Advertisment
theri

theriதி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி, புயல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். கரூரில் எம்.பி. வேட்பாளராக யாரை நியமித்தாலும் வெற்றிபெற வைப்பேன் என்றும் கூறியிருந்தார். தற்போது கரூர் சின்னசாமி, கே.சி.பி. மகன் சிவராமன், நன்னியூர் ராஜேந்திரன், பரணிமணி போன்ற முக்கியப் புள்ளிகள், து.பொ.செ. சுப்புலெட்சுமி ஜெகதீசனை எம்.பி. சீட்டுக்காக சுற்றி வருகின்றனர். அதேசமயம், அரவக்குறிச்சி இடைத்தேர்தலைக் குறிவைத்தே காய்நகர்த்தி வருகிறார் என்று பேசப்பட்ட செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல்செய்து பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.

Advertisment

ஸ்கெட்ச் எம்.பி. தேர்தலுக்கா!

theri

சென்னை மதுரவாயலில் அ.ம.மு.க. வர்த்தக அணிச் செயலாளர் சுடலை என்பவருக்குச் சொந்தமான டாஸ்மாக் பாரை, அ.ம.மு.க. மா.செ. லக்கிமுருகன் மற்றும் அ.தி.மு.க. வ.செ. தென்றல்குமார் ஆகியோர் அமைச்சர் பெஞ்சமின் ஆலோசனைப்படி நடத்த முடிவு செய்துள்ளனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள

theriதி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி, புயல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். கரூரில் எம்.பி. வேட்பாளராக யாரை நியமித்தாலும் வெற்றிபெற வைப்பேன் என்றும் கூறியிருந்தார். தற்போது கரூர் சின்னசாமி, கே.சி.பி. மகன் சிவராமன், நன்னியூர் ராஜேந்திரன், பரணிமணி போன்ற முக்கியப் புள்ளிகள், து.பொ.செ. சுப்புலெட்சுமி ஜெகதீசனை எம்.பி. சீட்டுக்காக சுற்றி வருகின்றனர். அதேசமயம், அரவக்குறிச்சி இடைத்தேர்தலைக் குறிவைத்தே காய்நகர்த்தி வருகிறார் என்று பேசப்பட்ட செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல்செய்து பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.

Advertisment

ஸ்கெட்ச் எம்.பி. தேர்தலுக்கா!

theri

சென்னை மதுரவாயலில் அ.ம.மு.க. வர்த்தக அணிச் செயலாளர் சுடலை என்பவருக்குச் சொந்தமான டாஸ்மாக் பாரை, அ.ம.மு.க. மா.செ. லக்கிமுருகன் மற்றும் அ.தி.மு.க. வ.செ. தென்றல்குமார் ஆகியோர் அமைச்சர் பெஞ்சமின் ஆலோசனைப்படி நடத்த முடிவு செய்துள்ளனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் சந்திரன், சரவணன் ஆகியோருக்கு மாதாமாதம் பங்கு தரவேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம். மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் இந்த அ.தி.மு.க. + அ.ம.மு.க. கூட்டணி "பாரு'க்கு எதிராக பெண்கள் வீதியில் இறங்கி முற்றுகைப் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க.வினரின் செயல்பாடு குறித்து டி.டி.வி. வரை புகார் போயுள்ளது.

கட்சிகள் பிரித்தாலும் சரக்கு இணைக்கிறது!

theri

வேலூர் எம்.பி. தொகுதியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் களமிறங்க காய் நகர்த்துகிறார். தோழமைக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் துரைமுருகன். ஆனால், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலர், காட்பாடி தாண்டி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாத கதிர்ஆனந்துக்கு தலைமை எப்படி சீட் தரலாம் என கொடி பிடித்திருப்பது, துரைமுருகன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

கலக்கமாத்தான் இருக்கு!

திருவண்ணாமலை அ.தி.மு.க. எம்.பி. வனரோஜா தனது தொகுதிக்குட்பட்ட செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு, பரமனந்தல் கிராமங்களில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவர்கள் இருவர் மட்டுமே வந்திருந்த இந்த முகாமில், நூறுக்கும் குறைவானவர்களே கலந்துகொண்டனர். பொதுமக்கள் வராமல் முகாம் காற்று வாங்கியதால், அ.தி.மு.க.வினரே அதிருப்தியாகிவிட்டனர். தொகுதி நிதியில் செலவுசெய்து கமிஷன் பார்க்க ஆசைப்பட்டு முகாம் ஏற்பாடு செய்தாங்க. ஆனால், மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் விட்டதால் காற்று வாங்குகிறது என்று புலம்பினார்கள் அ.தி.மு.க.வினர்.

Advertisment

காற்று வாங்கக்கூட யாரும் வரலையா?

இந்தியாவுக்கு வழங்கிவந்த வர்த்தக முன்னுரிமை சலுகையைத் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தாததுதான் இதற்கான காரணமாம். இதன்மூலம், மொத்த ஏற்றுமதிக்கான சலுகையான 11 சதவீதம் -அதாவது 19 கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்று இந்திய தரப்பு சொல்கிறது. இதன்மூலம், ஏற்படப் போகும் மிகப்பெரிய இழப்பினை ஈடுசெய்ய இந்திய வர்த்தகர்கள் மத்திய அரசிடம் முறையிடப் போகிறார்களாம்.

சங்கமே நட்டத்துலதான் ஓடுதாம்!

theri

பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதற்கு, அந்தப் பகுதியில் இயங்கிவரும் "சன்ஃபார்மா மருந்து ஆலைதான் காரணம்' என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நீர்நிலைகளில் இந்த ஆலைக் கழிவுகளைக் கலப்பதால், நீர்வளமும் அந்தப் பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறதாம். இதனால், வேடந்தாங்கலுக்கு வரவேண்டிய பறவைகள் மருவத்தூர், ஈ.சி.ஆர். பகுதிகளிலேயே நின்றுவிடுவதால், வேடந்தாங்கல் அதன் எழிலை இழந்துவருகிறதாம். இந்தப் பகுதிக்குப் பேர்போன வெற்றிலை சாகுபடியும் முற்றிலுமாக அழிந்துவிட்டதாம்.

எல்லாம் அழிஞ்ச அப்புறம் யாருக்கு மருந்து?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் படேல் சமுதாயத் தலைவர் ஹர்திக் படேல். 2017-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தீவிர பா.ஜ.க. எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்ட இவர், காங்கிரஸுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். தற்போது, மார்ச் 12-ஆம் தேதி ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைய இருக்கிறார். அவரை வரவேற்றுள்ள காங்கிரஸ் தலைமை, வரவிருக்கும் எம்.பி. தேர்தலில் ஒரு தொகுதியையும் ஒதுக்கீடு செய்கிறது. ஹர்திக் படேலுக்கு முதல் தேர்தல் என்பதால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ள ஜாம்நகர் தொகுதியைக் கேட்கிறாராம்.

தெளிவா காய் நகர்த்துறாரு!

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் தொகுதி சி.பி.எம். முன்னாள் எம்.எல்.ஏ. நர்சய்யா ஆடம். சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்ட விழாவில் நர்சய்யாவும் கலந்துகொண்டார். அப்போது பேசுகையில், சோலாப்பூரில் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட வீட்டுவசதித் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி அளித்ததாக பிரதமரைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். இந்தத் தகவல் கட்சி மேலிடத்துக்குப் போனதும், மூன்று மாதங்களுக்கு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நர்சய்யாவை இடைநீக்கம் செய்வதாக அறிவித்துவிட்டனர்.

அது வெறும் அடிக்கல்நாட்டு விழாதான்!

-ஜெ.டி.ஆர்., து.ராஜா, மதி, கீரன்

nkn150319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe