சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட குடிசைவாழ் மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் அரசு ஒதுக்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இப்படியாக அங்கே 10 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இத்தனை பேர் வசிக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலை யம் மட்டுமே உள்ளது. மருத்துவர்கள் வராத நிலையில் அதுவும் செயல்படாமல் உள்ளது. ஆனால், இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் எண் ணிக்கை 7 பேர் என்றும், அனைவருமே தினமும் வருவதாகவும், இங்கு மருத்துவம் பார்க்கப்படுவ தாகவும், மாதச் சம்பளம் வருகிறது என்றும் ஆர்.டி.ஐ. தகவல் சொல்கிறது. இப்பகுதி மக்கள் சொல்லும் தகவல் என்னவென்றால்... "அவர்கள் வருவதே இல்லை'’என்பதுதான்.

hh

""ஆபத்துக்காலங்களில் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு போகலாம் என்று பார்த்தால், அருகில் இருப்பது குளோபல், அப்போலோ, செட்டிநாடு என உயர்ரக மருத்துவமனைகள்தான். ஏழை-எளிய மக்கள் அங்கே மருத்துவம் பார்க்க முடியாத நிலையில், அரசு பொது மருத்துவ மனைக்குச் செல்லவேண்டுமானால் செம்மஞ்சேரி யில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்குத்தான் வர வேண்டும். இந்த அவலநிலையில், சரிவர சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் சென்ற ஆண்டில் மட்டும் ஏராளமான குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் எப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் நிற்கவேண்டியது அவசியம். ஆனால் அழைத்தும் கூட அது எப்போதும் வருவதே இல்லை. ’அவசரத்திற்கு 108-க்கு கால் செய்தாலும் கூட இறந்தபிறகு வந்து தூக்கிப்போய் போஸ்ட்மார்ட்டம் செய்யத்தான் வருகிறது''’ என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக பொதுநல வழக்கு தொடுத்திருக்கும் வெற்றி என்பவர் நம்மிடம் பேசுகையில், ""இந்த மக்கள் சென்னை நகரில் இருந்தவரையிலும் ராஜீவ்காந்தி, ஸ்டேன்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது செம்மஞ்சேரி பெரும்பாக்கம், கண்ணகி நகரில் வசிப்பதால் அவசர சிகிச்சை என்றாலும் 25 கிலோமீட்டர் தாண்டித்தான் அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். சோழிங்கநல்லூர் பகுதியில் பொது மருத்துவ மனை அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு வசதி யாக இருக்கும். ஒரு தாலுகாவிற்கு ஒரு அரசு பொது மருத்துவமனை என அரசு கொள்கையாக இருக்கும்பட்சத்தில், 15 கிலோமீட்டர் தொலைவில் அரசு பொது மருத்துமனை இருக்கவேண்டும் என்ற நிலையில் அரசு ஏன் செவிசாய்க்க மறுக்கிறது''’என்றார்.

Advertisment

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாம் கேட்டபோது, ’’""நிச்சயமாக இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரிடமும் இதைப் பற்றி பேசி அதற்கான பணியை நாங்கள் தொடங்கு வோம்''’என்றார் உறுதியான குரலில்.

-அ.அருண்பாண்டியன்