த வைகோவையா என்னால் வெல்ல முடிந்தது' என்பதுபோல முகபாவத்தை வைத்திருந்தார்.

காலச்சக்கரம் விருதுநகரையும் விட்டுவைக்கவில்லை!

sr

அ.தி.மு.க.வின் பாரம்பரிய தொகுதியான திண்டுக்கல்லை உட்கட்சிப் பிரச்சனையால் பா.ம.க.விற்கு ஒதுக்கிவிட்டார்கள். பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். கட்சித் தலைமையிடம் இருந்து பணம் வராததால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே செலவுகளைக் கவனித்துக் கொண்டு, பிரச்சாரத்திற்கும் செல்கிறார். பிரச்சாரம் தொடங்கிய நாளில் எப்போதும் அரைக்கை சட்டை அணிபவரான ஜோதிமுத்துவை அழைத்து, “"வாக்காளர்களைக் கவர் செய்யணுமுன்னா நீட்டா ஃபுல்ஹேண்ட் சர்ட்ல வரணும்'’எனக் கூறியதோடு, 20 முழுக்கை சட்டைகளையும் வாங்கித் தந்திருக்கிறார். இப்போதெல்லாம் ஜோதிமுத்துவை முழுக்கை சட்டையுடன்தான் பார்க்க முடிகிறது.

திண்டுக்கல்லிலும் ஒரு விஞ்ஞானி அமைச்சர்!

tg

திருப்பூர் எம்.பி. தொகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலையில் பிஸியாக இருக்க, தன் வாக்குறுதிகளால் ஊரையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சுயேட்சை வேட்பாளர் ஷேக்தாவூத். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த இவர், “திருப்பூருக்கு மேட்டூரிலிருந்து காவிரிநீரைக் கொண்டுவர வாய்க்கால், வாடகை வீடுகளை சொந்த வீடுகளாக்குவது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து லிட்டர் ஒரிஜினல் பாண்டிச்சேரி சரக்கு, திருமணத்துக்கு 10 பவுன் தங்கம் - பத்து லட்சம் ரொக்கம், தடை செய்யப்பட்ட லாட்டரியை மீண்டும் விற்க அனுமதி’’ என வாக்குறுதிகளை மூச்சுவிடாமல் அடுக்கிவிட்டு, "இதையெல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்' என்று பத்திரம் எழுதித் தருவதாக தலைசுற்ற வைக்கிறார்.

திருப்பூரை சிங்கப்பூரா மாத்துவாரோ?

tg

ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனிக்காக அறந்தாங்கியில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள லிமிட்டான ரூ.200-ஐக் கொடுத்து கடையில் சாப்பிடச் சொல்லி அனுப்பிவிட்டு, தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் தன் வீட்டில் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் தலைவாழை இலையில் கறிவிருந்து வைத்திருக்கிறார். இதைப் பார்த்த தொண்டர்கள் பலரும் கடுப்பாகி விட்டார்களாம். சிவகங்கையில் பா.ஜ.க. வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்காக அ.தி.மு.க. நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்திலும் இதே நிலைமைதானாம். "களப்பணி செய்யுறது நாங்க, கறிச்சோறு மட்டும் நிர்வாகிகளுக்கா?'’என்று கொதிக்கிறார்கள் ர.ர.க்கள்.

ராமநாதபுரத்துக்கும், சிவகங்கைக்கும் இது பத்திய மாதம்!

t

யிலாடுதுறை அ.தி.மு.க. எம்.பி. வேட்பாளர் ஆசைமணியை வெற்றிபெறச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டும் என தொண்டர்களுக்கு தொண்டைகிழிய பாடமெடுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். "தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளது. அதனால், புயல்வேக பிரச்சாரத்தில் இருக்கும் வேட்பாளரை மறித்து சால்வை அணியக்கூடாது'’என்று கண்டிஷனாகவே சொன்னார். அப்போது, ஜிகுஜிகு சால்வையை தொண்டர் ஒருவர் கொண்டுவந்து அமைச்சருக்கு போர்த்திவிட, அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார் அவர். “"கைத்தறி அமைச்சரான எனக்கே ஜிகுஜிகு சால்வையா? "இனிமே சால்வை கொண்டு வர்றவங்களுக்கு நூறு ரூபாய் அபராதம்'’’ என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்.

மயிலாடுதுறையே மிரண்டு போயிருக்குதாம்!

s

பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமானநிலையத்தில் வைத்து அவரை நோக்கி "பாசிச ‘பா.ஜ.க. ஆட்சி ஒழிக!'’ என முழங்கினார் தூத்துக்குடியைச் சேர்ந்த கனடா ஆராய்ச்சி மாணவி சோஃபியா. இதனால் காவல்துறையின் மூலம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்தது தமிழிசை தரப்பு. சோஃபியா தற்போது கனடாவில் இருக்கிறார். இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள், "தேர்தலில் போட்டியிடலாமே?' என்று மின்னஞ்சல் மூலமாக சோஃபியாவை அழைத்தனர். அதற்கு “"தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. ஆனால், கண்டிப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக உள்ளேன்'’என பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் மறுபடியும் பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக?

டலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “""கடலூரின் அவலநிலை தெரியுமா? நகராட்சியில ஒரு வேலையும் நடக்காம மோசமா கெடக்குது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?''’என ஒரு பெண் சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். இதை எதிர்பார்க்காத எம்.சி.சம்பத்தும், கோவிந்தசாமியும் பதில் சொல்ல முடியாமல் அடுத்த வீட்டிற்கு நகர்ந்தனர். பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், ""முதல்முதலா உன் வீட்டுக்கு ஓட்டுக் கேட்டுவந்தா திட்டுற. நீ என்ன லண்டன்ல இருந்து வர்றியா?'' என கடிந்துகொண்டார்.

லண்டனே கடலூர்லதான் இருக்குபோல!

-சி.என்.ஆர்., சக்தி, ஜீவாதங்கவேல், செம்பருத்தி,

க.செல்வகுமார், நாகேந்திரன், அ.காளிதாஸ்

nkn020419
இதையும் படியுங்கள்
Subscribe