ந்தியாவின் லடாக் எல்லையில் சீனப் படை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் லடாக் எல்லையில் காலம்காலமாக ஆடு மாடுகளை மேய்த்து வாழும் ஏழு கிராம மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைக்கு ஆளாகியுள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

dd

இந்த ஏழு கிராமங்களில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையே 1100-க்குள் தான் இருக்கும். இவர்கள் அடிப்படையில் நாடோடிகள். கால்நடைகளின் மேய்ச்சலை மையமாகக் கொண்டே இவர்களின் வாழ்க்கை இருக்கும். ஆடுகள், யாக்குகள் மேய்ப்பதும், அவற்றின் பால், இறைச்சி, ஆடுகளின் ரோமங்கள்தான் அவர்களது பிரதான வருவாய். ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து, இந்திய வீரர்களின் உயிர்ப்பலியில் முடிந்த எல்லை விவகாரம் இனி யும் தீர்வதுபோல தெரியவில்லை. இரு தரப்பும் கட்டுமானங்கள் அமைப்பதிலும், விவசாயப் பணி களிலும் ஆர்வம்காட்டுகின்றனர். பிரச்சனையும் அண்மையில் தீர்வதாய்த் தெரியவில்லை.

""எங்களின் மேய்ச்சல் நிலங்கள் இப்பகுதியில்தான் உள்ளன. அதுவும் குறிப்பாய் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளான பகுதியில்தான் நாங்கள் மேய்த்துக் கொண்டிருந்தோம். இனிமேல் இவற்றுக்கான மேய்ச்சல் நிலத்தை எங்கேபோய்த் தேடுவதெனத் தெரியவில்லை'' என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

Advertisment

லடாக் நாடோடிகளுக்கு சீன ஆக்ரமிப்பு என்றால், ஜம்மு காஷ்மீரின் நாடோடி மேய்ப்பர் இனமான பக்கர்வால்களுக்கு கொரோனா கெடுபிடிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பக்கர்வால் என்றால் தெரியாதவர்கள்கூட பாலியல் கொடுமைக்கு ஆளான கத்துவா சிறுமியை ஞாபகம் வைத்திருப்பார்கள்.

2018 ஜனவரியில், மேய்ச்சலுக்காக ஜம்மு காஷ்மீரின் கத்துவா கிராமத்துக்கு வந்த பக்கர்வால் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எட்டுப் பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட் டது தேசிய அளவில் கவனத்துக்கு உள்ளானது. இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதுபோல் கோடையில் ஜம்மு காஷ்மீர் சுற்றுவட்டாரத்திலும் குளிர் காலத்தில் ரசௌரி மாவட்டத் திலும் கால்நடைகளை மேய்த் துப் பிழைப்பவர்கள்.

கொரோனா ஊரடங்கால் கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருப்பதால், ஜம்மு- காஷ்மீர் சுற்று வட்டாரத்திலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு தங்கள் கால்நடைகளை ஓட்டிச்செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஏற்கெனவே கொரோனாவால் ஆடுகளை ஏற்றிவர ட்ரக் கிடைக்காமல் 400 கிலோமீட்டர்கள் சவாலான பாதையில் ஆடுகளை ஓட்டிவந்தி ருக்கிறார்கள்.

Advertisment

இப்போதே கிட்டத்தட்ட ஒருமாத காலம் தாமதமாகி விட்டது. இனியும் ஏற்படும் தாமதம் கால்நடைகளுக்கு போதிய உணவின்றி, ஊட்ட மின்றி நட்டத்தைச் சந்திப்பது தான். கால்நடைகள் வயிற்றுக்கின்றி எடை குறைவானாலோ, இறந்தாலோ பக்கர்வால் இனத் தினரின் பட்டினிக்கும் அழிவுக் கும்தான் இட்டுச்செல்லும்.

ஏற்கெனவே ஊரடங்கால் கால்நடை மருத்துவர்கள், மருந்துகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேய்ச்சலுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் எங்களுக்குப் பேரழிவுதான் என்கிறார்கள் இந்த நாடோடி மேய்ப்பர்கள்.

-க.சுப்பிரமணியன்