Advertisment

இயற்கைக்கும் இரக்கம் இல்லை! தமிழர்களின் கல்லறையான மூணாறு!

dd

"தன்னை நம்பிவந்த தொழிலாளர்களை ஆபத்தான இடத்தில் தங்கவைத்துக் கொடூரமாகக் கொன்றுவிட்டது டாடா கம்பெனி''’-என இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு குமுறுகிறார்கள் பசுமை சூழ்ந்த மூணாறு வாழ் தமிழர்கள்.

Advertisment

33

தரையிலிருந்து சுமார் 12 ஆயிரத்து 500 அடி உயரத்திலிருக்கிறது போடி மெட்டு. அங்கிருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் இரவிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது ராஜமலை தேயிலை எஸ்டேட். அதன் அருகிலேயே 500 மீட்டர் சரிவில், பெட்டிமுடி எஸ்டேட் அமைந்திருக்கிறது. இவை டாடா நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்த தேயிலை எஸ்டேட்டுகள் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கிடுகிடு நிலச்சரிவில், ஒட்டு மொத்தமாக புதை யுண்டு போய்விட்டன.

Advertisment

நெல்லை, தூத்துக் குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1

"தன்னை நம்பிவந்த தொழிலாளர்களை ஆபத்தான இடத்தில் தங்கவைத்துக் கொடூரமாகக் கொன்றுவிட்டது டாடா கம்பெனி''’-என இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு குமுறுகிறார்கள் பசுமை சூழ்ந்த மூணாறு வாழ் தமிழர்கள்.

Advertisment

33

தரையிலிருந்து சுமார் 12 ஆயிரத்து 500 அடி உயரத்திலிருக்கிறது போடி மெட்டு. அங்கிருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் இரவிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது ராஜமலை தேயிலை எஸ்டேட். அதன் அருகிலேயே 500 மீட்டர் சரிவில், பெட்டிமுடி எஸ்டேட் அமைந்திருக்கிறது. இவை டாடா நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்த தேயிலை எஸ்டேட்டுகள் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கிடுகிடு நிலச்சரிவில், ஒட்டு மொத்தமாக புதை யுண்டு போய்விட்டன.

Advertisment

நெல்லை, தூத்துக் குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 130-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 80 வருடங்களுக்கு முன்பிருந்தே இரண்டு மூன்று தலைமுறையாக இந்த எஸ்டேட்டுகளில் வேலைபார்த்து வருகின்றனர். எஸ்டேட் அருகிலேயே, அடிவாரக் குன்றின்மீது அடித்தளம் இல்லாமல் சுவரெழுப்பி போடப்பட்ட தகர ஷெட்டுகளே அவர்களுக் கான குடியிருப்புகள்.

டாடாவின் பிடியில் இருக்கும் பிற எஸ்டேட்டுகளிலும் இதே லட்சணம்தான். இவர்களுக்கெல்லாம் பெரிய சதுர வடிவிலான தண்ணீர் டேங்குகளையும் முறையான பேஸ்மட்டம் இல்லாமல் உயரத்திலேயே அமைத்திருக்கிறது டாடா. மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர், வடிய வாய்ப்பில்லாமல், தோட்ட மண்ணிலேயே இறங்கி அதன் நிலப்பகுதியை வெகுவாக இளக்கியபடியே இருக்கும். ஆண்டாண்டு காலமாக "கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலையிலேயே வாழ்ந்திருக் கிறார்கள் எஸ்டேட் தொழி லாளர்கள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் திடீரென வானமே பிளந்து கொண்டது போன்ற ஓசையுடன், மலைப் பகுதி பாளம் பாளமாக சரியத் தொடங்கி, 20 அடிக்குக் கீழே இருந்த குடியிருப்புகளின் மீது அப்படியே விழுந்து நசுக்கியது. அதில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு என்ன நேர்கிறது என்பதைக்கூட உணரமுடியாதவர்களாய், துடிதுடித்து மண்ணில் புதைந்து விட்டனர். மேலும், பெரிய பெரிய பாறாங்கற்களும் சரிந்து விழ, போதாக்குறைக்கு, ராஜமலையில் அமைக்கப்பட்ட ராட்சத தண்ணீர் டேங்க்கும் அடியோடு சாய்ந்து, தண்ணீரோடு அந்தக் குடியிருப்புகளின் மேல் விழுந்து, ஏற்கனவே புதைந்து போயிருந்த மக்களை சின்னா பின்னமாக்கிவிட்டது. மொத்த விபரீதமும் ஒரு சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்து விட்டன.

ஒரு சிலரின் உடல், அப்போதைய அதிர்வில் 5 கி.மீ தொலைவிலுள்ள மாங்குளம் பகுதி வரை தூக்கி வீசப்பட்டுக் கிடந்தன. சிலரின் உடல் பள்ளத்தில் பெருக்கெடுத்த ஓடிய ஆற்றிலும் தூக்கி வீசப்பட்டது கொடூரத்தின் உச்சம். இந்த விபரீதத்தில் ஒரு சிலர் தப்பினாலும், 98 சதவீதம் பேர் உயிரோடு ஜீவசமாதி ஆக்கப் பட்டுவிட்டனர்.

33

தூத்துக்குடி மாவட்ட கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம், தவசியம்மாள், மவுனிகா, முருகன், மணிகண்டன் என்று 18 பேர்கள் இந்த விப ரீதத்தில் உயிரிழந்திருக்கிறார் கள். இந்தப்பகுதியில் இருந்து எஸ்டேட் பகுதிக்குச் சென்ற மேலும் 55 பேரின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை. .இதேபோல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ராஜமலை எஸ்டேட்டில் 4 வரிசைகள் கொண்ட 20 தொகுப்பு வீடுகளில் தங்கியிருந்தனர். அவர்களும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

சங்கரன்கோவில் அருகிலுள்ள புதுக்கிராமத்திலிருந்து எஸ்டேட் வேலைக்கு சென்றவர்களில் அண்ணாத்துரை என்பவர் குடும்பத்துடன் புதைந்துபோய்விட்டார். அண்ணாதுரையின் உறவினரான ரவியோ, ""பெட்டிமுடி எஸ்டேட்டுக்குப் போன 15 பேர்களில் எனது சகலை அண்ணாத் துரையின் குடும்பமும் ஒன்று. அவர்களில் மூன்று பேர் சடலங்கள் மட்டுமே கிடைச்சிருக்காம். இங்கிருந்து விருந்தாடியாப் போன சொந்தக் காரங்க 12 பேர் நிலைமையும் என்னன்னு தெரியல. நாங்க செய்தி கேட்டு அலறியடிச்சிக்கிட்டு போனோம். ஆனால் மூணாறில் வழிமறிச்ச கேரள போலீஸ், இ-பாஸ் எங்கேன்னு கேட்டு எங்களைத் திருப்பியனுப் பிடுச்சு'' என்று தேம்புகிறார்.

11-ந் தேதி காலை வரை 50 சடலங்கள் மீட்கப்பட்டி ருக்கின்றன. அங்கே தோண்டத் தோண்ட குழந்தைகளும், பெண் களும், ஆண்களும் மண்பூச்சுடன் வெளியே வந்துகொண்டே இருக்கிறார்கள்.

மூணாறு மலைப் பிராந்தியம் கண்ணீரில் நனைந் திருக்கிறது.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

nkn150820
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe