Skip to main content

அங்கே வேகம்! இங்கே மெத்தனம்! -காவலர் இடஒதுக்கீடு ரத்து!

Published on 26/05/2018 | Edited on 26/05/2018
கடந்த டிசம்பரில், தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 6140 பேரை தேர்வு செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம். இணையதளம் வாயிலாக மொத்தம் 3.27 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், மார்ச் 11-ஆம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 2.88 லட்சம் பேர் மட்டும... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

50 லட்சம் பேர் எழுதிய காவலர் தேர்வு ரத்து; உ.பி. அரசு அதிரடி அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
UP Govt Action Announcement for Constable exam written by 50 lakhs cancelled

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 60,000 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். 

இந்த நிலையில், காவல்துறை பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு முன்னரே, வினாத்தாள் கசிந்து பரவியதாக வெளியான புகாரின் அடிப்படையில் இந்த தேர்வு ரத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘ரிசர்வ் சிவில் காவலர் பணியிடங்களுக்கான தேர்விற்காக நடத்தப்பட்ட தேர்வு 2023-ஐ ரத்து செய்து, அடுத்த 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின் புனிதத் தன்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. இளைஞர்களின் கடின உழைப்பில் விளையாடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் தப்ப முடியாது. இதுபோன்ற கட்டுக்கடங்காத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காவலர் உடற்தகுதி தேர்வு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

tamilnadu police physical exam conducted in trichy

 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத் துறை மற்றும் சிறைக் காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

 

இதில் 1052 தேர்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதில் முதல் கட்டமாக இன்று 400 பேர் மட்டும் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படக் கூடியவர்கள் உடல் தகுதி திறன் போட்டியில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த பிறகு அடுத்த 2 நாட்கள் உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மேற்பார்வையில் திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்  தலைமையில் இன்று காலை தொடங்கிய இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.