Advertisment

அ.தி.மு.க.வுக்குள் புகையும் நெருப்பு! -பகீர் தகவல்

ss

அ.தி.மு.க.வின் அதிகாரம் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தான் இருக்கவேண்டும் என்று சில சமூகத்தினர் காய் நகர்த்தி வருவதால் சாதிய உரசல்கள் ஏற்படலாம் என்கிற பகீர் செய்திகள் சிறகடிக்கின்றன. குறிப்பாக கொங்கு கவுண்டர் சமுதாயத் தலைவர்களும், தென்தமிழகத்தின் முக்குலத்தோர் சமுதாயத் தலைவர்களும் இந்த பவர் பாலிடிக்ஸில் குதித்திருக்கிறார்களாம்.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், "தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது தென்தமிழகம் அவருக்கு முதலில் ஆதரவுக்கரம் நீட்டியது என்பதை மறப்பதற்கில்லை. 1973-ல் திண்டுக்கல் எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் முதன்முதலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார், ஆளும

அ.தி.மு.க.வின் அதிகாரம் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தான் இருக்கவேண்டும் என்று சில சமூகத்தினர் காய் நகர்த்தி வருவதால் சாதிய உரசல்கள் ஏற்படலாம் என்கிற பகீர் செய்திகள் சிறகடிக்கின்றன. குறிப்பாக கொங்கு கவுண்டர் சமுதாயத் தலைவர்களும், தென்தமிழகத்தின் முக்குலத்தோர் சமுதாயத் தலைவர்களும் இந்த பவர் பாலிடிக்ஸில் குதித்திருக்கிறார்களாம்.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், "தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது தென்தமிழகம் அவருக்கு முதலில் ஆதரவுக்கரம் நீட்டியது என்பதை மறப்பதற்கில்லை. 1973-ல் திண்டுக்கல் எம்.பி. தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அ.தி.மு.க. சார்பில் முதன்முதலில் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார், ஆளும்கட்சியான தி.மு.க.வை எதிர்த்து அப்போது அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்றது. இதனால் தென்மாவட்டங்களின் துணையோடு எம்.ஜி.ஆர். முதலில் கட்சியை வளர்த்தார். ஆனால் அது மட்டும்தான் அவரை ஆட்சியில் அமர வைத்ததா? கொங்குமண்டலமும்தான் அவரை உயர்த்திப் பிடித்தது. கொங்குமண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் கட்சியை வளர்த்தனர். எம்.ஜி.ஆர். காலத்தி லேயே அதில் இருந்த முக்குலத்தோரும் கொங்கு கவுண்டர்களும் உள்ளுக்குள் முட்டி மோதினார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்போதும் இருக்கிறது''’என்று முன்கதைச் சுருக்கம் சொன்னவர்...

Advertisment

eps-sasi

"ஜெயலலிதா மூலம் கட்சிக்குள் கள்ளர் சமூகத்தவரான சசிகலாவின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகரித்தது. ஜெ.’மறைவுக்குப் பின், சசிகலா உறவினர் ராவணன் மூலமாக அ.தி.மு.க.வில் கொங்கு லாபி அதிகரித்தது. ஈ.பி.எஸ். முதல்வரான பிறகு, கட்சியிலும் ஆட்சியிலும் கொங்கு கொடிதான் அதிகம் பறந்தது. இப்போது ஆட்சியில் அ.தி.மு.க, இல்லாதபோதும் கொங்கின் கைதான் ஓங்கியிருக்கிறது. இப்போது ஒற்றைத் தலைமை விவகாரத்திலும் கொங்கு சமூகம் எடப்பாடிக்கு ஆதரவாகவே இருக்கிறது. அப்படி இருக்க, பொதுக்குழு பலம் கூட இல்லாத ஓ.பி.எஸ்.ஸை முக்குலத்தோர் தூக்கிப்பிடிப்பதை எப்படி ஏற்பது?. அதனால் இரு தரப்புக்குமான விரிசல் அதிகமாகிறது''’என்றார் விரிவாகவே.

அ.தி.மு.க. மாநிலப் பொறுப்பில் இருந்த இன்னொரு பிரமுகரோ, "எடப்பாடிக்குக் கட்சியில் செல்வாக்கு இருந்த நிலையில், கொடநாடு விவகாரம் அவரது இமேஜையும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட பழைய நால்வர் அணியினர் மீதான இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டது. இந்த நிலையில் எடப்பாடித் தரப்பு கூட்டிய பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்டது, அவர் மீது கொஞ்சம் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் வன்னியர்கள் தரப்பும் அதிகார ஆசையில் இருக்கிறது''’என்றார்.

இது உண்மையா?

eps-ops

வடமாவட்ட வன்னியர் சமுதாய அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது “"வட மாவட்டங்களில் வன்னியர்களின் பேராதரவு பா.ம.க., தி.மு.க.வுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்குதான் இருக்கிறது. சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட எங்கள் சமூகப் பிரமுகர்கள், கடுமையாக கட்சிக்காக உழைத்துவருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி எங்கள் சமூகத்தினர் மீது கொஞ்சம் பரிவுகாட்டினார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு மட்டும் தனியே 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டைத் தந்தார். அப்போது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். இதை ஆதரிக்கவில்லை. அதேபோல் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த உதயகுமார், செல்லூர். ராஜு போன்றோரும் "வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு தந்தது தவறு' என்றனர். இதனால் வன்னியர்கள், முக்குலத் தோர் இடையே மனக் கசப்பு உருவானது. அந்த பிரச்சனையை தலைமைப் பதவிக்கு மோதும் இருவருமே தீர்க்கவில்லை. இந்நிலையில் எடப்பாடித் தரப்பு திட்டமிட்டே முக்குலத்தோரான ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக அ.தி.மு.க.வில் உள்ள வன்னியர் பிரமுகர்களைப் பேச வைக்கிறது. இருதரப் புக்கும் இடையில் மோதலை உண்டாக்கப் பார்க்கிறார்கள். வன்னிய சமூகத்தினர் முக்கிய பதவிகளை விரும்புவதில் என்ன தவறு?''” என்கிறார் அழுத்தமாக.

இப்படி அ.தி.மு.க.வில் புகைகிற சாதீய நெருப்பு குறித்து, உளவுத்துறை முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறதாம்.

nkn090722
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe