Advertisment

பைப் இருக்கு! கனெக்சன் இல்லை! வைரல் வீடியோவால் வழக்கு!

vv

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இந்திரவனம் கிராமம். இந்த பஞ்சாயத்தில் 550 வீடுகள் உள்ளன. இவற்றில் 104 வீடுகளுக்கு, ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட் டத்தின்கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கு வதற்கு ரூ.3.69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை சேத்பட் அன்பு எடுத்துள் ளார். குழாய் பைப் மற்றும் குழாய் பைப் நிற்பதற்கான சிமெண்ட் ஸ்டெம்ப் நட்டுள்ளனர். அதில் 35 இடங்களில் சரியாக பள்ளம் தோண்டாமல் மேம்போக்காக நட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இந்திரவனம் கிராமம். இந்த பஞ்சாயத்தில் 550 வீடுகள் உள்ளன. இவற்றில் 104 வீடுகளுக்கு, ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட் டத்தின்கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கு வதற்கு ரூ.3.69 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை சேத்பட் அன்பு எடுத்துள் ளார். குழாய் பைப் மற்றும் குழாய் பைப் நிற்பதற்கான சிமெண்ட் ஸ்டெம்ப் நட்டுள்ளனர். அதில் 35 இடங்களில் சரியாக பள்ளம் தோண்டாமல் மேம்போக்காக நட்டுள்ளனர். அந்த குழாய்களுக்கு மெயின் பைப்பிலிருந்து இணைப்பு தராததால் தண்ணீரும் வரவில்லை.

Advertisment

ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர், சேத்பட் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலையின் மருமகள் ராஜேஸ்வரி. இதுகுறித்து அவரிடம் முறையிட்டும், அவர் கண்டுக்கொள்ள வில்லையாம். இதனை அதே கிராமத்தைச் சேர்ந்த முரளிகிருஷ்ணா என்ற இளைஞர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டது வைரலானது. வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது காவல் நிலையத்தில் அதிகாரி கள் புகார் தந்ததோடு, ஆர்ப்பாட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

Advertisment

vv

இதுகுறித்து வீடியோ வெளியிட்ட முரளிகிருஷ்ணாவிடம் பேசியபோது, "நவம்பர் முதல் வாரம் வேலையைத் தொடங்கினாங்க. கையால் பள்ளம் எடுத்து, குழாய் ஸ்டெம்ப் நட்டு வைத்து பைப்பை சொருகிவைத்துவிட்டார்கள். குடிநீர் மெயின் பைப்போடு கனெக்சன் கூட தரவில்லை. இதுபற்றிக் கேட்டதற்கு, இப்படித்தான் செய்யச் சொன்னாங்கன்னு வேலை செய்தவங்க சொன்னாங்க. வேலை முடிஞ்சிடுச்சுன்னு போன வாரம் அறிவிப்பு எழுதி வச்சாங்க. அதுக்கப்புறம்தான் என் பேஸ்புக் பக்கத் துல லைவ் போட்டேன். வீடியோ வைரலானதும் அதிகாரிகள் வந்து பார்த்தாங்க. இப்படியா வேலை செய்வீங்கன்னு ஒப்பந்ததாரரிடம் கேட்டாங்க. இப்போ என்மேல புகார் தந்திருக்காங்க'' என்றார்.

இதுபற்றி சேத்பட் பி.டி.ஓ. ரேணுகோபாலிடம் கேட்டதற்கு, "பணிகள் நடந்துகொண்டு இருக்கும் போதே பணிகள் சரியாக நடக்கவில்லையென வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தவறு நடந்திருந்தால் எங்களிடம் புகார் சொல்லியிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது எப்படி சரியாகும்? அங்கு வேலை செய்தவர்களிடமும் தகராறு செய்துள்ளார். அதனாலயே புகார் தரப்பட்டுள்ளது'' என்றார்.

இதை அனுமதித்தால், ஊருக்கு ஊர் வீடியோ போடு வாங்க என்பதால்தான் அந்த இளைஞர் மீது புகாரளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஜல்ஜீவன் திட்டத்தில் மாவட்டம் முழு வதும் பெரும் ஊழல் நடந்துள்ளது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். குறைகளைச் சுட்டிக்காட்டும் பொதுமக்கள்மீது வழக்கு போட்டு மிரட்டுவது என்ன ஜனநாயகம்? எனக் கேட் கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-கிங்

nkn031222
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe