Advertisment

பாராட்டக்கூட யாருமில்லை -தி.மு.க. நிர்வாகிகள் புலம்பல்!

dmk

ம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கலைஞரின் 96-ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் மாவட் டம் தோறும் தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்கூட்டங்கள் நடந்தன.

Advertisment

dmk

சீறலும் புலம்பலும் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. கூட் டத்தில் வெளிப்பட்டன. ஜோலார் பேட் டையில் உள்ள கட்சி அலுவல கத்தில் மா.செ.முத்தமிழ்ச் செல்வி தலைமையில் நடந்த கூட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை உள்ள

ம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கலைஞரின் 96-ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் மாவட் டம் தோறும் தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்கூட்டங்கள் நடந்தன.

Advertisment

dmk

சீறலும் புலம்பலும் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. கூட் டத்தில் வெளிப்பட்டன. ஜோலார் பேட் டையில் உள்ள கட்சி அலுவல கத்தில் மா.செ.முத்தமிழ்ச் செல்வி தலைமையில் நடந்த கூட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை உள்ளடக்கிய கிளைக்கழக நிர்வாகி கள் முதல் ஒன்றிய, நகர், பேரூர் நிர்வாகிகள்வரை கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூர் ந.செ. ராஜேந்திரன்,’’""தேர்தல் வெற்றிக்காக கடுமையா உழைக்கிறோம். காசு, பணம் கொடுக்க வேணாம், மனசார பாராட்டக்கூட யாருமில்லை. உழைப்பவனை ஊக்கப்படுத்த யாருமில்லை''’என வேதனையுடன் புலம்பியுள்ளார்.

Advertisment

இதுபற்றி தெரிந்துகொள்ள தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றிய நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, ""ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதும், கிழக்கு, மத்தி, மேற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட போதும், அனைத்து ஏரியாக்களுக்கும் அண்ணன் துரைமுரு கன் அடிக்கடி விசிட் அடித்து, கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்துவார். உழைப்பவர்களை உயர்த்தி விடுவார், வெளிப்படையா பாராட்டுவார். ஆனால் இப்ப அவரின் வருகை குறைஞ்சு போச்சு. அதே போல் ஒருங்கிணைந்த மா.செ.வாக இருந்த காந்தியும் கடந்த ஆறுமாச மாக எங்களை கண்டு கொள்ளவே யில்லை. திருவண்ணாமலை எம்.பி. தொகுதி, ஆம்பூர், சூலூர் எம்.எல்.ஏ. தொகுதிகளில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் களப்பணியாற்றினோம். இதுக்கெல்லாம் காசு பணத்தையா எதிர்பார்த்தோம். பொதுவெளியில் ஒரு பாராட்டு அவ்வளவுதான். ஆனா அதை செய்ய யாருக்கும் மனசு இல்ல. மற்ற மா.செ.க்களெல் லாம் அந்த மாவட்ட நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு சென்னை போய் தளபதியை சந்திக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்தினார்கள். ஆனா எங்க மா.செ.வுக்கு அப்படி ஒரு எண்ணமே வரவில்லை. பாராட்டத் தகுதியில்லாதவர்களா நாங்கள்?''’என ரொம்பவே பொருமினார்கள்.

அதே கூட்டத்தில் பேசிய மாஜி எம்.எல்.ஏ. சூர்யகுமார் உட்பட இதேபோல் புலம்பியதோடு, திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

மாவட்டத்தில் இருக்கும் பல நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, “""எங்க மா.செ. முத்தமிழ்ச் செல்வி பொருளாதார பலமில்லாதவர். அவரால் அமைச்சர் வீரமணியை எதிர்த்து அரசியல் பண்ண முடியவில்லை. கட்சியின் அடிமட்டத் தொண்டர் களையும் அரவணைத்துச் செல்லத் தெரியவில்லை. இதையெல்லாம் தலைமைதான் சரிப்படுத்தணும்'' என்கிறார்கள்.

-து.ராஜா

nkn110619
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe